வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2008
Appearance
- அக்டோபர் 31:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. (சிஃபி)
- அக்டோபர் 30: அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர், நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (தினத்தந்தி)
- அக்டோபர் 29:
- இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஜெர்மனியில் நடந்த உலக சதுரங்கப் போட்டித் தொடரில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வென்று உலக சதுரங்க சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். (சிஎன்என்)
- மாலைதீவுகளில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் முகமது நசீட் வெற்றி பெற்றார். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- அக்டோபர் 27:
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கோமா நகரில் துட்சி தீவிரவாதிகள் முன்னேறி வருகிறார்கள். ஐநா அமைதிப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கூ இடையில் கடும்போர் இடம்பெற்று வருகிறது. (பிபிசி)
- அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவைச் சுட்டுக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டிருந்த இரு வெள்ளையின மேலாதிக்கவாதிகள் கைது செய்யப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- அக்டோபர் 26: ஈராக்கிய எல்லைக்கருகிலுள்ள சிரியாவின் பகுதியில் அமெரிக்க ஹெலிகொப்டர் மேற்கொண்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். (சானா)
- அக்டோபர் 24:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்:
- சிங்களப் பேரினவாதத்தால் இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கானோர் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். (புதினம்)
- இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை கைது செய்தது. (தினத்தந்தி)
- எரித்திரியாவுடனான எல்லைப்பிரச்சினையை அடுத்து சிபூட்டி அந்நாட்டுடன் போரை அறிவிக்க இருப்பதாக அறிவித்தது. (பிபிசி)
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்:
- அக்டோபர் 23:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் மு. கண்ணப்பன் ஆகியோரை தமிழ்நாடு அரசு கைது செய்தது. (புதினம்)
- மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் 12 பேரை மலேசியப் போலிசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் 3 பெண்கள், ஒரு குழந்தையும் ஆகும். (தமிழ்முரசு)
- அக்டோபர் 22: சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முதல் முயற்சியாக சந்திரயான்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக செலுத்தியது. இண்டியன் எக்ஸ்பிரஸ்)
- அக்டோபர் 21: இந்தியாவின் இம்ப்பால் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். (வெப்துனியா)
- அக்டோபர் 18:
- 1953 இல் நடத்தப்பட்ட மில்லர்-யூரி பரிசோதனையில் மேலும் பல அமினோ அமிலங்கள் புட்டிகளில் எஞ்சியிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- ரஷ்யா, இங்குஷேத்தியாவில் முஸ்லிம் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- அக்டோபர் 17:
- 2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவின் இலங்கைக்கான படைத்துறை உதவியை எதிர்த்தும் 14 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறப்பு கடிதங்களை முதல்வர் மு. கருணாநிதியிடம் கையளித்தனர். (இந்துஸ்தான் டைம்ஸ்)
- இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் 88 ஓட்டங்களைப் பெற்று 12,000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற இலக்கை எட்டினார். (பிபிசி)
- அக்டோபர் 16:
- இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கமான இந்துராப் என்ற அமைப்புக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. (தமிழ்முரசு)
- அசர்பைஜானின் அரசுத் தலைவராக இல்ஹாம் அலீயெவ் பெரும்பான்மைப் பலத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (சிஎன்என்)
- அக்டோபர் 15: தாய்லாந்தும் கம்போடியாவும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- அக்டோபர் 14: த வைட் டைகர் என்னும் புதினத்திற்காக இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடிகா மான் புக்கர் பரிசு வென்றார். (தட்ஸ்தமிழ்)
- அக்டோபர் 12: அமெரிக்காவின் பால் கிரக்மன் 2008 பொருளியல் நோபல் பரிசு பெற்றார். (ஏபி)
- அக்டோபர் 11:
- ஐக்கிய அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்கியது. (பிபிசி)
- ரஷ்யாவின் செச்னியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 13 மக்கள் உயிரிழந்தனர். (பிபிசி)
- அக்டோபர் 10: 2008 அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் பின்லாந்து அரசுத் தலைவர் மார்ட்டி ஆட்டிசாரிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- அக்டோபர் 9: 2008 இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்-மரீ குஸ்டாவி லெ கிளேசியோ என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- அக்டோபர் 8:
- 2008 வேதியியல் நோபல் பரிசு ஜப்பானியரான ஒசாமு ஷிமோமுரா, அமெரிக்கர்களான மார்ட்டின் சால்ஃபி, ரொஜர் த்சியென் ஆகியோருக்கு வழங்கப்ப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அக்டோபர் 7: ஜப்பானைச் சேர்ந்த நாம்பு ஓச்சிரோ, கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகியோருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. (நோபல் நிறுவனம்)
- அக்டோபர் 6:
- மருத்துவத்துக்கான 2008 நோபல் பரிசு ஜெர்மனியின் ஹரால்ட் சூர் ஹவுசன், மற்றும் பிரான்சின் பிரான்சுவா பரே-சினோசி, லுக் மொண்டேனியர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. (பிபிசி)
- மெசஞ்சர் விண்கலம் இரண்டாம் தடவையாக புதன் கோளைக் கடந்தது. (நியூயோர்க் டைம்ஸ்)
- அக்டோபர் 5:
- கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அசாம் மாநிலத்தில் உதால்குரி மாவட்டத்தில் அங்கு குடியேறிய முஸ்லிம் இனத்தவருக்கும் போடோ பழங்குடிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறைகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
- பூமி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் காபனீரொக்சைட்டை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் பெரும் பங்கு வகிப்பதாக "குளோபல் கார்பன் திட்டம்" என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. (தினமலர்)
- அக்டோபர் 3:
- அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 700,000,000,000 அமெரிக்க டாலர் அவசர நிதியுதவியை அமெரிக்க நிறுவனங்களுக்கு அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். (என்பீஆர்)
- வைக்கிங் காலத்து தேவாலயம் ஒன்றின் எச்சங்கள் சுவீடனில் கண்டுபிடிக்கப்பட்டன. (த லோக்கல்)
- அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஓ. ஜே. சிம்சன் கொள்ளை, மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக்க் காணப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- அக்டோபர் 2: ஐக்கிய அமெரிக்காவின் மேலவை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரவளித்தது. (ஏபி)
- அக்டோபர் 1: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்-ஐபிஎன்)