விஜயகரிசல்குளம்
விஜயகரிசல்குளம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் தீப்பெட்டி உற்பத்தியை குடிசைத்தொழிலாக செய்கின்றனர்.
அமைவிடம்[தொகு]
விஜயகரிசல்குளம், மாவட்டத் தலைமையிடமான விருதுநகரிலிருந்து தென்மேற்கே 42.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; தாலுகா தலைமையிடமான வெம்பக்கோட்டைக்கு வடகிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, விஜயகரிசல்குளம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,981 ஆகும். அதில் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் 298 ஆக உள்ளனர்.[1]
தொல்லியல் அகழாய்வு[தொகு]
விஜயகரிசல்குளத்தில் தமிழ்நாடு அரசு அரசின் தொல்லியல் துறை அகழாய்வு பணி மேற்கொண்டு வருகிறது. [2][3][4]மூன்றாம் கட்ட அகழாய்வின் போது சூன் 2024ல் சுடுமண்ணால் ஆன பெண் தலை பொம்மை கண்டெடுக்கப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vijayakarisalkulam Population - Virudhunagar, Tamil Nadu
- ↑ விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் காணொலி காட்சியில் துவக்க விழா
- ↑ விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலி கண்டெடுப்பு
- ↑ வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால தோசைக்கல்
- ↑ சுடுமண் பெண் தலை பொம்மை விஜயகரிசல்குளத்தில் கண்டெடுப்பு
- ↑ வெம்பக்கோட்டை அகழாய்வில் பெண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு