உள்ளடக்கத்துக்குச் செல்

ராதிகா சந்தான கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராதிகா சந்தானகிருஷ்ணன் (பிறப்பு 02.10.1954 ) பெண் நலம்[1] என்னும் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியவர். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இவர், பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். புற்றுநோயால் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் மனரீதியான ஆதரவு ஆகியவற்றையும் பெண்நலம் அமைப்பு வழங்குகிறது[2]. 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராதிகா சந்தான கிருஷ்ணன் அதிலிருந்து மீண்டு வந்து 2009 ஆம் ஆண்டு பெண் நலம் அமைப்பை தொடங்கினார்.

கல்வி

[தொகு]

சென்னை சர்ச் பார்க் பள்ளியில் கல்விப்படிப்பை முடித்த இவர், மார்கெடிங் துறையில் முதுகலை பட்டவியல் பயின்றுள்ளார்.

பெண்நலத்தின் நிறுவனர்

[தொகு]

2009 ஆம் ஆண்டு ’பெண்நலம்’ சிறியதொரு மருத்துவமனையாக தொடங்கப்பட்டது. பின்பு அந்த சிறிய குழு விழிப்புணர்வு மற்றும் மருத்துவக் குழு என்று பிரிக்கப்பட்டு பணியாற்றத் தொடங்கியது.

குறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதுடன், மக்களை கவரும் வகையில் பொம்மலாட்டம், நாடகம், ஆவணப்படம் என பல்வேறு வழிகளில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் ’பெண்நலம்’ அமைப்பினர்.

விருதுகள்

[தொகு]

2010 ஆம் ஆண்டு, ராஜ் டிவியின் அந்த ஆண்டிற்கான சிறந்த பெண் விருது.[3]

2012 ஆம் ஆண்டு நந்தலாலா சேவா சமிதியின் நந்தா தீபம் விருது.

2012 ஆம் ஆண்டு எக்ஸ்னோரா அமைப்பின் ஸ்ரீ ரத்ன விருது.

2012 ஆம் ஆண்டு லயன்ஸ் கிலப்பின் வாழ்நாள் சாதனை விருது.

குறிப்புகள்

[தொகு]
  1. http://pennalamhospital.org/
  2. http://www.bbc.com/tamil/india-38078432
  3. http://www.adgully.com/raj-tv-felicitates-women-achievers-46022.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_சந்தான_கிருஷ்ணன்&oldid=2734425" இலிருந்து மீள்விக்கப்பட்டது