வினோத் குமார் பிந்த்
வினோத் குமார் பிந்த் | |
---|---|
மருத்துவர் வினோத் பிந்த் | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | இரமேஷ் சந்த் பிந்த் |
தொகுதி | பாதோகி |
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேசம் | |
பதவியில் மார்ச்சு 2022 – சூன் 2024 | |
தொகுதி | மஜவான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உத்தரப் பிரதேசம், இந்தியா[1] |
தேசியம் | இந்தியர்[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி[1] |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி (2022–present) |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம்[1] |
வேலை | மருத்துவர்[1] |
தொழில் | அரசியல்வாதி[1] |
வினோத் குமார் பிந்த் (Vinod Kumar Bind) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், மருத்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[2][1] இவர் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பாதோகி மக்களவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினர் ஆவார்.[3]
இளமை
[தொகு]வினோத் குமார் பிந்த் 1974ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் சச்சனு ராம் குடும்பத்தில் பிறந்தார்.[1] அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் படிப்பினை முடித்துள்ளார்.[4]
தொழில்
[தொகு]2022 தேர்தலில் கியான்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடச் சமாஜ்வாதி கட்சியிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு இது நிராகரிக்கப்பட்டது. இதன்பிறகு, இவர் நிசாத் கட்சியில் சேர்ந்து மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள மஜவான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[5]
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வினோத் குமார் பிந்து, பாதோகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[5]
வகித்தப் பதவிகள்
[தொகு]# | முதல் | வரை | பதவி | கருத்துக்கள் |
---|---|---|---|---|
01 | 2022 | 2024 | மஜவான்-சட்டமன்ற உறுப்பினர், 18வது சட்டமன்றம் | நிசாத் கட்சி |
02 | 2024 | பதவியில் | பதோகி மக்களவைத் தொகுதி உறுப்பினர்-18ஆவது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Dr. Vinod Kumar Bind, NISHAD MLA from Majhawan – Our Neta". ourneta.com.
- ↑ "Dr. Vinod Kumar Bind-डॉ. विनोद कुमार बिंद Nirbal-indian-shoshit-hamara-aam-dal Candidate Majhawan Election Result 2022". Amar Ujala.
- ↑ "Dr. Vinod Kumar Bind". prsindia.org.
- ↑ "Dr. Vinod Kumar Bind(Nirbal Indian Shoshit Hamara Aam Dal):Constituency- MAJHAWAN(MIRZAPUR) – Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ 5.0 5.1 Patel, Priya. "Vinod Kumar Bind was nominated by the Bharatiya Janata Party to represent Bhadohi in the Lok Sabha Elections 2024". Bru Times News (in ஆங்கிலம்).