துர்க் மாவட்டம்
Appearance
துர்க் மாவட்டம் | |
---|---|
சத்தீசுகரில் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
கோட்டம் | துர்க் |
தலைமையகம் | துர்க் |
வட்டங்கள் | 3 |
அரசு | |
• மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,238 km2 (864 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,21,948 |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
முக்கிய நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 53 (புதிய எண்) (பழைய எண் தேசிய நெடுஞ்சாலை 6) |
இணையதளம் | durg |
துர்க் மாவட்டம் இந்தியாவின் சத்தீசுகரில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். மாவட்டத் தலைமையகம் துர்க் ஆகும். இந்த மாவட்டம் 2,238 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது சத்தீசுகரின் (18 இல்) ராய்பூருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டமாகும்.[1]
பிலாய் நகரில் பிலாய் எஃகு ஆலை உள்ளது.
புவியியல்
[தொகு]துர்க் பின்வரும் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது:
- வடக்கே பெமேதரா
- தெற்கே பலோட்.
- கிழக்கே ராய்ப்பூர்.
- தென்கிழக்கில் தம்தரி
- மேற்கில் ராஜ்நாந்துகாவ்
- வடமேற்கே கைராகர்-சுய்காடன்-கண்டாய்
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்ட போது, 3,343,079 மக்கள் வாழ்ந்தனர். [2] சராசரியாக சதுரகிலோமீட்டருக்குள் 391 பேர் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு 981 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் இருந்தது. [2] இங்கு வாழ்ந்தோரில் 79.69% பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ "District Census Handbook: Durg" (PDF). censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]