விக்கிப்பீடியா பேச்சு:நாளிதழ் செய்தி மாதிரி
விக்கிப்பீடியர்கள் பற்றி சரியான விவரம் தேவை
[தொகு]ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் என் விக்கிப்பீடியா பங்களிப்புகளைப் பற்றி ஒரு வார இதழில் எழுதப் போவதாகவும் விவரங்கள் வேண்டும் என்றும் குறிப்பிடிருந்தார். நான் விக்கியில் நிறைய தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அதனால் அனைவரைப் பற்றியும் எழுதுங்கள் என்றேன். 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதியவர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என்று பிரித்து விவரம் தந்தால் நன்றாக இருக்கும். இனி வரும் நாளிதழ் செய்திகளில் தவறில்லாமல் எழுதுவதற்கு ஏற்ப சில தரவுகளை ஒரு விக்கிப் பக்கத்தில் சேர்த்துத் தந்தால் நலம்.
- விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள், படிமம்:Nuvola apps bookcase 1.svg#கோப்பு பயன்பாடு - பள்ளி மாணவர் பட்டியல் இங்குள்ளது.
இதைப் போல் தரவுகள் தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:23, 16 சனவரி 2014 (UTC)
1000 கட்டுரைகளை தாண்டியவர்கள்
[தொகு]எனக்குத் தெரிந்தவர்கள்
- ஸ்ரீதரன்
- நக்கீரன்
- செங்கைப் பொதுவன்
- மயூரநாதன்
- ஜெகதீஸ்வரன்
- மணியன்
- தமிழ்க்குரிசில்
- புண்ணியாமீன்
- தேனி மு. சுப்பிரமணி
- நிரோஜன் சக்திவேல்
- தமிழ்க்குரிசில்
பின்வருபவர்களில் யார் யார் 1000 கட்டுரைகளை தாண்டியுள்ளார்கள் எனத் தெரிய வேண்டும்.
- Booradleyp 323 கட்டுரைகள்
- Ksmuthukrishnan 205 கட்டுரைகள்
- Bpselvam 292 கட்டுரைகள்
- நிரோஜன் சக்திவேல் 2470 கட்டுரைகள் ஆம்
- Werklorum 677 கட்டுரைகள்
- Trengarasu
- Ravidreams 311 கட்டுரைகள்
- மதனாஹரன் 204 கட்டுரைகள்
- Inbamkumar86
- HK Arun 267 கட்டுரைகள்
- Moorthy26880 610 கட்டுரைகள்
- பரிதிமதி 195 கட்டுரைகள்
- Chandravathanaa 135 கட்டுரைகள்
- Vinodh.vinodh 144 கட்டுரைகள்
- Ragunathanp 322 கட்டுரைகள்
- TRYPPN 06 கட்டுரைகள்
- VasuVR 105 கட்டுரைகள்
- தென்காசி சுப்பிரமணியன் 577 கட்டுரைகள்
இதைத்தவிர வேறு யார் யார் ஆயிரத்தைத் தாண்டியவர்கள் எனவும் தகவல் வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:32, 16 சனவரி 2014 (UTC)
1000 கட்டுரைகளை தாண்டியவர்கள்
[தொகு]எனக்குத் தெரிந்தவர்கள்
- புண்ணியாமீன்
- தேனி மு சுப்பிரமணி
- செங்கைப்பொதுவன் நான் இவற்ற்றை படிமம்:Aayiravar.jpg எனும் படிமம் இருக்கும் இடங்களை வத்து இவற்றை ஊகித்துக்கு கூறியுள்ளேன்.
இது மட்டுமின்றி நீங்கள் பத்திரிகையாளருக்கு த.விக்கியில் உள்ள நிர்வாகிகள் அதிகாரிகள் போன்றோரின் விவரங்களைக் கொடுக்கலாம். அதுமட்டுமன்றி இதுவரை பலர் விக்கியில் பல பல சாதனைகளை செய்திருப்பர் அதை இனங்கண்டு நீங்கள் பத்திரிகையாளர்களுக்கு அதைப் பற்றிய தகவலைக் கொடுக்கலாம் அதைப் பற்றிய தகவலை என்னிடமோ அல்லது வேறு யாருடமோ கேட்டு தகவலைச் சேகரிக்கலாம்.
