உள்ளடக்கத்துக்குச் செல்

ராணா ஜாஷ்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராணா ஜாஷ்ராஜ் என்பவர் பஞ்சாப், சிந்து, குஜராத் போன்ற மாநிலங்களில் வசிக்கும் லோகனா சாதியினரால் குலதெய்வமாக வணங்கப்படும் புராண வீரராவார். [1] [2] மேலும் அவர் வீர் தாதா ஜாஷ்ராஜ் என்ற பெயருக்கு உயர்த்தப்பட்டார், .ஜாஷ்ராஜின் நினைவாக, வசந்த பஞ்சமி ( இந்து நாட்காட்டியின்படி வசந்த காலத்தின் ஐந்தாவது நாள்) வீர் தாதா ஜாஷ்ராஜின் (பலிதானி திவாஸ்) தியாகி தினமாக கொண்டாடப்படுகிறது.

வீர் தாதா ஜாஷ்ராஜ் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பஞ்சாப், சிந்து, குஜராத் மாநிலத்தின் லோகனா, பானுசாலி, காத்ரி மற்றும் சரஸ்வத் பிராமண சமூக மக்களால் வணங்கப்படும் தெய்வமாகும்.

அவர்களின் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளின்படி, 1205 மற்றும் 1231 க்கு இடையில் வாழ்ந்த வீரரான ஜாஷ்ராஜ், தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்தில் காத்திருந்தபோது, காபூலில் இருந்து வந்த எதிரிகள் இந்துக்களால் புனித விலங்காக வணங்கப்படும் பசுக்களை திருடுவதை அறிந்து, திருமணத்தை ஒத்திவைத்து விட்டு கால்நடைகளைக் காப்பாற்ற எதிரிகளை எதிர்கொண்டு போரிட்டார். அவரோடு அவரது சகோதரி ஹர்கோரும் போரில் உதவி செய்தார். ஜாஷ்ராஜ் வெற்றி பெற்று, எதிரி இறுதியில் தோற்கடிக்கப்பட்டாலும்,  எதிரிகளின் மறைமுக உத்தியின் விளைவாக அவன் கொல்லப்பட்டான். அவர் லோகனாக்கள் மற்றும் பானுசாலிகளால் வீர் தாதா ஜாஷ்ராஜ் என்றும் அவரது சகோதரி ஹர்கோர் லோகனா குல மக்களால் '''குலதேவி''' என்றும் வணங்கப்படுகிறார்.

இன்றளவும் லோகனாக்கள் தாதா ஜாஷ்ராஜை தங்கள் நாட்டுப்புற தெய்வம் அல்லது குலதெய்வம் என்று கருதுகின்றனர், மேலும் குதிரையில் சவாரி செய்யும் தாதா ஜாஷ்ராஜின் உருவ சிலைக்கு பேரிச்சம்பழம் மற்றும் வெல்லம் போன்றவைகளை  படையல் செய்து பிரசாதமாக வழங்கும் வழக்கம் உள்ளது. முன்னதாக, பூஜை செய்யும் போது வெள்ளை ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பழக்கம் லோகனாக்களால் மறக்கப்பட்டு புதுமணத் தம்பதிகள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாதா ஜாஷ்ராஜை வணங்கி வருகிறார்கள். [2]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • ராணா வச்சராஜ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thakur, Upendra (1959). Sindhi Culture. University of Bombay. p. 175.
  2. 2.0 2.1 Lachaier, Pierre (1999). Firmes et entreprises en Inde: Ia firme lignagere dans ses reseaux. KARTHALA Edition. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-86537-927-9.Lachaier, Pierre (1999). Firmes et entreprises en Inde: Ia firme lignagere dans ses reseaux. KARTHALA Edition. p. 70. ISBN 978-2-86537-927-9.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள லோகனாஸ், ரோஹித் பரோட், சமூகவியல் துறை, சிறுபான்மையினர் மற்றும் சமூக மாற்றம் பற்றிய ஆய்வு மையம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் [1] https://commons.wikimedia.org/wiki/File:Veer_Jasraj_Dada.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_ஜாஷ்ராஜ்&oldid=3780671" இலிருந்து மீள்விக்கப்பட்டது