உள்ளடக்கத்துக்குச் செல்

வேள்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேள்பகுதி (principality, princedom) ஓர் இளவரசர் அல்லது இளவரசியால் ஆளப்படும் நாடாகும். Principalities were common in the நடுக்கால ஐரோப்பாவில் இத்தகைய வேள்பகுதிகள் வழமையானவையாக இருந்தன. இன்று வரை நிலைத்திருக்கும் சில வேள்பகுதிகள்: அந்தோரா, மொனாக்கோ, லீக்கின்ஸ்டைன். நாட்டின் கீழமைந்த வேள்பகுதிகளுக்கு காட்டாக ஆதூரியா (எசுப்பானியா), வேல்ஸ் (ஐக்கிய இராச்சியம்) போன்றவற்றைக் கூறலாம்.

சில நாடுகள் தங்களை வேள்பகுதிகள் என அறிவித்துக் கொண்டாலும் அவற்றை பிற நாடுகள் ஏற்கவில்லை: சீலாந்து (ஆங்கிலக் கடலோரத்திலுள்ள ஓர் கடற்கோட்டை), செபோர்கா (இத்தாலியிலுள்ள நகரம்), ஆத்திரேலியாவின் ஹூத் ஆற்று வேள்பகுதி, அமைதிப் பெருங்கடலிலுள்ள மினர்வா வேள்பகுதி. இவை நுண் நாடுகளுக்கான காட்டாகவும் விளங்குகின்றன.

சில நேரங்களில் இச்சொல் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா]], முன்-கொலம்பியக் காலம், ஓசியானியா பகுதிகளில் சார்ந்துள்ள ஆள்பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேள்பகுதி&oldid=2553464" இலிருந்து மீள்விக்கப்பட்டது