யமுனா பிரசாத் சாஸ்திரி
Appearance
யமுனா பிரசாத் சாஸ்திரி (Yamuna Prasad Shastri)[1] இந்திய மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப்பிரதேசத்தின் ரேவா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய லோக் தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். பின்னர், ஜனதா கட்சியுடன் தேர்தல் கூட்டணியில் இருந்தார். இவர் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். [2] 1955 ஆம் ஆண்டில் இவர் கோவா விடுதலை இயக்கத்தின் போராட்டங்களில் பங்கு பெற்றார். தனது வலது கண் பார்வையை போர்த்துக்கீசிய காவல்துறையின் தாக்குதலால் இழந்த இவர் 1975 ஆம் ஆண்டில் முழுமையாகப் பார்வையை இழந்தார்.[3] இவருடைய நினைவாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அர்ப்பணிக்கப்பட்டன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Unseen India On The Eve Of Elections". archives.peoplesdemocracy.in. Archived from the original on 2017-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.
- ↑ Members Bioprofile[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ XI LOK SABHA DEBATES, Session V (Monsoon)
- ↑ indcareer.com. "Yamuna Prasad Shastri College, Semaria". IndCareer.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.