மருத்துவ, நலவியல் துறையில் மிகவும் முக்கியமானதெனக் கருதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்கி, பின்னர் எளிய ஆங்கிலத்திலும் ஏனைய விக்கி மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தில் அங்கு தேர்வு செய்யப்படும் அனைத்துக்கட்டுரைகளையும் தமிழ் மொழிக்கு மாற்றுதல் மூலம் தமிழ் விக்கிப்பீடியா இத்திட்டத்தில் பங்கேற்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட கட்டுரைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைச் செம்மைப்படுத்தி தரம் உயர்த்துதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இங்கே தமிழில் மொழிபெயர்க்கத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் உள்ளன.
இங்குள்ள கட்டுரைகளை ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் விக்கிப்பீடியர்கள் பார்வையிட்டு, மதிப்பிட்டு அந்தக் கட்டுரை குறிப்பிட்ட மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தேவையா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அப்படித் தீர்மானித்த பின்னர், அங்கேயே "Do translate" அல்லது "Do not translate" எனக் குறிப்பிடலாம்.
அவர்கள் கொடுத்திருக்கும் சில கட்டுரைகள் ஏற்கனவே தமிழ்விக்கியில் உள்ளன.
சில கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தால் மொழிபெயர்க்கப்பட்டவை.
சில கூகிள் மொழிபெயர்ப்புத் திடத்தால் மொழிபெயர்க்கப்பட்டுப் பின்னர், பயனர்களால் மேம்படுத்தப்பட்டவை
தமிழ்விக்கிக்குத் தேவையான கட்டுரைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பக்கத்திற்குச் செல்லலாம். இந்தப் பக்கத்திற்குச் சென்று கட்டுரைகளை ஆய்வு செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். தீர்மானிப்பதற்கான வழிகாட்டியாகக் கொள்ள வேண்டியவை (குறிப்பு:இந்த வழிகாட்டலில் திருத்தங்கள் / மாற்றங்கள் தேவைப்படலாம்):
கட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பின், அது விரிவான, தெளிவான கட்டுரையாக இருக்குமாயின், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate எனப் போட்டு விடலாம்.
கட்டுரையை நமது பயனர்கள் உருவாக்கியிருப்பினும், அது குறுங்கட்டுரையாக இருப்பின் Do translate எனப்போட்டுவிட்டு, அவர்கள் மொழிபெயர்த்து முடிந்த பின்னர், அதனை நமது குறுங்கட்டுரையுடன் இணைத்துவிடலாம். குறுங்கட்டுரையாக இருக்கும்போது, நமது பயனர்களின் தகவல்களையும் சேர்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. வரலாற்றுடன் இணைத்துவிடலாம்.
கட்டுரையானது கூகிளால் மொழிபெயர்க்கப்பட்டதாயின், அது எவ்வாறு உள்ளதென்பதை முதலில் பார்க்க வேண்டும். ஏனெனில், கூகிள் மொழிபெயர்ப்புக்குப் பின்னர், சில கட்டுரைகளில் நமது பயனர்களும் திருத்தம் செய்திருக்கின்றார்கள். எனவே அவை நன்றாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அவ்வாறு நன்றாக இருக்குமானால், ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் Do not translate உம், நன்றாக இல்லையெனில் Do translate உம் போடலாம்.
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை, அவர்கள் மொழிபெயர்த்து முடித்த பின்னர், தகவல்கள் மாற்றம் செய்வதில் நேரத்தைச் செலவிடாமல், வரலாற்றுடன் சேர்த்துக் கட்டுரைகளை இணைத்து விடலாம்.
கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டுரைகளாயின் தற்போதைக்கு ஆங்கிலத் திட்டப் பக்கத்தில் To evaluate என்ற குறிப்பையும் இடலாம்.
ஒரு கட்டுரையில் அவர்களது மொழிபெயர்ப்பு வேலை முழுமையாக முடிவடைந்த பின்னரே, அவர்கள் தமது பக்கத்தில் (TWB website) பதிவேற்றுகின்றார்கள். அங்கு உள்நுழைவதற்கான பயனர் பெயர்:Jmh649, கடவுச்சொல்:wikipedia. அதனால், அவர்கள் பதிவேற்றிய பின்னரே நம்மால், அதனை த.வி. க்கு கொண்டு வர முடியும். அவர்களது கட்டுரையை தரவிறக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாம் த.வி. யில் பதிவேற்றலாம். பதிவேற்றும்போது, நமது சொந்த பயனர் கணக்கினூடாகவே பதிவேற்றலாம். ஆனால், "Translated by xxx from English Wikipedia as part of the collaboration with Translators Without Borders" என்பதனை சுருக்கம் என்பதில் கொடுத்தால் சரி. ஒரு பகுதி பதிவேற்றிய பின்னர், அதில் நாம் நமது பயனர் கணக்கு மூலமாகவே திருத்தங்களைச் செய்யலாம். அப்போது உள்ளிணைப்புக்களையும் சரியாக்கிக் கொடுக்கலாம்.
தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.
இப்பக்கம் இறுதியாக 17:48, 19 மே 2024 (ஒ.அ.நே) (5 மாதங்கள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.
தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும்.
இப்பக்கம் இறுதியாக 17:48, 19 மே 2024 (ஒ.அ.நே) (5 மாதங்கள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக.