ரேடியோ பேகம்
சேவை பகுதி | ஆப்கானித்தான் |
---|---|
சேவைகள் | கல்வி வானொலி ஒலிபரப்புகள் |
ஆட்சி மொழி | பஷ்தூ மொழி, தாரி மொழி |
நிதியுதவி | ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம், மலாலா நிதி, தனியார் நிதியுதவியுடன் தொடர்புடைய சர்வதேச தொடர்பாடல் மேம்பாட்டுத் திட்டம் |
வலைத்தளம் | https://begum.ngo/our-story |
ரேடியோ பேகம் (Radio Begum) என்பது பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆப்கானிய கல்வி வானொலி நிலையமாகும். தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளின் பின்னணியில், ஆப்கானித்தானின் தொழில்முனைவோரும் பத்திரிகையாளருமான அமிதா அமான் என்பவரால் அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்படும் தினத்துடன் இது 8 மார்ச் 2021 அன்று உருவாக்கப்பட்டது. மேலும் இது 8 டிசம்பர் 2020 அன்று நிறுவப்பட்ட பெண்களுக்கான பேகம் அமைப்பால் நடத்தப்படுகிறது. இது பண்பலை ஒலிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் வழியாக காபுலுக்கும் மேலும் கிராமப்புற சுற்றுப்புறங்களுக்கும் நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் ஒலிபரப்பப்படுகிறது, இது நாட்டின் சுமார் முக்கால்வாசி பகுதியை உள்ளடக்கியது. மார்ச் 8,2024 அன்று அதன் சகோதர ஒளிபரப்பு நிறுவனமான பேகம் தொலைக்காட்சி நிறுவனம் பாரிசில் மலாலா_நிதியின் மானியத்துடன் தொடங்கப்பட்டது. 7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானியப் பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய காணொளி பாடநெறிகளை செயற்கைக்கோள் மூலம் வழங்கும் பணியை இவ்வானொலி செய்தது.[1][2]
தோற்றம்
[தொகு]முன்பு ஆட்சியில் இருந்தபோது பெண்களின் கல்வியை ஒடுக்கிய தலிபான்கள் ஆட்சிக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளின் பின்னணியில், அனைத்துலக பெண்கள் நாளை ஒட்டி 2021 மார்ச் 8 அன்று இந்த நிலையம் தொடங்கப்பட்டது. பேகம் என்றால் இளவரசி அல்லது உயர் அந்தஸ்து அல்லது பொறுப்பைக் கொண்ட பெண் என்று பொருள்.
ஒளிபரப்பு மற்றும் நிரலாக்கம்
[தொகு]2023 ஆம் ஆண்டில் இந்த வானொலி நிலையம் அதன் ஆறு அலைபரப்பிகள் மூலம் தினமும் சுமார் 600,000 வீடுகளால் கேட்கப்படுகிறது. மேலும் கூடுதலாக நான்கு அலைபரப்பிகளைப் பயன்படுத்த அனுமதியும் உள்ளது.[3] இதன் நிறுவனர் அமிதா அமானின் கூற்றுப்படி, ரேடியோ பேகம் ஆப்கானித்தானில் முதலிடத்தில் உள்ள தனியார் வானொலி நிலையமாகும்.[4]
ஆகஸ்ட் 15,2021 அன்று தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வியை இழந்த நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வானொலி நிலையம் படிப்புகளை வழங்குகிறது.[5] நாட்டின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான தாரி மொழியில் காலையிலும், பஷ்தூ மொழியில் மாலையிலும் நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புகிறது.
வரம்புகள்
[தொகு]ரேடியோ பேகம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இது கூடுதலாக கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், பெண்களை இலக்காகக் கொண்ட தலைப்புகளை வழங்க வேண்டும், மேலும் பெண்களுக்கு தனி இடம் இருக்க வேண்டும்.[6] இது இனி ஆப்கானிய அல்லது வெளிநாட்டு இசையை ஒளிபரப்பாது, ஆனால் இறைவாக்கினரையும் கடவுளையும் மகிமைப்படுத்தும் மத இசையை மட்டுமே ஒளிபரப்புகிறது.[6]
பிப்ரவரி 4, 2025 அன்று, வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உள்ளடக்கம் மற்றும் நிகழ்ச்சிகளை “அங்கீகரிக்கப்படாத வகையில் வழங்கியதற்காக ”ரேடியோ பேகத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க தலிபான்கள் உத்தரவிட்டனர்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Begum Organization for Women is using television to give Afghan girls access to education, retrieved 24 August 2024
- ↑ Launch of Begum TV, retrieved 23 August 2024
- ↑ Radio Begum : la seule radio afghane à être fabriquée par des femmes pour des femmes (in பிரெஞ்சு), 2023-04-11, retrieved 2024-04-27
- ↑ Antoine Michel (2024-04-18). "La fondatrice de Radio Begum, la voix des Afghanes : "Nous sommes sans cesse confrontées à des embûches"". Radio télévision suisse (in பிரெஞ்சு). Retrieved 2024-04-27.
- ↑ "À Kaboul, Radio Begum, le seul média à fournir un accès à l'éducation des filles". Madame Figaro (in பிரெஞ்சு). 2022-04-11. Retrieved 2024-04-27.
- ↑ 6.0 6.1 Afghanistan: pour continuer à travailler, les femmes doivent s'adapter (in பிரெஞ்சு), 2021-11-13, retrieved 2024-04-27
- ↑ "The Taliban suspend Afghan women's radio station for providing content to overseas TV channel". AP News (in ஆங்கிலம்). 2025-02-05. Retrieved 2025-02-05.
- 2024 documentary: Afghanistan: Radio Begum, la voix des résistantes (in French), Arte Reportage, Producer: Solène Chalvon-Fioriti