விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 16, 2009
Appearance
- உலகம் இருக்கும் பால் வழி நாள்மீன்பேரடைக்கு மிக அருகில் இருக்கும் பேரடை அண்டோர்மிடா பேரடை ஆகும்.
- தொழில்நுட்பத்தால், மாந்தர்களின் வாழ்வில் உந்தப்படும் நிகழ்வுகளின் இடைவெளி மாற்றங்கள் மடக்கை முறையில் குறைந்து வருகின்றன. இவ்வாறான மாற்றங்கள் ஒருமித்து (குவிந்து) மனித வாழ்வு மீண்டும் மீளமுடியாதவாறு வர இருக்கும் ஒரு காலகட்டமே நுட்பியல் ஒற்றைப்புள்ளி (Technological Singularity) எனப்படுகிறது
- தாவரங்களும் ஒருவணு உயிரினங்களுமே பெரும்பான்மையாக ஒளிச்சேர்க்கை மூலம் உணவை அல்லது உயிர்ப்பொருளை உற்பத்தி செய்கின்றன, விலங்குகள் எவையும் உணவை உற்பத்தி செய்யும் திறன் அற்றவை.
- மன வரைபடம் மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒர் எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்புற்று தோன்றும் கருத்க்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும்.
- தமிழ் இலக்கியத்தில் ஐந்திணை நெறி வழுவாது, அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம்.