இங்கு உயிரியற் கலைச்சொற்களுக்கான பரிந்துரைகள், ஐயப்பாடுகள், வேண்டுகோள் ஆகியவற்றைத் தொகுக்கலாம். ஆய்ந்து முடிவடைந்த சொற்கள் அகரவரிசைப்படி ஆவணப்படுத்தப்படும்; இது இலகுவில் சொற்களைத் தேடுவதற்கு உதவியாக அமைகின்றது. உதவிப்பக்கத்தில் சொல்லாக்கத்திற்குத் தேவைப்படக்கூடிய சில வழிமுறைகள் அறியலாம் அல்லது பரிந்துரைகளைப் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாக் கட்டுரையில் புதிய உயிரியற் சொற்களைச் சேர்ப்போர் இங்கே அவற்றிற்கான விளக்கம், சொற்பிறப்பு போன்றவற்றைப் பதியலாம்.
Prehistory - வரலாற்று முந்தைய காலம்? - வரலாற்றுக்கு முன்பு,முற்பட்ட ?
Ancient history - வரலாற்று காலம்??, பண்டைய வரலறு
Middle Ages and Early Modern era - மத்திய காலம், நவீன காலம்
Classical period - செவ்வியல் காலம்
Modern history - நவீன வரலாறு
போன்றவற்றிற்கு சரியான தமிழ் பொருள் தெரியவில்லை. பல கட்டுரைகள் இந்தவகை பதத்தை பயன்படுத்துவதால் தவறாக பயன்படுத்த வேண்டாம். என்று சில கட்டுரைகளை விரிவுபடுத்தவில்லை \ வார்ப்புருக்களை மொழிபெயர்க்கவில்லை.--குறும்பன்23:34, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
செந்தி, சுட்டுக்கு மிக்க நன்றி. அடியாறு என்பது மிக அருமையான சுருக்கமான சொல். Ancient history என்பதற்கு ஈடாக ஆளலாம். தொல்வரலாறு என்பது எளிதாக Ancient history என்பதற்குப் பொருந்தும். வரலாறு என்பது பொதுவாக நிகழ்ச்சி அடுக்கைக் கால முறையாக, வரன் முறையை, வழிவழியாக (ஆறு=வழி, ஆறு = முறை) வருவதைக் காட்டுவது. அது உண்மையில் எல்லா காலத்தையும் உள்ளடக்கியதுதான். ஆனால் எழுத்து வரலாற்றுக்கு முந்தைய காலத்தை "வரலாற்றுக்கு முந்தைய காலம்" என்று கூறுகின்றனர். Middle Ages என்பது இடைக்காலம் (இதற்கு முன்னும் பின்னும் உள்ள காலங்கள் யயவை என்று வரையறை தருவது நல்லது. இது பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுவது). Classical period = செம்மரபுக் காலம், Modern history = தற்கால வரலாறு. எனவே Prehistory என்பதை முன் தொல்வரலாறு அல்லது முதுவடியாறு எனலாம் (கல்தோன்றி, மண்தோன்றா .. முன்தோன்றிய மூத்த.. என்று வருவதில் இருக்கும் முன் முது ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்) --செல்வா 21:18, 14 பெப்ரவரி 2012 (UTC)
ஒருத்தருக்கு ஒருத்தர் ஒப்புறவா இருக்கணும் என்பது நாட்டுப்புற பேச்சு வழக்கு. ஒப்புறவியம் என்பது பொருந்தி வருமா?
இங்கு ஒப்புறவு என்பது ஒற்றுமை, உதவி என்பதாக உள்ளது. ஆனால் Mutual என்பது ஒன்றுக்கு மற்றொன்றிடத்தும் மற்றதற்கும் இதனிடத்தும் என்று பொருள்படும். ஒன்றுக்கொன்று பொருந்துகிறது. ஆனால் இயம் வேண்டுமா எனத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்றானவை எனலாமோ ? --மணியன் (பேச்சு) 03:42, 4 மார்ச் 2013 (UTC)
ஒன்றுக்கொன்று நன்றாக இருக்கிறது போல் எனக்குப் படுகிறது. ஒப்புறவு அழகாய் உள்ளது. ஆனால் இங்கு பொரிந்துமோ தெரியவில்லை. பரிந்துரைக்கு நன்றி மணியன். --Natkeeran (பேச்சு) 03:05, 5 மார்ச் 2013 (UTC)
திருக்குறளில் ஒப்புரவு ஒழுகல் என்று அதிகாரம் உள்ளது. நான் கூறிய பேச்சு வழக்கில் உள்ள ஒப்புறவு அது தானோ தெரியவில்லை. எனினும், ஒன்றுக்கு இன்னொன்று ஒப்பான உறவு என்பது கூட mutualism என்ற பொருள் தருகிறதே? mutually exclusive என்பது போன்ற சொல்லாடல்களைக் கருத்தில் கொண்டும் சீரான சொல் ஒன்றை உருவாக்கலாம்--இரவி (பேச்சு) 04:49, 5 மார்ச் 2013 (UTC)
திருக்குறளில் ஒப்புரவு ஒழுகல் என்று வரும் சொற்தொடரின் பொருள் என்ன?--Natkeeran (பேச்சு) 16:11, 31 மார்ச் 2013 (UTC)
திருக்குறளில் 22 ஆம் அதிகாரம் ஒப்புரவறிதல். இதன் பொருள் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்தல் அதாவது தானாகவே தேவையுள்ளவருக்குத் தந்து உதவும் தன்மை -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 31 மார்ச் 2013 (UTC)