வலைவாசல்:துடுப்பாட்டம்
தொகு
அறிமுகம்துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும். துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு ரீதியாக விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன. தொகு
சிறப்புக் கட்டுரைரிக்கி தாமஸ் பாண்டிங் (Ricky Thomas Ponting, டிசம்பர் 19, 1974) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் அனைத்துக் காலமும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் பொற்காலமாகக் கருதப்படும் 2004 முதல் 2011 ஆண்டு வரையிலான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் 2002 மற்றும் 2011 இல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக இவர் இருந்தார். வலது கை மட்டையாளராகவும், சிறந்த களவீரராகவும், அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் ஸ்டீவ் வா தலமையிலான அணியில் ஒரு வீரராகவும் இடம் பெற்றிருந்தார். மேலும் 2006 மற்றும் 2009 ஆண்டுகளின் சாதனையாளர் கிண்ணப் போட்டிகளிலும் இவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இவர் தலைமையில் பங்குபெற்ற 324 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 220 போட்டிகளில் (67.91%) வென்றுள்ளது. எனவே பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணித்தலைவராக ரிக்கி பாண்டிங் கருதப்படுகிறார்.
தொகு
உங்களுக்குத் தெரியுமா?தொகு
துடுப்பாட்ட முக்கிய செய்திகள்செப்டம்பர் நடப்புத் தொடர்கள்:
தொகு
இன்றைய நாளில்...தொகு
சிறப்புப் படம்
|