உள்ளடக்கத்துக்குச் செல்

லியுபோவ் அக்கேபுஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீவில் உள்ள லுக்ஜானோவ்ஸ்கி கல்லறைத் தோட்டத்தில் லியுபோவ் அக்கேபுஷ் கல்லறை.

லியுபோவ் மைகைலிவ்னா ஹக்கேபுஷ் (Liubov Mykhailivna Hakkebush, 26 செப்டம்பர் 1888 – 28 மே 1947) என்பவர் உக்ரேனிய நடக நடிகை, ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். இவர் உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் (1943) என்ற விருதைப் பெற்றவர்.[1] வில்லியம் சேக்ஸ்பியரின் மக்பத்தில் மிகவும் பிரபலமான பாத்திரமான லேடி மாக்பெத் மற்றும் இப்சனின் கோஸ்ட்சில் ஃப்ரூ அல்விங் உட்பட 80 க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் துணை வேடங்களில் இவர் தோன்றியுள்ளார்.

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

லியுபோவ் அக்கேபுஷ் 1888, செப்டம்பர் 26 அன்று உருசியப் பேரரசின் நெமிரிவில் பிறந்தார்.[2] இவர் மாஸ்கோ கமெர்னி நடகக் கலையரங்கில் படித்தார். மேலும் மாஸ்கோவில் உள்ள கோப்சார் உக்ரேனிய கிளப்பின் தொழில்முறை அல்லாத நாடகத் தயாரிப்புகளில் தோன்றினார்.[3]

தொழில்

[தொகு]

அக்கேபுஷ் 1917 இல் கீவில் உள்ள உக்ரேனிய மக்கள் நாடக அரங்கின் மேடையில் மிஸ் (ஒலெக்சாண்டர் ஓல்சின் இலையுதிர் காலம்) பாத்திரத்தில் அறிமுகமானார்.[1] 1919-1921 இல், இவர் கீவில் உள்ள உக்ரேனிய சோவியத் குடியரசின் ஷெவ்செங்கோ முதல் நடாக அரங்கிலும், 1921-1922 இல் வின்னிட்சியாவில் உள்ள ஃபிராங்கோவின் பெயரிடப்பட்ட உக்ரேனிய சோவியத் சோவியத் குடியரசின் இரண்டாவது நாடக அரங்கிலும் நடித்தார்.[4]

ஹக்கேபுஷ் 1922 முதல் 1926 வரை பெரெசில் நடகக் குழுவில் பணியாற்றினார்.[1] 1926 ஆம் ஆண்டில், இவரது கணவர் வாசில் வாசில்கோ ஹக்கேபுஷ் உடன் ஒடெசாவுக்கு குடிபெயர்ந்தார்.[2] 1926 முதல் 1928 வரை, இவர் ஒடெசாவின் உக்ரேனிய நாடக்க் குழுவில் பணியாற்றினார்.[3] 1928 ஆம் ஆண்டில், அக்கேபுஷும் வாசில்கோவும் கார்கிவுக்குச் சென்றனர், அங்கு அக்கேபுஷின் கணவர் செர்வோனோசாவோட்ஸ்க் உக்ரேனிய நாடக அரங்கின் கலை இயக்குநரானார்.[2][5] அக்கேபுஷ் 1933 வரை கார்கிவ் செர்வோனோசாவோட்ஸ்க் உக்ரேனிய நாடகக் குழுவில் பணியாற்றினார்.[4]

1933-1935 இல் ஹக்கேபுஷ் டொனெட்ஸ்க் உக்ரேனிய இசை நாடக அரங்கிலும், 1935 முதல் டி. ஷெவ்செங்கோவின் பெயரிடப்பட்ட கார்கிவ் உக்ரேனிய நாடக அரங்கிலும் பணியாற்றினார்.[1] 1938-1941 இல் அக்டோபர் புரட்சியின் பெயரிடப்பட்ட ஒடெசா நடக அரங்கில் அக்கேபுஷ் பணியாற்றினார்.[4]

இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஷெவ்செங்கோ கார்கிவ் உக்ரேனிய நடககக் குழுவில் இணைந்தார் (1941-1944).[4] 1943 ஆம் ஆண்டில் இவருக்கு உக்ரேனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[1]

இவர் நடிப்பதைத் தவிர நடகக் குழுகளிலும், கீவ் லைசென்கோ இசை மற்றும் நாடக கல்வி நிறுவனம் (1922-6), ஒடெசா (1926-8), கார்கிவ் (1929-33), கீவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் (1944–7) போன்ற இசை மற்றும் நாடக கல்வி நிறுவனங்களில் நடிப்பைக் கற்பித்தார்.[3]

1944 க்குப் பிறகு அக்கேபுஷ் கீவில் குடியேறி மொழிபெயர்ப்புப் பணியில் கவனம் செலுத்தினார். மொலியர், கார்க்கி ("த பூர்ஷ்வா"), திரென்யோவ், அஃபினோஜெனோவ், ரோமாஷோவ் ஆகியோரின் படைப்புகளை உக்ரேனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.[6]


லியுபோவ் அக்கேபுஷ் 28 மே 1947 அன்று கீவில் இறந்தார்.[3]

1938-47 காலகட்டத்தில் இவர் கிவ் நகரின், சைட்டோமிர்ஸ்கா தெருவில் வாழ்ந்த 17 எண்ணுள்ள வீட்டில் வாழ்ந்தை நினைவுகூறும் விதமாக வீட்டின் முகப்பில் ஒரு கருங்கலாலான நினைவுப் பலகை நிறுவப்பட்டது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Гаккебуш Любов Михайлівна — Енциклопедія Сучасної України". esu.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  2. 2.0 2.1 2.2 "Гаккебуш Любовь Михайловна". odessa-memory.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  3. 3.0 3.1 3.2 3.3 "Hakkebush, Liubov". www.encyclopediaofukraine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  4. 4.0 4.1 4.2 4.3 "Любовь Гаккебуш". Кино-Театр.Ру. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  5. "ГАККЕБУШ". leksika.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  6. 6.0 6.1 "Гаккебуш Любовь Михайловна. Мемориальная доска". КИЕВФОТО (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுபோவ்_அக்கேபுஷ்&oldid=4108171" இலிருந்து மீள்விக்கப்பட்டது