ரேடியம் ஆக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12143-02-1 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
ORa | |
வாய்ப்பாட்டு எடை | 242.00 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
நீருடன் வினை புரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ரேடியம் ஆக்சைடு (Radium oxide) என்பது RaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]ரேடியம் உலோகத்தை காற்றில் எரித்தால் ரேடியம் ஆக்சைடு உருவாகிறது.:[2]
- 2Ra + O2 → 2RaO
இவ்வினையில் அநேகமாக ரேடியம் நைட்ரைடும் ரேடியம் பெராக்சைடும் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன:
- 3Ra + N2 → Ra3N2
- Ra + O2 → RaO2
வேதிப் பண்புகள்
[தொகு]ரேடியம் ஆக்சைடு தண்ணீருடன் வினைபுரிந்து ரேடியம் ஐதராக்சைடு உருவாகிறது.
- RaO + H2O → Ra(OH)2
பயன்கள்
[தொகு]கதிரியக்கச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிற ரேடியம் சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக ரேடியம் ஆக்சைடு பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alkali Metals—Advances in Research and Application: 2013 Edition: ScholarlyBrief (in ஆங்கிலம்). ScholarlyEditions. 21 June 2013. p. 57. ISBN 978-1-4816-7240-5. Retrieved 8 June 2023.
- ↑ Ropp, Richard C. (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds (in ஆங்கிலம்). Newnes. p. 115. ISBN 978-0-444-59553-9. Retrieved 8 June 2023.