லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ்த் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் | |
---|---|
![]() 2017 ஆம் ஆண்டில் லட்சுமி ராமகிருஷ்ணன் | |
பிறப்பு | கேரளா, இந்தியா |
தேசியம் | ![]() |
பணி | நடிகை, வசனகர்த்தா, இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்சமயம் வரை |
வாழ்க்கைத் துணை | ராமகிருஷ்ணன் |
பணி
[தொகு]இவர் ஆடை வடிவமைப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார். இவர் திரைப்படத்துறையில் தடம் பதிக்கும் முன்னர் 1992 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமானில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி வந்தார்.[1]
திரைப்படத் துறையில்
[தொகு]இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குநராகவும் பணியாற்றத் தொடங்கினார்.[1] 2006 ஆம் ஆண்டில் சக்கரமுத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் கரு. பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக நடித்தார். இதுவே இவரது முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] பிரனயகாலம், சூலை 4, நவல் ஆகிய மலையாளத் திரைப்படங்களில் 2006 - 2008 வரையான காலப்பகுதியில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் பொய் சொல்லப் போறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டில் திரு திரு திரு, ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கள் ஏற்றார். 2010 ஆம் ஆண்டில் விண்ணைத் தாண்டி வருவாயா, ஆண்மைத் தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், கனிமொழி ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும், யே மாயா சேசாவே என்ற தெலுங்குத் திரைப்படத்திலும் நடித்தார். 2011 ஆம் ஆண்டில் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் தன் மகளின் இறப்பிற்கு பழிவாங்க துடிக்கும் கோபமான தாயாக சித்தரிக்கப்பட்டார்.[3] மேலும் 2012 ஆம் ஆண்டில் ஏக் தீவானா தா என்ற இந்தித் திரைப்படத்திலும் லீலை, விளையாட வா ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சுட்ட கதை, விடியும் முன், நெருங்கி வா முத்தமிடாதே, பியானிஸ்ட் ஆகியவற்றிலும், 2016 ஆம் ஆண்டில் கதகளி, அம்மணி ஆகியவற்றிலும் 2018 ஆம் ஆண்டில் இரவுக்கு ஆயிரம் கண்கள், திமிரு புடிச்சவன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.
தொலைக்காட்சியில்
[தொகு]2008 ஆம் ஆண்டில் தி ஆபிசர் என்ற மலையாள நாடகத்தொடரிலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் அவள் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் 1500 அத்தியாயங்களை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் 25இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இயக்குநராக
[தொகு]2012 ஆம் ஆண்டில் ஆரோகணம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.[2] இத்திரைப்படம் இயக்குனாராக இவரது முதல் திரைப்படம் ஆகும். உளநோய் தொடர்பான இப்படத்திற்காக பாராட்டப்பட்டார்.[4] இந்த்ப் படம் 7 வது விஜய் விருதுகளில் சிறப்பு ஜுரி விருதை வென்றது. மேலும் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
விருதுகளும் பரிந்துரைகளும் (திரைப்படங்கள்)
[தொகு]2007 ஆம் ஆண்டில் ஆசிநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக பரிந்துரை பெற்றார். 2011 ஆம் ஆண்டில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் துணை நடிகைக்கான தமிழ்நாட்டு மாநில விருதை வென்றார். 2012 ஆம் ஆண்டில் எடிசன் விருதை வென்றதுடன், விஜய் விருதுகளில் துணை நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்.[5] 2017 ஆம் ஆண்டில் சாகோபினேட் சுவர்கராஜ்யம் என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தமைக்காக ஆசிநெட் திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகளிலும் பரிந்துரைகளைப் பெற்றதோடு 6வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகளில் துணை நடிகைக்கான விருதை வென்றார்.
திரைத்துறை
[தொகு]நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2006 | சக்கர முத்து | மலையாளம் | ||
2008 | பிரிவோம் சந்திப்போம் | தமிழ் | ||
2007 | ஜூலை 4 | மலையாளம் | ||
2008 | பொய் சொல்லப் போறோம் | தமிழ் | ||
2009 | திரு திரு துறு துறு | கவிதா சீனிவாசன் | தமிழ்l | |
2009 | ஈரம் | தமிழ் | ||
2009 | நாடோடிகள் | தமிழ் | ||
2009 | வேட்டைக்காரன் | தமிழ் | ||
2010 | விண்ணைத் தாண்டி வருவாயா | தெரெசா | தமிழ்l | |
2010 | யே மாயா சேசாவே | தெரெசா | தெலுங்கு | |
2010 | ஆண்மை தவறேல் | மேரி | தமிழ் | |
2010 | ராவணன் (திரைப்படம்) | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2010 | நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) | தமிழ் | ||
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | சிவகாமி | தமிழ் | |
2010 | கனிமொழி | தமிழ் | ||
2011 | யுத்தம் செய் | அன்னபூரணி | தமிழ் | |
2011 | சிங்கம் புலி | தமிழ் | ||
2011 | பொன்னர் சங்கர் | சிலம்பாயி | தமிழ் | |
2011 | 180 | தெலுங்கு | ||
2011 | 180 (திரைப்படம்) | தமிழ் | ||
2011 | வயலின் | ஆனி | மலையாளம் | |
2011 | ரௌத்திரம் | லட்சுமி | தமிழ்l | |
2011 | ஓ மை பிரண்டு | தெலுங்கு | ||
2011 | உச்சிதனை முகர்ந்தால் | மரு. ரேகா | தமிழ் | |
2012 | ஏக் தீவானா தா | இந்தி | ||
2012 | நெல்லை சந்திப்பு | தமிழ் | ||
2012 | லீலை | தமிழ் | ||
2013 | சென்னையில் ஒரு நாள் | தமிழ் | ||
2013 | பியானிஸ்ட் | மலையாளம் | படப்பிடிப்பில் | |
2013 | நையாண்டி | தமிழ் | படப்பிடிப்பில் |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". IndiaGlitz.com. Archived from the original on 2014-08-13. Retrieved 2019-11-03.
- ↑ 2.0 2.1 "Lakshmi- Another lady director in K'wood". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2019-11-03. Retrieved 2019-11-03.
- ↑ "LAKSHMI RAMAKRISHNAN INTERVIEW". www.videos.behindwoods.com. Retrieved 2019-11-03.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Aarohanam Movie Review {4/5}: Critic Review of Aarohanam by Times of India, retrieved 2019-11-03
- ↑ "Vijay Awards". web.archive.org. 2013-04-19. Archived from the original on 2013-04-19. Retrieved 2019-11-03.