உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பெக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பெக்டர்
ஜேம்ஸ் பாண்ட் துப்பாக்கியுடன் நிற்கிறார். இங்கிலாந்தில் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாம் மெண்டெசு
தயாரிப்புமைக்கேல் ஜி. வில்சன்
பார்பரா ப்ரோக்கோலி
இசைதாமஸ் நியூமன்
நடிப்புடேனியல் கிரெய்க், மோனிக்கா பெலூச்சி
ஒளிப்பதிவுஹொயிட் வேன் ஹொய்டெமா
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
வெளியீடுஅக்டோபர் 26, 2015 (2015-10-26)(ஐக்கிய இராச்சியம்)
6 நவம்பர் 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்148 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$245–300 மில்லியன்
மொத்த வருவாய்$880.7 மில்லியன்[3]
முன்னர்ஸ்கைஃபால்

ஸ்பெக்டர் (ஆங்கில மொழி: Spectre) என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 24 வது படம் ஆகும். மெட்ரோ கோல்ட்வின் மேயர், இயான் புரொடக்சன்சு மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிகர் டேனியல் கிரெய்க் என்பவர் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் சாம் மெண்டெசு என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆக்கச்செலவு 245–300 மில்லியன் டாலர் ஆகும். ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக தயாரிப்புச் செலவு கொண்ட படம் இந்த படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை

[தொகு]

இம்முறை ஜேம்ஸ் பாண்ட், ஸ்பெக்டர் எனப்படும் உலகளாவிய குற்றவியல் கூட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார். ஸ்பெக்டர் என்ப்படும் அமைப்பு உலகளாவிய கடுங்கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க முனைகிறது. அதனை கண்டறிந்து எப்படி ஜேம்ஸ் பாண்ட் அதனை முறியடிக்கிறார், அதற்காக அவர் என்னென்ன போராட்டங்களை செய்தார் என்பது தான் கதை. ஜேம்ஸ் பாண்டு படங்களில் பொதுவாக வரும் கதாபாத்திரங்களான 'எம்', 'மணிப்பெண்ணி' முதலிய கதாபாத்திரங்கள் இப்படங்களிலும் இடம் பெற்றுள்ளது.

படப்பிடிப்பு

[தொகு]
மெக்ஸிகோவில் படமாக்கப் பட்டபோது

ஸ்பெக்டர்  டிசம்பர் 2014 முதல் ஜூலை 2015 வரை ஆஸ்திரியா, ஐக்கிய ராஜ்யம், இத்தாலி, மொரோக்கோ மற்றும் மெக்ஸிக்கோவில் படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிகளை மிக அதிகமான செலவில் தயாரிக்கப்பட்டள்ளது இப்படம். சண்டை காட்சிகளில் வரும் கணினி வரைகலை பணிகளை ஐந்து நிறுவனங்கள் சேர்ந்து செய்தது. அனைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல் இப்படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் ஆஸ்டன் மார்டின் போன்ற பல உயர் ரக தானுந்தை ஒட்டி வருகிறார். ஸ்பெக்டர் படத்தில் மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் பிரமாண்டமான வெடி விபத்துக் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சி உலக சினிமாக்களிலேயே மிகப் பெரிதான, நீளமான வெடிப்புக் காட்சி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.[4]

படத்தில் வரும் தானுந்து
ஜேம்ஸ் பாண்ட் இப்படத்தில் ஓட்டும் அஸ்டன் மார்ட்டின் தானுந்து
படத்தில் வரும் தானுந்து

வெளியீடு

[தொகு]
டேனியல் கிரேக், தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி, Naomie ஹாரிஸ் மற்றும் கிறிஸ்டோப் வால்ட்ஸ்  பெர்லினில் ஸ்பெக்டர் படத்தின் சிறப்பு திரையோட்டத்தின் போது.

ஸ்பெக்டர் 26 அக்டோபர் 2015 இல் ஐக்கிய ராஜ்யத்தில் வெளியானது. பிறகு 6 நவம்பர் 2015 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியானது. தன்டர்பால் என்ற படம் வெளியான ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

[தொகு]
  • டேனியல் கிரெய்க்  ஜேம்ஸ் பாண்ட், முகவர் 007 ஆக நடித்துள்ளார்.
  • மோனிக்கா பெலூச்சி பாண்ட் பெண்ணாக. தனது ஐம்பதாவது வயது வயதில் இப்படத்தில் நடித்த இவர், பாண்ட் பெண்ணாக நடித்தவர்களிலேயே மிகவும் வயதானவர் என்ற பெயரை எடுத்தார்.
 50வது வயதில் மோனிகா பெலூஸி மிகவும் வயதான பாண்ட் பெண்.

இசை மற்றும் ஒலிப்பதிவு

[தொகு]

தாமஸ் நியூமன் ஸ்பெக்டரின் இசையமைப்பாளராக பணியாற்றினார். இவர் ஏற்கனவே வேறு ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இசையமைப்பு செய்துள்ளார். இப்படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு 88ஆவது அகாதமி விருதுகள் விழாவில் சிறந்த அசல் பாடல் பிரிவில் விருதை வென்றது. மேலும் சிறந்த அசலான பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது.

வரவேற்பு

[தொகு]

படம் வெளயான பிறகு வர்தக ரீதியாக வெற்றிபெற்றது. 2015 இல் வெளியான படங்களில் அதிகமான வசூலைப் பெற்ற படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றது. உலக அளவில் 880.7 மில்லியன் டாலர்களை இப்படம் வசூல் செய்தது. 135.5 மில்லியன் டாலர்கள் ஐக்கிய இராச்சியத்திலும் 200 மில்லியன் டாலர் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வசூல் செய்தது. உலக அளவில் ஸ்கைஃபால் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த ஜேம்ஸ்பாண்ட் படம் இதுதான்.

இப்படத்தை விமர்சனம் செய்த சினிமா விகடன், "படம் சுமார் என முன்னாள் பாண்டான 'பியர்ஸ் ப்ராஸ்னன்'னே' கருத்து தெரிவித்து இருந்தாலும், பாண்ட் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்." என்று குறிப்பிட்டது.[5] படத்தை விமர்சனம் செய்த மாலை மலர், "முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் ப்ராஸ்னன் படம் பரவாயில்ல ரகம்தான் என்று சொன்னாலும், இதை விட்டால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாக இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்பதால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் படத்தை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்." என்று குறிப்பிட்டது.<ref name="மாலை">

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Spectre (12A)". British Board of Film Classification. 21 October 2015. Archived from the original on 5 November 2015. Retrieved 21 October 2015.
  2. "SPECTRE (2015)". British Film Institute. Archived from the original on 7 May 2016. Retrieved 29 May 2016.
  3. "Spectre (2015)". Box Office Mojo. Archived from the original on 19 April 2016. Retrieved 21 April 2016.
  4. "ஸ்பெக்டர்". மாலை மலர். 20 நவம்பர் 2015. Retrieved 31 மே 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. கார்த்திகேயன்.கே.ஜி (19 நவம்பர் 2015). "ஜேம்ஸ் பாண்ட் படம்.. முன்னாள் ஜேம்ஸ் பாண்டுக்குப் பிடிக்கலையாம்.. உங்களுக்குப் பிடிக்குமா? 'ஸ்பெக்டர்' படம் எப்படி?". சினிமா விகடன். Retrieved 31 மே 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பெக்டர்&oldid=4161021" இலிருந்து மீள்விக்கப்பட்டது