அல்லது ஒவ்வொரு பயனர்களும் ஒரு இடத்திலேயே அவர்களுக்கே தெரிந்த அவரவர்களது சாதனையை இடும்படி செய்யலாம்.இவ்வளவுதான் நான்கூறுவது வேறு ஏதாவது ஞாபகம் வந்தால் கூறுகிறேன். -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:29, 16 சனவரி 2014 (UTC)
சரிங்க/நன்றிங்க தளபதி. அப்படியே ஆகட்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:40, 16 சனவரி 2014 (UTC)
என்னை எப்போங்க தளபதி ஆக்கினீங்க மந்திரி?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:11, 16 சனவரி 2014 (UTC)
நான் இளவேந்தனும் அல்ல, மந்திரியும் அல்ல, முந்திரியும் அல்ல, தளபதியும் அல்ல, தலயும் அல்ல. சாதாரண புலவனப்பா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:50, 16 சனவரி 2014 (UTC)
- எங்கேயோ இடிக்கிரமாதிரியும் வெடிக்கிரமாதிரியும் இருக்கே! :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:46, 17 சனவரி 2014 (UTC)
- இடிச்சா திருப்ப இடியுங்க வெடிச்சா திருப்ப வெடியுங்க யாரு இல்லேன்னா! -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:14, 17 சனவரி 2014 (UTC)
- எங்கேயோ இடிச்சாலும் வெடிச்சாலும் எனக்குப் பிரச்சினை இல்லை :) ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:23, 19 சனவரி 2014 (UTC)
ஆசிரியர்கள் - மருத்துவர்கள்
[தொகு]பார்வதிஸ்ரீ, தமிழ்பரிதி மாரி, செல்வா, பரிதிமதி ,பூங்கோதை , செங்கைப்பொதுவன், நந்தகுமார் Profvk --vk- கிருஷ்ணமூர்த்தி?? இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள். 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதிய ஸ்ரீதரன் என்பவர் யார்?? எனக்கு தெரிந்து சிறீதரன் கனகரத்தினம் என்பவர் தான் 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதியவர் :)
- மரு கார்த்திகேயன், செந்தில், புருனோ ஆகியோர் நான் அறிந்தவரை விக்கியில் உள்ள மருத்துவர்கள்--குறும்பன் (பேச்சு) 22:36, 16 சனவரி 2014 (UTC)
முனைவர் துரை மணிகண்டன், சோடாபாட்டில் ஆகியோரும் ஆசிரியர்கள்.
- ஸ்ரீதரன் = கனக ஸ்ரீதரன். இன்னொரு மருத்துவர் கார்த்தி இருக்கார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:45, 17 சனவரி 2014 (UTC)
தென்காசி அவரை சிறீதரன் என்றோ கனகு என்றோ சொன்னால் உடனே புரியும். நம் விக்கியில் நிறைய ஸ்ரீதரன்கள் உள்ளார்கள் அவரை ஸ்ரீதரன் என்று சொல்லாதிர்கள் :). கார்த்திக்பாலா என்பவர் ஆய்வாளர். அவரு இல்லைன்னா இன்னொரு கார்த்தி யாரு ? ம்ம்ம் --குறும்பன் (பேச்சு) 21:54, 17 சனவரி 2014 (UTC)
- மருத்துவக் கட்டுரைகளில் பெருமளவுப் பங்களிக்கும் ஆய்வாளர் கலையரசி (பயனர்:கலை).--நந்தகுமார் (பேச்சு) 09:25, 17 சனவரி 2014 (UTC)
தகவல் தொழில்நுட்பவியலாளர்கள்
[தொகு]பொதுவான கருத்துகள்
[தொகு]பங்களிப்பாளர் பற்றிய விவரங்களுக்கு, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தைத் தரலாம். அங்கேயே ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், இலங்கையர்கள், தமிழ்நாட்டவர்கள், பெண்கள், இலங்கையர்கள் என்று பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன.
பொதுவாக, எண்ணிக்கை / சாதனை அடிப்படையில் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தாது அவர்கள் ஆர்வம் / பின்னணியை முன்வைத்து அறிமுகப்படுத்துவது நன்று. இதன் மூலம் அதே ஆர்வம் / பின்னணி வாசகர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பைத் தொடங்கக்கூடும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு ஆசிரியர் / மாணவர் / பெண் வரலாறு / இலக்கியம் / கணினி தொடர்பாக பங்களிக்கிறார் என்றால் அது மற்றவர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடும்.
நமது பங்களிப்பாளர்களின் சாதனைகளை வலியுறுத்துவது ஏற்கனவே உள்ளவர்களுக்கு உந்துதலாக இருக்கும். அதே வேளை, இதழ்களின் நடைமுறை காரணமாக பல பங்களிப்பாளர்களை ஒரே கட்டுரையில் சிறப்பாக எடுத்துரைக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்வது நல்லது. ஒரு கட்டுரைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் முயலலாம்.
பெரும்பாலான இதழாளர்கள் விக்கிப்பீடியா பற்றி பெரிதாக அறிந்திருப்பதில்லை. அவர்களின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களைத் தொகுக்க வேண்டும். அவர்கள் கேட்க விரும்பும் கேள்விகள் மட்டும் இல்லாது, நாம் முன்னிறுத்திச் சொல்ல விரும்பும் கொள்கைகள், தேவைகள் தொடர்பாகவும் நேர்காணலைத் திசை மாற்றிச் செல்வதும் நன்று. --இரவி (பேச்சு) 12:46, 21 சனவரி 2014 (UTC)