உள்ளடக்கத்துக்குச் செல்

லம்மசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக்கின் துர்-சருக்கின்[1] தொல்லியல் களத்தில் கண்டெடுத்த லம்மசு சிற்பம், புது அசிரியப் பேரரசுக் காலம், கிமு 721–705, சிக்காகோ ஓரியண்டல் கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்

லம்மசு (lamassu (ஆப்பெழுத்து: 𒀭𒆗, an.kal; சுமேரியம்:dlammař; அக்காதியம்: lamassu; சிலநேரங்களில் லமஸ்சுஸ் என்றும் அழைப்பர்.[2][3])பண்டைய அசிரியர்களின் காவல்தெய்வம் ஆகும். லம்மசு காவல் தெய்வத்தின் சிற்பங்கள் மனிதத் தலையும், காளை அல்லது சிங்க உடலும், சிறகுகளுடன் கூடியது.[4] சில தொல்லியல் ஆய்வாளர்கள் லம்மசு பெண் தெய்வத்தை பிரதிநிதித்துவம் செய்ய சித்தரிக்கப்படுகிறது எனக் கூறுகின்றனர்.[5] லம்மசு சிற்பம் இராசி மண்டலத்தின் விண்மீன்களின் கூட்டத்தை குறிப்பதாக கருதுகின்றனர்.[6][7]

படிமவியல்

[தொகு]
தற்கால ஈராக்கின் கொரசாத்பாத் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த மனிதத் தலையும், காளை உடலும், சிறகுகளுடன் கூடிய லம்மசு சிற்பம், பேரரசர் இரண்டாம் சர்கோனின் அரண்மனை, கிமு 8ம் நூற்றாண்டு, இலூவா அருங்காட்சியகம்

மனிதத் தலையும், காளையின் உடலும், சிறகுகளும் கொண்ட லம்மசு சிற்பங்களின் உடலில் அழகிய மணிகள் செதுக்கப்பட்டுள்ளது.

கிமு 3,0000 ஆண்டுகளுக்கு முன்னர், மனிதத் தலையும், இறகுகளுடன் கூடிய இது போன்ற சிற்பங்கள், பண்டைய அண்மை கிழக்கின் எப்லா இராச்சியத்தில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டதாக அகழாய்வுக் குறிப்புகள் கூறுகிறது. லம்மசு சிற்பங்கள் அசிரியர்களின் வீரத்தின் அடையாளமாக குறிக்கப்படுகிறது.[8][9]

அசிரியர்களின் அரண்மனை நுழைவாயில்களின் இருபுறங்களிலும் மற்றும் அரசவை மண்டபங்களிலும் லம்மசு சிற்பங்கள் காணப்படுகிறது.

ஐந்து சிங்கக் கால்களுடன் லம்மசு சிற்பம், பெர்லின் அருங்காட்சியகம்

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Dur-Sharrukin
  2. Kriwaczek, Paul. Babylon: Mesopotamia and the Birth of Civilization, p. 37.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-08. Retrieved 2018-07-22.
  4. "Livius.org". Archived from the original on 2011-08-24. Retrieved 2018-07-22.
  5. Beaulieu, Paul-Alain (2003). The Pantheon of Uruk During the Neo-Babylonian Period. Brill. ISBN 90-04-13024-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
  6. Hewitt, J.F. History and Chronology of the Myth-Making Age. p. 85.
  7. W. King, Leonard. Enuma Elish Vol 1 & 2: The Seven Tablets of Creation; The Babylonian and Assyrian Legends Concerning the Creation of the World and of Mankind. p. 78.
  8. "History – Mesopotamia". பிபிசி. http://www.bbc.co.uk/history/ancient/cultures/mesopotamia_gallery_09.shtml. 
  9. "Lamassu". ancientneaeast.net.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லம்மசு&oldid=3714956" இலிருந்து மீள்விக்கப்பட்டது