உள்ளடக்கத்துக்குச் செல்

மோனிகா லெவின்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனிகா லெவின்ஸ்கி
மோனிகா லெவின்ஸ்கி
லெவின்ஸ்கி டெட் 2015 இல் பேசுகிறார்
பிறப்புமோனிகா சாமில் லெவின்ஸ்கி
சூலை 23, 1973 (1973-07-23) (அகவை 51)
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அமெரிக்கா
கல்விசாண்டா மோனிகா கல்லூரி
லூயிஸ் மற்றும் கிளார்க் கல்லூரி ]] (பெ.எஸ்)
இலண்டன் பொருளியல் பள்ளி (எம்.எஸ்.சி])
பணி
  • செயற்பாட்டாளர்
  • தொலைக்காட்சி ஆளுமை (முன்பு)
  • அரசு உதவியாளர் (முன்னர்)
செயற்பாட்டுக்
காலம்
1995–2005; 2014–தற்போது
பணியகம்வெள்ளை மாளிகை சட்டமன்ற விவகார அலுவலகம்
பென்டகன்
அறியப்படுவதுகிளின்டன்-லெவின்ஸ்கி பாலியல் சர்ச்சை
பெற்றோர்பெர்னார்ட் லெவின்ஸ்கி
மார்சியா லூயிஸ்

மோனிகா சாமில் லெவின்ஸ்கி (Monica Samille Lewinsky, பிறப்பு 23, யூலை, 1973)[1] என்பவர் ஒரு அமெரிக்க செயற்பாட்டாளர் ஆவார். அமெரிக்க சனாதிபதி பில் கிளின்டன் 1995 மற்றும் 1997 க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகையில் பயிற்சி ஊழியராக இருந்த லெவின்ஸ்கியுடன் உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து 1990 களின் பிற்பகுதியில் லெவின்ஸ்கி பன்னாட்டு அளவில் அறியப்பட்டார். இந்த விவகாரமும் இதன் விளைவுகளும் கிளின்டன்-லெவின்ஸ்கி ஊழல் என்று அறியப்பட்டது.

அந்த நிகழ்வைத் தொடர்ந்து, லெவின்ஸ்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டார், அதில் இவரது பெயரில் தொடர்ச்சியாக கைப்பைகளை வடிவமைத்தல், சீருணவு விளம்பர செய்தித் தொடர்பாளராக பணியாற்றுதல், தொலைக்காட்சி ஆளுமையாக பணியாற்றுதல் ஆகியவை அடங்கும். இவர் 2006 இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2014 இல், லெவின்ஸ்கி இணையச் சீண்டலுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்.

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

லெவின்ஸ்கி கலிபோர்னியாவின், சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சின் வெஸ்ட்சைட் பிரெண்ட்வுட் பகுதியிலும் பின்னர் பெவர்லி ஹில்ஸிலும் ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்தார்.[2][1][3] இவரது தந்தை பெர்னார்ட் லெவின்ஸ்கி, ஒரு புற்றுநோயியல் நிபுணர், அவர் 1920களில் ஜெர்மனியிலிருந்து குடியேறிய ஜெர்மன் யூதர்களின் மகன், முதலில் எல் சால்வடாருக்குச் சென்றார், பின்னர் அவர் 14 வயதில் அமெரிக்காவிற்குச் சென்றார்.[2][4] இவரது தாயார், மார்சியா கே விலென்ஸ்கி என்ற பெயரில் பிறந்து, மார்சியா லூயிஸ் என்ற பெயரில் எழுதும் ஒரு எழுத்தாளர். 1996 ஆம் ஆண்டில், அவர் எ "காசிப் பயோகிராபி", தி பிரைவேட் லைவ்ஸ் ஆஃப் தி த்ரீ டெனர்ஸ் எழுதினார். லெவின்ஸ்கியின் தாய்வழி தாத்தா, சாமுவேல் எம். வி லென்ஸ்கி, ஒரு லிதுவேனியன் யூதர், மேலும் இவரது தாய்வழி பாட்டி, ப்ரோனியா பொலேஷுக், சீனாவின் தியான்ஜின் பிரிட்டிஷ் கன்சிசனில் ஒரு உருசிய யூத குடும்பத்தில் பிறந்தார்.[5][6] லெவின்ஸ்கியின் பெற்றோர் 1988 இல் விவாகரத்து செய்துகொண்டனர், ஒவ்வொருவரும் மறுமணமும் செய்து கொண்டனர்.[7][3][2]

