ஆண்மை தவறேல்
ஆண்மை தவறேல் | |
---|---|
இயக்கம் | குழந்தை வேலப்பன் |
திரைக்கதை | குழந்தை வேலப்பன் |
இசை | மரியா மனோகர் |
நடிப்பு | துருவா சுருதி சம்பத் ராஜ் சுப்பு பஞ்சு அருணாச்சலம் |
ஒளிப்பதிவு | அர்பிந்து சாரா |
படத்தொகுப்பு | வி ஜே சாபு ஜோசப் |
கலையகம் | ரெட்ஹெட் என்டர்டெயின்மன்ட் |
வெளியீடு | சூன் 3, 2011 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண்மை தவறேல் (Aanmai Thavarael) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்ற பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். இதை குழந்தை வேலப்பன் எழுதி இயக்கினார்.[1] இந்தப் படத்தில், புதுமுகங்கள் துருவா, ஸ்ருதி, சம்பத் ராஜ், பஞ்சு சுப்பு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். இது மாந்தக் கடத்துகை பற்றிய படமாகும்.[2] இது 2011 சூன் 3 அன்று வெளியானது.[3]
நடிப்பு
[தொகு]- துருவா வெற்றியாக
- சுருதி யமுனாவாக
- சம்பத் ராஜ் சார்லஸ் ஆண்டனியாக
- சுப்பு பஞ்சு அருணாச்சலம் மிஸ்டர் ஏ வாக
- ஜான் விஜய் 'ஆந்திரா' பிரசாதாக
- அன்னி கில் கேரளப் பெண்ணாக
- சுலில் குமார் பவனாக
- லட்சுமி ராமகிருஷ்ணன் மேரியாக
- தீபிகா காமையா
- கிரேன் மனோகர்
- மனோபாலா
- தரன்
- நந்தா சரவணன் காவலராக
இசை
[தொகு]இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்தார்.[4][5]
- "நோனா நோனா" - தேவ், கிருத்திகா
- "காதல் அடைமழை" - கிரிஷ், ரம்யா
- "வழியில் தொலைந்து" - பத்மலதா
- "சதா சதா" - கார்த்திகேயன், நவீன், வெங்கட் ரெங்கநாதன்
வரவேற்பு
[தொகு]பிஹைண்ட்வுட்ஸ் எழுதிய விமர்சனத்தில் "முதலில், அத்தகைய தைரியமான விஷயத்தைக் கொண்டு வந்த குழுவுக்கு வாழ்த்துக்கள். படத்தின் கதை தரமானதாக படத்தை உயர்ந்த நிலையில் வைக்கிறது. இயக்குநருக்கு தெளிவான கவனம் உள்ளது. குற்றம் மற்றும் காவல்துறை செயல்படும் வழியைக் காட்டுவதில், அவர் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெறுகிறார் ".[6] நியூஸ் 18 எழுதியதில் "அறிமுக எழுத்தாளர்-இயக்குனர் குழந்தை வேலப்பன் தனது கதையை மையமாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது கதை விவரிப்பை சீரான வேகத்தில் நகர்த்துகிறார்".[7] நவ்ரன்னிங் எழுதுகையில் "ஆண்மை தவறேல் ஒரு நீண்ட, மந்தமான படம், நீங்கள் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் உங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது".[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cinema Plus / Columns : Crime file". தி இந்து. 22 May 2011. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Manigandan K R (11 May 2011). "Aanmai Thavarael addresses a grave issue". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 11 June 2011. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Friday Fury- 3 June". Sify.com. 5 June 2011. Archived from the original on 20 August 2015. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-08-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/jun-11-01/aanmai-thavarel-review.html
- ↑ https://www.news18.com/news/india/tamil-review-aanmai-thavarael-a-good-first-film-374009.html
- ↑ https://www.nowrunning.com/movie/8161/tamil/aanmai-thavarael/3132/review.htm