ராஜசாகி கோட்டம்
ராஜசாகி கோட்டம்
রাজশাহী বিভাগ(வங்காளம்) | |
---|---|
வங்காளதேசத்தில் ராஜசாகி கோட்டத்தின் வரைபடம் | |
ராஜசாகி கோட்டத்தின் மாவட்டங்கள் | |
ஆள்கூறுகள்: 25°00′N 89°00′E / 25.000°N 89.000°E | |
நாடு | வங்காளதேசம் |
தலைமையிடம் | ராஜசாகி |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,174.4 km2 (7,017.2 sq mi) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 1,84,84,858 |
• அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (வ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | BD-E |
ம.மே.சு. (2017) | 0.602[1] நடுத்தர |
இணையதளம் | rajshahidiv |
ராஜசாகி கோட்டம் (Rajshahi Division) (வங்காள மொழி: রাজশাহী বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டில் அமைந்த எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். வங்காளதேசத்தில் வடமேற்கில் அமைந்த ராஜசாகி கோட்டம் 18,174.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், 18,484,858 மக்கள் தொகையும் கொண்டது.[2] and a population at the 2011 Census of 18,484,858.[3]ராஜசாகி கோட்டம் எட்டு மாவட்டங்களும், எழுபது துணை மாவட்டங்களும், 1092 கிராம ஒன்றியக் குழுக்களும் கொண்டது.
இக்கோட்டத் தலைமையிட நகரமான ராஜசாகி, தேசியத் தலைநகரான டாக்காவிலிருந்து சாலை வழியாக ஐந்து முதல் ஆறு மணி நேர பயணத் தொலைவில் உள்ளது.
2010-ஆம் ஆண்டு வரி இக்கோட்டம் பதினாறு மாவட்டங்களைக் கொண்டிருந்தது.[2]பின்னார் இக்கோட்டத்தின் வடக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைக் கொண்டு ரங்க்பூர் கோட்டம் துவக்கப்பட்டது.[4]
கோட்ட எல்லைகள்
[தொகு]ராஜசாகி கோட்டத்தின் வடக்கில் ரங்க்பூர் கோட்டமும், கிழக்கில் டாக்கா கோட்டமும், தெற்கில் குல்னா கோட்டமும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாக் கொண்டுள்ளது.
இக்கோட்டத்தின் மாவட்டங்கள்
[தொகு]ராஜசாகி கோட்டத்தில் ராஜசாகி மாவட்டம், சிராஜ்கஞ்ச் மாவட்டம், பப்னா மாவட்டம், நத்தோர் மாவட்டம், நவகோன் மாவட்டம், சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம், போக்ரா மாவட்டம், மற்றும் ஜெய்பூர்ஹட் மாவட்டம் என எட்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கோட்டம் ஒரு மாநகராட்சியும், ஐம்பத்தி ஒன்பது நகராட்சி மன்றங்களும், எழுபது துணை மாவட்டங்களும், 564 கிராம ஒன்றியக் குழுக்களும், 14,075 கிராமங்களையும் கொண்டுள்ளது. மேலும் இக்கோட்ட்டம் எழுபத்தி இரண்டு வங்கதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இக்கோட்டத்தின் பெரிய மாவட்டமாக 3435.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நவ்கோன் மாவட்டமும், சிறிய மாவட்டமாக 1012.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜெய்பூர்ஹட் மாவ்ட்டமும் உள்ளது.[5]
மக்கள் தொகையியல்
[தொகு]18,153.08 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை ஆக 1,84,84,858 உள்ளது. அதில் ஆண்கள் 92,56,910 ஆகவும், பெண்கள் 92,27,948 ஆகவும் உள்ளனர். வங்காளதேசத்தின் மக்கள் தொகையில் இக்கோட்டம் 11.55% கொண்டுள்ளது. ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.21%. ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,018 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 48.00% ஆக உள்ளது.[6]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
பொருளாதாரம்
[தொகு]இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பத்மா ஆறு போன்ற பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், மிளகாய், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது. இராஜசாகி கோட்டம் பல வகையான மாம்பழங்களை விளைவிக்கிறது.
உலகப் புகழ் பெற்ற பட்டுத் துணிகள் உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளதால் இராஜசாகி நகரத்தை பட்டு நகரம் என்று அழைப்பர்.
போக்குவரத்து
[தொகு]ராஜசாகி கோட்டத்தில் ஷா மக்தும் வானூர்தி நிலையம் மற்றும் சையத்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுடன் வான் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி
[தொகு]வங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
[தொகு]1953-இல் துவக்கப்பட்ட ராஜசாகி பல்கலைக்கழகம், வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைகழகத்தில் ஆறு நிறுவனங்களும், ஐம்பது வகையான படிப்புகளைக் கொண்டது. இக்கோட்டத்தின் பிற கல்வி நிலையங்கள்: ராஜசாகி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம், இராஜசாகி மருத்துவக் கல்லூரி, போக்ரா சாகீத் ஜியாவுர் ரஹ்மான் மருத்துவக் கல்லூரி, ஜெய்பூர்ஹட் மகளிர் இராணுவப் பயிற்சி கல்லூரி, ராஜசாகி கல்லூரி, ராஜசாகி அரசு புதுக் கல்லூரி, ராஜசாகி இராணுவப் பயிற்சிக் கல்லூரி, போக்ரா அரசு அஜீஸுல் ஹக் கல்லூரி, போக்ரா மாவட்டப் பள்ளி, பப்னா அரசு எட்வர்டு கல்லூரி; பப்னா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பப்னா மருத்துவக் கல்லூரி, ஜெய்பூர்ஹட் அரசு மருத்துவக் கல்லூரி, சாகீத் எம். மன்சூர் அலி மருத்துவக் கல்லூரி, சிராஜ்கஞ்ச்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ 2.0 2.1 Sajahan Miah (2006). "Rajshahi Division". In Sirajul Islam (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
- ↑ "Population Census 2011: National Volume-1: Analytical Report" (PDF). Bangladesh Bureau of Statistics. p. 199. பார்க்கப்பட்ட நாள் February 9, 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Encyclopedia of Bangladesh pp 6[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Rajshahi Division, Bangladesh
- ↑ [ http://203.112.218.65/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf பரணிடப்பட்டது 2016-03-09 at the வந்தவழி இயந்திரம்]
வெளி இணைப்புகள்
[தொகு]- E-Rajshahi[தொடர்பிழந்த இணைப்பு], An online portal for information and government services managed by Rajshahi City Corporation