இவரது குடும்பத்தினர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சினாய் யூத கோயிலுக்குச் செல்பவர்களாகவும், அந்தக் கோயிலுடன் இணைந்த சினாய் அகிபா அகாடமி பள்ளியில் பயில்பவர்களாகவும் இருந்தனர். இவர் தனது துவக்கக் கல்விக்காக, பெல்-ஏரில் உள்ள ஜான் தாமஸ் டை பள்ளியில் பயின்றார்.[8] லெவின்ஸ்கி பெவர்லி ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயின்றார், அதற்கு முன்பு பெல் ஏர் பிரெப் (பின்னர் பசிபிக் உயர்நிலைப் பள்ளி என்று அறியப்பட்டது) 1991 இல் பயின்றார்.

உயர்நிலைப் பள்ளி பட்டப்படிப்பைத் தொடர்ந்து, லெவின்ஸ்கி சாண்டா மோனிகா கல்லூரியில் பயின்றார். பெவர்லி ஹில்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நாடகத் துறையிலும், கழுத்துப்பட்டை கடையிலும் பணிபுரிந்தார். 1992 ஆம் ஆண்டில், திருமணமான முன்னாள் உயர்நிலைப் பள்ளி நாடக பயிற்றுவிப்பாளரான ஆண்டி பிளீலருடன் உறவைத் தொடங்கினார். இந்த உறவு ஐந்தாண்டுகள் நீடித்தது. 1993 ஆம் ஆண்டில், ஓரிகானின் போர்ட்லேண்ட்டில் உள்ள லூயிஸ் (ம) கிளார்க் கல்லூரியில் சேர்ந்தார். 1995 இல் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2][9] 2000 ஆம் ஆண்டு லேரி கிங் லைவ் நிகழ்ச்சியில், தான் 18 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1990களின் துவக்கத்தில் 40 வயதான திருமணமான ஒருவருடன் உறவைத் தொடங்கியதாகவும், தான் லூயிஸ் (ம) கிளார்க் கல்லூரியில் படிக்கும் போது அது தொடர்ந்ததாகவும் வெளிப்படுத்தினார். ஆனால் யார் அந்த மனிதர் என்பதைக் குறிப்பிடவில்லை.[10]

ஒரு குடும்ப நண்பரின் உதவியுடன், லெவின்ஸ்கி வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் லியோன் பனெட்டாவின் அலுவலகத்தில் ஊதியமல் பணிபுரியக்கூடிய வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர் பணியைப் பெற்றார். லெவின்ஸ்கி வாஷிங்டன், டி.சி.க்கு குடிபெயர்ந்து 1995 யூலையில் பணியை ஏற்றுக்கொண்டார்.[2][9] பின்னர் 1995 திசம்பரில் வெள்ளை மாளிகையின் சட்டமன்ற விவகார அலுவலகத்தில் சம்பளம் பெறும் பணிக்கு மாறினார்.[2]

பாலியல் சர்ச்சை

[தொகு]
1997 பிப்ரவரில் லெவின்ஸ்கியுடன் பில் கிளிண்டன்
லெவின்ஸ்கியின் 1997 மே அரசாங்க அடையாள ஒளிப்படம்

நவம்பர் 1995 மற்றும் மார்ச் 1997 இக்கு இடையில் நீள்வட்ட அலுவலகத்தில் சனாதிபதி பில் கிளிண்டனுன் ஒன்பது முறை பாலியல் சந்திப்புகளை மேற்கொண்டதாக லெவின்ஸ்கி கூறினார். இவரது சாட்சியத்தின்படி, இந்த சந்திப்புகளின்போது வாய்வழி பாலுறவும், பிற பாலியல் செயல்களும் நடந்தன. ஆனால் உடலுறவு நடக்கவில்லை.[11]

கிளின்டன் முன்பு ஆர்கன்சாசின் ஆளுநராக இருந்த காலத்தில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஆர்கன்சாஸ் மாநிலத்தின் முன்னாள் ஊழியர் பவுலா ஜோன்ஸ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜோன்ஸ் வழக்கு காலக் கட்டத்தில் லெவின்ஸ்கியின் பெயர் வெளிவந்தது. ஜோன்ஸின் வழக்கறிஞர்கள் கிளின்டனின் நடத்தையையும் மற்ற அரசாங்க ஊழியர்களுடன் பொருத்தமற்ற பாலியல் உறவுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயன்றனர்.[12]

