உள்ளடக்கத்துக்குச் செல்

மலாலா நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாலா நிதி
உருவாக்கம்2013
நிறுவனர்கள்மலாலா யூசப்சையி
சியாவுத்தீன் யூசப்சையி
வகை501(c)(3) தொண்டு நிறுவனம்
81-1397590
நோக்கம்பெண்களின் கல்வி, கல்வி உரிமை
தலைமையகம்வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இலீனா ஆலிப்
பணிக்குழாம்
48
வலைத்தளம்www.malala.org

மலாலா நிதி (Malala Fund) என்பது பெண்கள் கல்விக்காக வாதிடும் ஒரு சர்வதேச, இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது பெண் கல்வி உரிமைக்கான பாக்கித்தான் ஆர்வலரும், இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசப்சையி மற்றும் அவரது தந்தை சியாவுத்தீன் யூசப்சையி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது.[1][2][3] ஒவ்வொரு பெண்ணுக்கும் 12 ஆண்டுகள் இலவச, பாதுகாப்பான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோள்.[4] ஜூலை நிலவரப்படி, இந்த அமைப்பு 48 ஊழியர்களைக் கொண்டுள்ளது. ஆப்கானித்தான், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா, லெபனான், நைஜீரியா, பாக்கித்தான் மற்றும் துருக்கி முழுவதும் பணிபுரியும் 58 வழக்கறிஞர்களை ஆதரிக்கிறது.[5][6]

வரலாறு

[தொகு]

2013 ஆம் ஆண்டில் மலாலா நிதிக்கு முதல் பங்களிப்பு அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜோலியிடமிருந்து பெறப்பட்டது. அவர் தனிப்பட்ட முறையில் 200,000 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்தார். இது மலாலா வசிக்கும் பாக்கித்தானின் சுவாத் பள்ளத்தாக்கிலுள்ள பெண்கள் கல்விக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டது.[7][8]

2014 ஆம் ஆண்டில், கென்யாவின் கிராமப்புறங்களில் அனைத்து பெண்களுக்கமான மேல்நிலைப் பள்ளியைக் கட்டியெழுப்ப மலாலா நிதி உதவியது. மேலும் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் 2014 இல் பாக்கித்தானில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிப் பொருட்கள் மற்றும் தொடர்ச்சியான கல்வியை வழங்க இந்நிதி உதவியது.[9][10]

2015 ஆம் ஆண்டில், எபோலா நோய் பரவல் காரணமாக சியேரா லியோனி அரசாங்கம் பள்ளிகளை மூடியபோது, மலாலா நிதி வானொலி மூலம், 1,200 ஓரங்கட்டப்பட்ட சிறுமிகளுக்கு கல்வியைத் தொடர வகுப்பறைகளை உருவாக்கியது.[11][12] நைஜீரியா சிறுமிகளுக்கான மலாலா வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, போகோ அராம் கடத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட சிபோக் பள்ளி மாணவிகளுக்கு அவர்களின் இடைநிலைக் கல்வியை முடிக்க மலாலா நிதி முழு உதவித்தொகையையும் உறுதியளித்தது.[13][14] 12 ஜூலை 2015 அன்று, தனது 18 வது பிறந்தநாளில், சிரிய அகதிகளுக்காக லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் மலாலா நிதி மூலம் நிதியளிப்பதாக மலாலா அறிவித்தார்.[15][16]

2016 ஆம் ஆண்டில், மலாலா தனது பிறந்தநாளுக்காக தாதாப் அகதிகள் முகாமுக்குச் சென்று, மலாலா நிதியத்தால் ஆதரிக்கப்படும் தலைமைத்துவம் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் குறித்த வழிகாட்டுதல் திட்டத்தில் பங்கு கொண்ட அகதி சிறுமிகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.[17] 2016 டிசம்பரில், பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை வளரும் நாடுகளில் கல்வியை ஆதரிப்பதற்காக மலாலா நிதியம் கல்விக்கென ஒரு வலையமைப்பு என்ற ஒரு திட்டத்தைத் தொடங்க உதவுவதற்காக $4 மில்லியனை அளித்தது.[18][19]

ஆராய்ச்சி மற்றும் வாதம்

[தொகு]

மலாலா, அவரது தந்தை சியாவுத்தீன், மலாலா நிதியத்தின் ஊழியர்கள், கல்வி வலையமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளம் கல்வி ஆர்வலர்கள் பல மாநாடுகளில் பங்கேற்கிறார்கள். மேலும், பெண்கள் கல்விக்காக வாதிட அரசியல் தலைவர்களை சந்திக்கிறார்கள்.[20][21][22][23] பெண்கள் கல்விக்கான நிதியை அதிகரிப்பதும், சிறுவர் திருமணம், குழந்தைத் தொழிலாளர், மோதல் மற்றும் பாலின வாதம் போன்ற பெண்களைப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் தடைகளை நீக்குவதும் இதன் குறிக்கோள்களாகும்.[24][25] மலாலா நிதி, புரூக்கிங்ஸ் நிறுவனம், உலக வங்கி மற்றும் மேம்பாட்டுக்கான முடிவுகள் ஆகியவற்றுடன் இணைந்து சிறுமிகளின் இடைநிலைக் கல்வியின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி நடத்தியுள்ளது.

ஜூன் 2018 இல், ஜி-7 நாடுகள் மற்றும் உலக வங்கி இணைந்து பெண்கள் கல்விக்காக 2 பில்லியன் டாலர் பெற மலாலா நிதி உதவியது.[26][27]

ஜூலை 2018 இல், மலாலா நிதி பெண்கள் கதைகளை எண்ணிம முறையில் அறிமுகப்படுத்தியது.[28][29] வலை பிரிவில் மின்னஞ்சல் செய்திமடலுக்கான 2020 வெப்பி விருதை மலாலா நிதி வென்றது.[30]

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]

2015 ஆம் ஆண்டு வெளியான ஹி நேம்டு மீ மலாலா என்ற ஆவணப்படத்திலும், மலாலாவின் சுயசரிதையான ஐ ஆம் மலாலா ஆகியவற்றிலும் இந்த அமைப்பைப் பற்றிய செய்தி இடம்பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hauser, Christine (5 April 2013). "Malala Yousafzai Announces Grant for Girls' Education". The New York Times. Retrieved 27 August 2018.
  2. Whitcraft, Teri (4 February 2013). "Malala Yousafzai Is Grateful for Her 'Second Life,' Creates Malala Fund for Girls' Education". ABC News. Retrieved 29 August 2018.
  3. Leber, Jessica (1 September 2015). "How Teenage Activist Malala Yousafzai Is Turning Her Fame Into A Movement". Fast Company. Retrieved 27 August 2018.
  4. Ong, Thuy (22 January 2018). "Apple partners with Malala Yousafzai's Malala Fund to help advance girls' education". The Verge. Retrieved 28 August 2018.
  5. "Malala Fund Staff". Malala Fund. Retrieved 30 July 2020.
  6. "Malala Fund welcomes 22 advocates as Education Champions and expands into Ethiopia". Malala Fund. Retrieved 30 July 2020.
  7. Frith, Maxine (5 April 2013). "Angelina Jolie Donates $200,000 To Malala Fund". Huffington Post. Retrieved 27 August 2018.
  8. Barker, Faye (5 April 2013). "Malala announces first grant from fund set up in her name". ITV News. Retrieved 29 August 2018.
  9. Smith, Hayden (5 July 2014). "Malala takes education bid to Kenya". Times of Malta. Retrieved 28 August 2018.
  10. "Malala Fund Giving 2014: Who You Helped Support". Malala Fund. 14 January 2015. Retrieved 28 August 2018.
  11. Poon, Linda (18 February 2015). "Now This Is An Example Of Truly Educational Radio". National Public Radio. Retrieved 28 August 2018.
  12. "World Radio Day". Malala Fund. 9 February 2015. Retrieved 28 August 2018.
  13. Umar, Haruna (19 July 2017). "Malala speaks out against Boko Haram in Nigeria". USA Today. Retrieved 28 August 2018.
  14. Levs, Josh (13 April 2015). "Malala's letter to Nigeria's abducted schoolgirls: 'solidarity, love, and hope'". CNN. Retrieved 28 August 2018.
  15. Westall, Sylvia (13 July 2015). "Nobel winner Malala opens school for Syrian refugees". Reuters. Retrieved 28 August 2018.
  16. Mendoza, Jessica (13 July 2015). "Malala Yousafzai's birthday request: investment in 'books, not bullets'". The Christian Science Monitor. Retrieved 29 August 2018.
  17. Opile, Caroline (12 July 2016). "Malala Celebrates her 19th Birthday with Refugees in Dadaab". UNHCR. Retrieved 28 August 2018.
  18. "The Malala Fund – Bill & Melinda Gates Foundation". Bill & Melinda Gates Foundation. December 2016. Retrieved 27 August 2018.
  19. "Malala Fund Partners". Malala Fund. Retrieved 27 August 2018.
  20. "Malala Fund Advocacy". Malala Fund. Retrieved 27 August 2018.
  21. Heil, Emily (23 June 2015). "Malala Yousafzai visits Capitol Hill to advocate for girls' education". https://www.washingtonpost.com/news/reliable-source/wp/2015/06/23/malala-yousafzai-visits-capitol-hill-to-advocate-for-girls-education/. பார்த்த நாள்: 29 August 2018. 
  22. "15 women speak up on the power of education". Global Partnership for Education. 9 March 2018. Retrieved 29 August 2018.
  23. Rolenc, Sharon (3 October 2016). "From Yemen to the United Nations: St. Kate's student advocates for women's education". St. Catherine University News. Retrieved 29 August 2018.
  24. Royle, Taylor; Johnston, Barry (21 June 2017). "G20 Will Never Get Women to Work Without Investing in Girls' Education". News Deeply. Retrieved 10 September 2018.
  25. Watson, Emma (8 March 2018). "Emma Watson and Malala Yousafzai: two activists on how empowering women begins with education". Vogue Australia. Retrieved 28 August 2018.
  26. "$3 billion pledged for girls education at G7, delighting Malala". 10 June 2018. https://economictimes.indiatimes.com/news/international/world-news/3billion-pledged-for-girls-education-at-g7-delighting-malala/articleshow/64526609.cms. 
  27. Mohamed, Farah (6 June 2018). "MALALA FUND ADVOCACY: The key to unlocking girls' potential". The Global Governance Project. Retrieved 10 September 2018.
  28. "Assembly Issue Archive". Malala Fund. Retrieved 28 August 2018.
  29. Seshadri, Aditi (6 July 2018). "Malala Yousafzai's global non-profit launches a new digital publication". Vogue India. Retrieved 28 August 2018.
  30. Kastrenakes, Jacob (20 May 2020). "Here are all the winners of the 2020 Webby Awards". The Verge (in ஆங்கிலம்). Retrieved 22 May 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாலா_நிதி&oldid=4211313" இலிருந்து மீள்விக்கப்பட்டது