வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் டிசம்பர் 2009
Appearance
- டிசம்பர் 31:
- பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி நகருக்கருகில் யெஸ்ப்பூ என்ற இடத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் சுட்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 30:
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிஐஏ முகவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 5 கனடியப் படையினரும் ஒரு ஊடகவியலாளரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஈராக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நபர் விடுவிக்கப்பட்டார். (பிபிசி)
- மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த் நகரில் காட்டுத்தீ காரணமாக 37 வீடுகள் உட்பட 33,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாயின. (பிபிசி)
- பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்.
- இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகினார் யோகராஜன்
- மேற்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 40 வீடுகள் தீக்கிரை
- டிசம்பர் 29:
- தெற்கு சூடானைத் தனிநாடாக்கக் கோரும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு சூடான் நாடாளுமன்றம் ஒப்துதல் அளித்தது. (பிபிசி)
- தமது நாட்டில் தங்கியிருக்கும் 9,000 ரொகிங்கியா அகதிகளை பர்மாவுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக வங்காள தேசம் அறிவித்திருக்கிறது. (சின்குவா)
- பிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம்
- ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகள் 16 பேர் ருமேனியாவுக்கு அனுப்பப்பட்டனர்
- டிசம்பர் 28:
- இத்தாலியில் புயல்காற்று காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- மொங் இன அகதிகள் 4,000 பேரை தாய்லாந்து பலவந்தமாக லாவோசிற்கு நாடு கடத்த ஆரம்பித்தது. (பிபிசி)
- டிசம்பர் 27:
- பிலிப்பைன்சில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டு பலர் காணாமல் போயினர். (சைனா டெய்லி)
- கிபி 2ம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சாவோ சாவோ என்ற மன்னனின் கல்லறை ஒன்று ஹெனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.(ஏபிசி)
- பீகாரில் பள்ளிக்கூடம் வெடி வைத்து தகர்ப்பு
- இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு
- டிசம்பர் 26:
- இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள் நாடுகள் 2004 இல் 250,000 பேரை காஅவு கொண்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் 5ம் ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தார்கள். (பிபிசி)
- மலேசியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
- அமெரிக்க விமானத்தை தகர்க்க முயற்சித்ததாக நைஜீரியப் பயணி கைது
- இந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு
- டிசம்பர் 25:
- வெனிசுவேலாவில் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பற்றியதில் 6 பிலிப்பீனோக்களும் 3 கிரேக்கர்களும் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- போப்பாண்டவரை மனநிலை பாதித்த பெண் ஒருவர் தள்ளி வீழ்த்தினார்
- டிசம்பர் 24:
- டிசம்பர் 23:
- டிசம்பர் 22:
- டிசம்பர் 21:
- டிசம்பர் 20:
- டிசம்பர் 18:
- டிசம்பர் 17:
- டிசம்பர் 16:
- டிசம்பர் 15:
- டிசம்பர் 13:
- டிசம்பர் 12:
- டிசம்பர் 11:
- டிசம்பர் 10:
- டிசம்பர் 8:
- டிசம்பர் 7:
- டிசம்பர் 6:
- டிசம்பர் 5:
- டிசம்பர் 4:
- வங்காள தேசத்தில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சுமாத்திராவில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து காரணமாக 20 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ர்த்துவதற்காக நேபாளத்தின் அமைச்சரவைக் கூட்டம் எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்றது. (சீஎனென்)
- பாக்கிசுத்தானில் இராவல்பிண்டியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 35 பேர் பலி
- படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
- டிசம்பர் 3:
- சோமாலியாவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தான்சானியர்களை நெதர்லாந்து கடற்படையினர் விடுவித்து 13 சோமாலி கடற்கொள்ளைக்காரர்களைப் பிடித்தனர். (ஏபி)
- சீனாவில் ஜூலையில் உருமுச்சியில் இடம்பெற்ற கலவரங்களில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேருக்கு மரண தண்டனை வழங்க்கப்பட்டது. (பிபிசி)
- போபாலில் நச்சுவாயுக் கசிவினால் 3,787 பேர் இறந்த 25 ஆண்டு நிறைவு நினைவுகூரல் இந்தியாவில் இடம்பெற்றன. (த டைம்ஸ்)
- சோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்
- படுகொலை முயற்சியில் கினி இராணுவ ஆட்சியாளர் காயம்
- டிசம்பர் 2:
- டிசம்பர் 1:
- ஒந்துராசின் ஜனாதிபதியாக பொர்ஃபீரியோ லோபோ சோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஹஃபிங்டன் போஸ்ட்)
- 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக வட கொரியா தனது நாணய மதிப்பை உயர்த்தியது. (யொன்ஹாப்)
- வவுனியா தடுப்பு முகாம் அகதிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட சுதந்திரம்
- முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு