உள்ளடக்கத்துக்குச் செல்

வாழக்குளங்கரயில் காலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழக்குளங்கரயில் காலித் (Vazhakkulangarayil Khalid) அல்லது வி. காலித் (சூலை 1,1922-நவம்பர் 15,2017) ஒரு இந்திய நீதிபதி ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

தொழில்

[தொகு]

காலித் கண்ணூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, தலச்சேரி அரசு பிரென்னன் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் படித்தார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டத்தில் தேர்ச்சி பெற்றார். சட்டப் படிப்பிற்குப் பிறகு கண்ணூர் முன்சிப் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். பின்னர் 1948-இல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தார்.[1] குற்றவியல், உரிமையியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் பணியாற்றினார். 7 மார்ச் 1974 அன்று, காலித் கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1983 ஆகத்து 24 அன்று ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியாகப் பணியமர்த்தப்பட்டார்..1984இல் ஜம்மு-காஷ்மீரின் தற்காலிக ஆளுநராக 12 நாட்கள் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட காலித், 1987ஆம் ஆண்டு சூன் 30ஆம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[2] சா பானோ பேகம் வழக்கில் நீதிபதி காலித் தனது தீர்ப்புக்காக அறியப்பட்டார்.

மரணம்

[தொகு]

காலித் தனது 95 வயதில் நவம்பர் 15,2017 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Former J&K Guv and SC Judge V Khalid dies at 95". 15 November 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
  2. "Hon'ble Sh. Justice V.Angarial Khalid". பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
  3. "Form J&K Guv and SC Judge Khalid". பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.