பப்னா மாவட்டம்
பப்னா மாவட்டம் (Pabna District) (வங்காள மொழி: পাবনা জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பப்னா நகரம் ஆகும்.[1]
மாவட்ட எல்லைகள்
[தொகு]பப்னா மாவட்டத்தின் வடக்கில் சிராஜ்கஞ்ச் மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், தெற்கில் ராஜ்பரி மாவட்டம் மற்றும் குஸ்தியா மாவட்டங்களும், கிழக்கில் மணிகஞ்ச் மாவட்டம் மற்றும் சிராஜ்கஞ்ச் மாவட்டங்களும், மேற்கில் குஸ்தியா மாவட்டம் மற்றும் கங்கை ஆறும் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]2376.13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பப்னா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஒன்பது துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: பப்னா சதர், சத்மோகர், இசார்தி, சூஜாஅகோர், பரித்பூர், அத்காரியா, சத்தியா, வாங்குரா மற்றும் போரா ஆகும்.
இம்மாவட்டம் பப்னா சதர், சத்மோகர், இசார்தி, சூஜாஅகோர், பரித்பூர், அத்காரியா, சத்தியா, வாங்குரா மற்றும் போரா எனும் ஒன்பது நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மேலும் 73 கிராம ஒன்றியக் குழுக்களையும், 1562 கிராமங்களையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6600 மற்றும் தொலைபேசி குறியிடு எண் 0731 ஆகும். இம்மாவட்டம் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]வேளாண்மை இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் ஆகும். இம்மாவட்டத்தில் பத்மா ஆறு, கங்கை ஆறு குமணி ஆறு, அத்ராய் ஆறு, போரல் ஆறு, காஜிபூர் ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், நில வளமும் செழித்து உள்ளது. எனவே இங்கு நெல், கரும்பு, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, வெற்றிலை, மா, பலா, வாழை, தென்னை, விளாச்சி, கொய்யா முதலியவைகள் பயிரிடப்படுகிறது.
வேளாண்மைத் தொழிலாளர்கள் 34%, கூலித்தொழிலாளர்கள் 4.46%, போக்குவரத்து 2.18%, நெசவாளர்கள் 2.85%, வணிகர்கள் 13.27%, சேவைத்துறை 7.26% மற்றும் பிறர் 13.21% ஆக உள்ளனர். மீன் பிடித்தல் & வளர்த்தல், பால்பண்ணைகள், கோழிப் பண்ணைகள், பட்டுப்புழு வளர்ப்பு, நெசவுத் தொழில் ஆகியவை பிற முக்கியத் தொழில்கள் ஆகும்.
தொழிற்சாலைகள்
[தொகு]இம்மாவட்டத்தில் காகித ஆலைகள், பருத்தி ஆலைகள், சணல் ஆலைகள், சமையல் எண்ணெய் ஆலைகள், கரும்பாலைகள், மருந்து தொழிற்சாலைகள், பிஸ்கட் தயாரிப்பு ஆலைகள், அரிசி ஆலைகள், மாவு ஆலைகள், மர அறுவை ஆலைகள் மற்றும் நெசவாலைகள் உள்ளது
மக்கள் தொகையியல்
[தொகு]2376.13 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 25,23,179 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,62,934 ஆகவும், பெண்கள் 12,60,245 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1062 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 48.0 % ஆக உள்ளது.[2] இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
கல்வி
[தொகு]இம்மாவட்டத்தில் ஆண்களின் கல்வி 51.8% ஆகவும் மற்றும் பெண்களின் கல்வி 31.5% ஆகவுள்ளது. வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]இம்மாவட்டத்தில் சாலை, இருப்புப் பாதை, வானூர்தி நிலையங்கள் இருப்பினும், பெரும்பாலான மக்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணிக்கின்றனர்.
கல்வி
[தொகு]இம்மாவட்டத்தில் பப்னா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. 34 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு சட்டக் கல்லூரியும், ஒரு நெசவுக் கல்லூரியும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், ஒரு அரசு வணிகக் கல்லூரியும், ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும், ஒரு செவிலியர் பயிற்சி நிறுவனமும், ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், 202 உயர்நிலைப் பள்ளியும், 29 இளையோர் பள்ளிகளும், 262 மதராசாக்களும், 667 அரசு துவக்கப் பள்ளிகளும், 445 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் துவக்கப் பள்ளிகளும், எட்டு சமுதாயப் பள்ளிகளும் உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]இம்மாவட்டத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 36.8° செல்சியஸ் ஆகவும், குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 9.6° ஆகவுள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவி 1872 மில்லி மீட்டராக ஆகவுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பாப்னா மாவட்டம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
27.5 (81.5) |
33.6 (92.5) |
36.8 (98.2) |
35.2 (95.4) |
32.8 (91) |
31.7 (89.1) |
31.8 (89.2) |
32.2 (90) |
31.6 (88.9) |
29.1 (84.4) |
25.9 (78.6) |
30.96 (87.73) |
தினசரி சராசரி °C (°F) | 16.4 (61.5) |
20.2 (68.4) |
26.0 (78.8) |
29.7 (85.5) |
29.9 (85.8) |
29.1 (84.4) |
28.8 (83.8) |
29.1 (84.4) |
29.2 (84.6) |
27.6 (81.7) |
23.3 (73.9) |
19.1 (66.4) |
25.7 (78.26) |
தாழ் சராசரி °C (°F) | 9.6 (49.3) |
12.9 (55.2) |
18.5 (65.3) |
22.8 (73) |
24.6 (76.3) |
25.6 (78.1) |
25.9 (78.6) |
26.4 (79.5) |
26.2 (79.2) |
23.6 (74.5) |
17.5 (63.5) |
12.4 (54.3) |
20.5 (68.9) |
பொழிவு mm (inches) | 19 (0.75) |
18 (0.71) |
34 (1.34) |
56 (2.2) |
159 (6.26) |
300 (11.81) |
260 (10.24) |
294 (11.57) |
242 (9.53) |
201 (7.91) |
17 (0.67) |
3 (0.12) |
1,603 (63.11) |
% ஈரப்பதம் | 45 | 36 | 39 | 44 | 59 | 73 | 74 | 76 | 72 | 68 | 52 | 49 | 57.3 |
ஆதாரம்: National newspapers |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Md. Shariful Alam (2012). "Pabna District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Community Report Pabna Zila June 2012