பானுசாலி
பானுசாலி | |
---|---|
மொழிகள் | குசராத்தி, கச்சு, மராத்தி, இந்தி, சிந்தி |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | குசராத்து, மகாராட்டிரம் |
உட்பிரிவுகள் | கோரி, பத்ரா, ஜோய்சர், கஜ்ரா, மாஞ்ஜி, சேட் |
பானுசாலி (Bhanushali) ஒரு இந்து சமூகம் ஆகும். பெரும்பான்மையானவர்கள் இந்திய மாநிலமான குசராத்தின் கச்சு மாவட்டத்தில் வசிக்கின்றனர். சிலர் சௌராட்டிரா பகுதியிலும் குசராத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.[1] சிலர் மகாராட்டிராவின் தானே மற்றும் மும்பை பகுதிகளுக்கும் சென்று வசிக்கின்றனர். இவர்கள் மராத்தி மொழி பேசுகின்றனர்.
வரலாறு
[தொகு]பானுசாலிகள் முக்கியமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆவர்.[2] இவர்கள் தங்களை சத்திரிய வம்சாவளியினர் என்று கூறினாலும்[3] ஹிங்குலாஜ் மாதாவை வணங்கியதன் அடிப்படையில் பானுசாலிகள் குசராத்திலிருந்து குடிபெயர்ந்ததாக ஜோதிந்திர ஜெயின் கருதுகிறார். லோஹானாக்களும் பானுசாலிகளும் குசராத்திற்கு குடிபெயர்வதற்கு முன்பு ஒரே இனமாக வாழ்ந்தவர்கள் என ஜெயின் நம்பினார்.
சமூகங்கள்
[தொகு]பானுசாலிகள் தற்போது தாங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இரண்டு துணைக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குச்சி பானுசாலி சமூகம் (கச்சு பிராந்திய வம்சாவளியினர்) மற்றும் ஹலாய் பானுசாலி சமூகம் (ஹலார் - ஜாம்நகர் பகுதியில் வம்சாவளியைக் கொண்டுள்ளனர்).[4]
தொழில்
[தொகு]பானுசாலிகள் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது.
மதம்
[தொகு]பானுசாலிகள் தங்கள் குலப்பெயர்கள் / குடும்பப்பெயர்களின்படி வெவ்வேறு குலதெய்வங்களை வணங்குகிறார்கள்.[5] இவர்கள் இந்து மத பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றுகிறார்கள்.[6] இவர்கள் வீர் தாதா ஜாஷ்ராஜை வணங்குகிறார்கள். லோஹானாஸைப் போலவே, இவர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். பானுசாலிகள் முக்கியமாக ஹிங்லாஜை வழிபடுகிறார்கள். இவர்களின் முக்கிய கோயிலான ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோயில் இவர்களின் மூதாதையர் வாழ்ந்த பலுச்சிசுத்தானில் உள்ளது.[3]
லோஹானாஸ்
[தொகு]பானுசாலிகள் சிந்துவில் உள்ள தங்கள் ஆரம்பக்கால வசிப்பிடங்களை லோஹானாஸுடன் பகிர்ந்து கொண்டனர்.[3] லோஹானாஸைப் போலவே, பானுசாலிகளும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். லோகனாஸைப் போலவே இவர்கள் தாதா ஜாஷ்ராஜை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள். பல பானுசாலிகளின் குடும்பப்பெயர்களும் லோஹானா சமூகத்தினரிடையே காணப்படுகின்றன.
குறிப்பிடத்தக்க பானுசாலிகள்
[தொகு]- சியாம்ஜி கிருஷ்ண வர்மா, மாண்ட்வி கட்ச் பகுதியைச் சேர்ந்த பானுசாலி சமூகத்தின் இந்தியப் புரட்சிப் போராளி
- ஓதவ்ராம், பானுசாலி குலத்தினரின் கல்வி முன்னோடி, வழிகாட்டி
- தவானி பானுசாலி, இந்தியப் பாடகி[7]
- ஜெய் பானுசாலி, இந்தியத் தொலைக்காட்சி நடிகர்[8]
- கிசோர் பானுசாலி, இந்திய நகைச்சுவை நடிகர்[9]
- சித்தார்த் பானுசாலி, இந்திய யூடியூபர்[10]
- வினோத் பானுசாலி, நிறுவனர் - பானுசாலி ஸ்டுடியோஸ் லிமிடெட் (பிஎஸ்எல்) & ஹிட்ஸ் இசை
- பவின் பானுசாலி, இந்திய நடிகர்
- மருத்துவர் தவல் ஜி பானுசாலி, நியூயார்க் நகரத்தில் உள்ள தோல் மருத்துவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gillow, John (2008). Indian Textiles. Thames & Hudson. pp. 221.
- ↑ Fischer-Tiné, Harald (2015). Shyamji Krishnavarma: Sanskrit, Sociology, Anti-Imperialism. p. 3.
- ↑ 3.0 3.1 3.2 Jain, Jyotindra. Folk art and culture of Gujarat: guide to the collection of the Shreyas Folk Museum of Gujarat.
- ↑ Bhanushalis Samaj (2018). "About Bhanushalis Community பரணிடப்பட்டது 2019-08-09 at the வந்தவழி இயந்திரம்".
- ↑ . 2010.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ Urmi Chanda-Vaz (January 20, 2018). "Indian millennials are embracing religious and spiritual tattoos, as indigenous cultures reject them".
- ↑ "Dhvani Bhanushali Official YouTube Channel". YouTube.
- ↑ "Jay Bhanushali IMDb Page". IMDb.
- ↑ "Kishore Bhanushali IMDb Page". IMDb.
- ↑ "Siddharth Bhanushali Official YouTube Channel". YouTube.