ஸ்ட்ரெய்ட் தீவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°12′54″N 92°55′48″E / 12.215°N 92.930°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 2.87 km2 (1.11 sq mi) |
நீளம் | 3.2 km (1.99 mi) |
அகலம் | 1.5 km (0.93 mi) |
கரையோரம் | 8.7 km (5.41 mi) |
உயர்ந்த ஏற்றம் | 27 m (89 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 39 |
அடர்த்தி | 13.59 /km2 (35.2 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744203[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ஐ.எசு.ஓ குறியீடு | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ஸ்ட்ரெய்ட் தீவு (Strait Island) என்பது அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [5] இத்தீவு போர்ட் பிளேரிலிருந்து 63 km (39 mi) வடக்கே அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]ஸ்ட்ரெய்ட் தீவானது பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட தீவாகும். இது அந்தமான் தீவுகளின் பூர்வ குடி மக்களில் ஒரு இனத்தவரான பெரிய அந்தமானியர்களைக் குடியேற்றி அவர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். இது அந்தமான் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானிய மக்களின் குடியேற்ற குடியிருப்பான இது இந்தியாவில் ஒரு மாதிரி கிராமம் போல கட்டப்பட்டுள்ளது. பெரிய அந்தமானிய மக்களின் குடியேற்றமானது வரிசையாக அமைந்த பைஞ்சுதை வீடுகளாக கட்டப்பட்டுள்ளது. தீவின் இன்னொரு பாதியில் நலன்புரி பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான குடியிருப்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புக்கு ஒரு சிறிய மருந்தகம் உள்ளது. தீவின் மிக உயரமான மலையின் உச்சியில் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. [6]
நிலவியல்
[தொகு]ஸ்ட்ரெய்ட் தீவு என்பது கிரேட் அந்தமனின் பரட்டாங்கு தீவுக்கு கிழக்கே 6 கி.மீ (4 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும், இது ரிச்சியின் தீவுக்கூட்டத்திலிருந்து பெரிய அந்தமானை ஒரு நீரிணையால் பிரிக்கிறது. இந்த தீவு கிழக்கு பராட்டாங் தீவுக் குழுவைச் சேர்ந்தது மற்றும் இது கோல்ப்ரூக் தீவுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இத்தீவு காற்புள்ளி வடிவத்திலுள்ளது, மேலும் இது அதிக காடுகள் கொண்டதாக உள்ளது.
விலங்குகள்
[தொகு]ஸ்ட்ரெய்ட் தீவு பறவைகளின் கூடுகள் கொண்ட குகைகள் மற்றும் ஏராளமான மான்களுக்கும் பெயர் பெற்றது (தற்போது இவை அரிதாக இருந்தாலும்).
பொருளாதாரம்
[தொகு]தென்னை, புளி, மா மரங்கள் வளர்த்தல் போன்றவை இந்த கிராம மக்களின் தொழில்கள்.
நிர்வாகம்
[தொகு]நிர்வாக ரீதியாக, ஸ்ட்ரெய்ட் தீவு, அண்டையில் உள்ள கிழக்கு பராடாங் தீவுக் குழுக்களுடன், ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாக உள்ளது. [7]
புள்ளிவிவரங்கள்
[தொகு]இந்த்த் தீவில் ஒரு கிராமம் மட்டுமே உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த பழங்குடி கிராமத்தின் மக்கள் தொகை 39 (இவர்களில் 26 ஆண்கள்) ஆகும். இவர்கள் 15 வீடுகளில் வசித்து வருகின்றனர். [8]
போக்குவரத்து
[தொகு]போர்ட் பிளேர் துறைமுகத்திலிருந்து, இரு வாராந்திர படகு சேவைகள் உள்ளன. இது மட்டுமே இங்கு செல்லும் வழியாகும்.
பட தொகுப்பு
[தொகு]-
அந்தமான் தீவுகளுக்குள் சிவப்பு நிறத்தில் சுட்டப்பட்ட ஸ்ட்ரெய்ட் தீவு அமைந்துள்ள இடம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. Retrieved 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. Retrieved 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2020-03-18.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ "Government of India, Directorate General of Lighthouses and Lightships". www.dgll.nic.in. Retrieved 2016-10-18.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. Retrieved 2016-09-23.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands