விஜய் பாகல்
விஜய் பாகல் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
தொகுதி | துர்க், சத்தீசுகர் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 23 மே 2019 – 2024 | |
முன்னையவர் | தாம்ராத்வாஜ் சாகு |
தொகுதி | துர்க், சத்தீசுகர் |
சட்டமன்ற உறுப்பினர்-சத்தீசுகர்-பதான் | |
பதவியில் 8 திசம்பர் 2008 – 8 திசம்பர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1959 உர்லா, தர்க், மத்தியப் பிரதேசம், இந்தியா (தற்பொழுது சத்தீசுகர், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ரஜனி பாகல் |
பிள்ளைகள் | சவுரப்-மகன் & பிரகதிக்சா-மகள் |
பெற்றோர் | நம்முல்லால் பாகல் (தந்தை), சத்யபாமா பாகல் (தாய்) |
வாழிடம் | பிலாய், சத்திசுகர், இந்தியா |
தொழில் | அரசியல், விவசாயம் |
மூலம்: [1] |
விஜய் பாகல் (Vijay Baghel)(பிறப்பு: ஆகத்து 15, 1959) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் துர்க் மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]பாகேல் முதன்முதலில் பிலாய் நகரசபைக்கு 2000ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2003 சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பதான் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தப் போட்டியில் பூபேஷ் பாகலிடம் தோல்வியடைந்தார். மீண்டும், 2008 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு , பூபேஷ் பாகலை 7,842 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று உள்துறை அமைச்சர் நன்கி ராம் கன்வாரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனார்.[3] மீண்டும், விஜய் 2013 சட்டமன்றத் தேர்தலில் பூபேஷ் பாகலை எதிர்த்துப் போட்டியிட்டார், ஆனால் இம்முறை தோல்வியடைந்தார். பின்னர் 2019 பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இந்தியத் தேசிய காங்கிரசின் பிராதிமா சந்திராகருக்கு எதிராக துர்க் தொகுதியில் போட்டியிட்டு 3,91,978 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ "Dropping all MPs pays off for Shah". Rajendra Sharma. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 June 2019. Retrieved 17 March 2020.
- ↑ http://cgvidhansabha.gov.in/hindi_new/satra/third_assembly/3RD_ASSEMBLY.pdf