லெவின்ஸ்கி கிளின்டனுடன் அதிக நேரம் செலவிடுகிறார் என்று உணர்ந்த இவரது மேலதிகாரிகள் லெவின்ஸ்கியை 1996 ஏப்ரலில், வெள்ளை மாளிகையிலிருந்து பென்டகனுக்கு மாற்றினர். அங்கு தலைமை பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கென்னத் பேகனின் உதவியாளராக இவர் பணியாற்றினார்.[2] லெவின்ஸ்கி கிளின்டனுடனான தனது பாலியல் உறவைப் பற்றி சக பணியாளரான லிண்டா டிரிப்பிடம் கூறினார். இதன் பிறகு டிரிப் 1997 செப்டம்பரில் தொடங்கி அவர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்யத் தொடங்கினார். இவர் 1997 திசம்பரில் பென்டகனில் தனது பதவியை விட்டு லெவின்ஸ்கி விலகினார். 1998 சனவரியில் பவுலா ஜோன்ஸ் வழக்கில் கிளிண்டனுடன் எந்தவிதமான உடலுறவையும் மறுத்து ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தார். அந்த வழக்கில் சத்தியப்பிரமாணத்தின் கீழ் பொய் சொல்ல டிரிப்பை வற்புறுத்த முயன்றார். டிரிப் இந்த தொலைபேசி பதிவு நாடாக்களை சுதந்திர ஆலோசகரான கென்னத் ஸ்டாரிடம் கொடுத்தார், வைட்வாட்டர் சர்ச்சையில் அவர் தொடர்ந்து விசாரணை செய்தார். பிரமாணத்தின் கீழ், கிளின்டன் லெவின்ஸ்கியுடன் எந்தவித பாலியல் உறவும் தனக்கு இல்லை என்று மறுத்தார்.[13]

1998, சனவரி, 26 அன்று, தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டில், "மிஸ் லெவின்ஸ்கி என்ற பெண்ணுடன் நான் உடலுறவு கொள்ளவில்லை" என்று கிளிண்டன் கூறினார்.[14] இந்த விடயம் உடனடியாக செய்தி ஊடகங்களை ஆக்கிரமித்தது. மேலும் லெவின்ஸ்கி அடுத்ததடுத்த வாரங்களில் வாட்டர்கேட் வளாகத்தில் உள்ள தனது தாயின் இல்லத்தில் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்தார். லெவின்ஸ்கியின் முன்னாள் உயர்நிலைப் பள்ளி நாடகப் பயிற்றுவிப்பாளரான ஆண்டி பிளீலருடன் லெவின்ஸ்கியின் விவகாரம் பற்றிய செய்தியும் வெளிச்சத்திற்கு வந்தது, மேலும் வெள்ளை மாளிகையில் இருந்த காலத்தில் லெவின்ஸ்கி அவருக்கும் அவரது மனைவிக்கும் அனுப்பிய பல்வேறு நினைவுப் பொருட்கள், ஒளிப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை ஸ்டார்ரிடம் ஒப்படைத்தார்.

கிளின்டனின் விந்து கறை படிந்த நீல நிற ஆடையை லெவின்ஸ்கியிடம் இருந்து ஸ்டார் பெற்றார், அத்துடன் ஜனாதிபதி தனது பிறப்புறுப்பில் ஒரு சுருட்டைச் செருகியதாக அவரிடமிருந்து சாட்சியம் பெற்றார். ஆனால் கிளிண்டன் தான் பொய்ச் சாட்சியம் சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்தார். ஏனெனில் கிளிண்டனின் கூற்றுப்படி, வாய்வழி பாலுறவு என்பதற்கான சட்டப்பூர்வ வரையறை "உடலுறவு" என்பதாக இல்லை என்றார்.[15] எவ்வாறாயினும், ஸ்டார் கமிஷனுக்கு லெவின்ஸ்கி அளித்த சாட்சியம், கிளிண்டனின் கூற்றுக்கு முரணானாக இருந்தது.

சர்ச்சைக்கு பிறகான வாழ்க்கை

[தொகு]

லெவின்ஸ்கியின் இம்யூனிட்டி உடன்படிக்கை, அவர் பகிரங்கமாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தியது, ஆனால் ஆண்ட்ரூ மோர்டன் எழுதிய மோனிகாஸ் ஸ்டோரி நூலுக்கு மோனிகா தன் ஒத்துழைப்பை அளித்தார். அதில் கிளின்டன் விவகாரத்தில் மோனிகாவின் பங்கும் அடங்கியிருந்தது.[16][17] இந்த புத்தகம் 1999 மார்ச்சில் வெளியானது; இது டைம் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியானது.[16][17] மார்ச் 3, 1999 இல், பார்பரா வால்டர்ஸ் ஏபிசியின் 20/20 இல் லெவின்ஸ்கியை நேர்காணல் செய்தார். இந்த நிகழ்ச்சியை 70 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்தனர், இது செய்தி நிகழ்ச்சிக்கான ஒரு சாதனை என்று ஏபிசி கூறியது.[16] லெவின்ஸ்கி புத்தகத்துக்கு ஒத்துழைத்ததன் மூலம் சுமார் $500,000 மற்றும் வால்டர்ஸ் நேர்காணலுக்கான சர்வதேச உரிமைகள் மூலம் $1 மில்லியன் என சம்பாதித்தார். சட்டப்பூர்வ செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் இன்னும் அதிகமாக இருந்தது.[18]

1999 செப்டம்பரில், லெவின்ஸ்கி தனது பெயரைக் கொண்ட கைப்பைகள் வரிசையை விற்கத் தொடங்கினார்.[19] அதை தி ரியல் மோனிகா, இன்க் நிறுவனத்தின் பெயரில் தயாரித்தார்.[18] அவை இணையம் வழியாகவும், நியூயார்க்கில் உள்ள ஹென்றி பெண்டல், கலிபோர்னியாவில் உள்ள ஃப்ரெட் செகல், லண்டனில் உள்ள தி கிராஸ் ஆகியவற்றிலும் விற்கப்பட்டன.[18][19][20] லெவின்ஸ்கி பைகளை வடிவமைத்தார். மேலும் லூசியானாவில் அவற்றின் உற்பத்தியை மேற்பார்வையிட அடிக்கடி பயணம் செய்தார்.[18]

2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லெவின்ஸ்கி சீருணவு நிறுவனமான ஜென்னி கிரேக், இன்க் இன் தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றத் தொடங்கினார்.[21] லெவின்ஸ்கி ஆறு மாதங்களில் 40 அல்லது அதற்கு மேலான பவுண்டு எடைக் குறைக்கும் 1 மில்லியன் டாலர் ஒப்புதல் ஒப்பந்தம், அந்த நேரத்தில் கணிசமான விளம்பரத்தைப் பெற்றது.[18] நிறுவனம் 2000 பிப்ரவரியில் லெவின்ஸ்கி விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தியது, 2000 ஏப்ரலில் இவரது விளம்பரம் முழுவதுமாக முடிவுக்கு வந்தது. மேலும் இவரது ஈடுபாட்டிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட $1 மில்லியனில் $300,000 மட்டுமே இவருக்கு வழங்கியது.[18][22]

லெவின்ஸ்கி தன் வாழ்வின் ஒரு தசாப்தத்தம் மக்கள் பார்வையில் இருந்து விலகி, லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், போர்ட்லேண்ட் ஆகிய இடங்களில் வாழ்ந்தார், ஆனால், இவரது புகழ் காரணமாக வேலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது.[23]

மீண்டும் பொது வெளியில்

[தொகு]

2014 மேயில், லெவின்ஸ்கி வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு "ஷேம் அண்ட் சர்வைவல்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார், அதில் அவர் தனது வாழ்க்கை மற்றும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விவாதித்தார்.[23] அந்த உறவு பரஸ்பரமானது என்றார். மேலும் கிளின்டன் தன்னைப் பயன்படுத்திக் கொண்டாலும், அது சம்மதமான உறவு என்று எழுதினார்.[24] இந்த நீண்டக் கட்டுரையை தன் தரப்பை விளக்கிக்கூற ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். கேலி, கிண்டல், அவமானங்கள் ஆகியவற்றால் உண்டான வலியை வெளிப்படுத்தி, அதுவரை தன்னை வரையரை செய்த அந்த நிகழ்வின் விலங்கை உடைக்கும் வகையில் அந்தக் கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரை அவரின் வலியை புரியவைப்பதாக இருந்தது. அந்த இதழ் பின்னர் இவரை ஒரு வேனிட்டி ஃபேர் பங்களிப்பாளராக அறிவித்தது.[25]

2014 ஜூலையில், நேசனல் ஜியோகிராஃபிக் சேனலுக்கான மூன்று பகுதி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியான தி 90ஸ்: தி லாஸ்ட் கிரேட் டிகேட் என்ற நிகழ்ச்சிக்கு லெவின்ஸ்கி நேர்காணல் செய்யப்பட்டார். இந்தத் தொடர் 1990 களின் பல்வேறு நிகழ்வுகளை ஆராய்ந்தது. இதில் தேசிய கவனத்தை ஈர்த்த லெவின்ஸ்கி சம்பந்தபட்டவையும் அடங்கும். பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் லெவின்ஸ்கியின் முதல் நேர்காணல் இதுவாகும்.[26] 2014 அக்டோபரில் இணையவழி சீண்டலுக்கு எதிராக பேசத் தொடங்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Aiken, Jonathan (August 6, 1998). "Who Is Monica Lewinsky?". CNN. http://www.cnn.com/ALLPOLITICS/1998/08/06/lewinsky.profile/. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Leen, Jeff. "Lewinsky: Two Coasts, Two Lives, Many Images". p. A1. https://www.washingtonpost.com/wp-srv/politics/special/clinton/stories/lewprofile.htm. 
  3. 3.0 3.1 Tugend, Tom. "L.A. temple fends off Lewinsky inquiries". http://www.jweekly.com/article/full/7521/l-a-temple-fends-off-lewinsky-inquiries/. 
  4. Pooley, Eric. "Monica's World". http://www.cnn.com/ALLPOLITICS/1998/02/23/time/pooley.html. 
  5. "Monica's Mom Defended". New York இம் மூலத்தில் இருந்து 2012-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707135201/http://articles.nydailynews.com/1998-08-09/news/18078775_1_monica-lewinsky-friends-marcia-lewis. 
  6. "Monica's Mom, the Reluctant Starr Witness". https://articles.latimes.com/1998/apr/02/news/ls-35076/2. 
  7. "Lewinsky's mother to wed media executive". CNN. http://www.cnn.com/ALLPOLITICS/1998/02/02/monica.mom/. 
  8. At Pacific Hills School (formerly Bel-Air Prep) she won the "Outstanding Junior of the Year" award. "That Girl" பரணிடப்பட்டது நவம்பர் 12, 2006 at the வந்தவழி இயந்திரம் by Leonard Gill, March 15, 1999. Memphis Flyer book review. Retrieved December 18, 2006.
  9. 9.0 9.1 . 
  10. "Monica Lewinsky Once Revealed She Had A Relationship With A Married Man Prior To Bill Clinton Affair". USA News Site. September 12, 2021. பார்க்கப்பட்ட நாள் September 13, 2021.
  11. "Lewinsky and the first lady". USA Today. Associated Press. March 19, 2008 இம் மூலத்தில் இருந்து April 12, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100412161707/http://www.usatoday.com/news/politics/2008-03-19-852575883_x.htm. 
  12. "Paula Jones' lawyers want Lewinsky evidence". Gettysburg Times. அசோசியேட்டட் பிரெசு: p. A3. April 1, 1998. https://news.google.com/newspapers?id=Xq9fAAAAIBAJ&pg=3866,13572. 
  13. Starr Report: Nature of President Clinton's Relationship with Monica Lewinsky பரணிடப்பட்டது திசம்பர் 3, 2000 at the வந்தவழி இயந்திரம் Retrieved December 18, 2006.
  14. The NewsHour with Jim Lehrer: President Bill Clinton January 21, 1998 பரணிடப்பட்டது பெப்பிரவரி 7, 2008 at the வந்தவழி இயந்திரம்
  15. "Perjury about sexual relations from the Paula Jones deposition" பரணிடப்பட்டது சூன் 10, 2011 at the வந்தவழி இயந்திரம் by Steve Kangas. Retrieved February 12, 2006
  16. 16.0 16.1 16.2 Cloud, John (March 8, 1999). "Monica's makeover" இம் மூலத்தில் இருந்து August 31, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110831082058/http://www.cnn.com/ALLPOLITICS/time/1999/03/08/makeover.html. 
  17. 17.0 17.1 Michiko Kakutani (March 5, 1999). "'Monica's Story': Tawdry and Tiresome". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து January 9, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170109113643/http://www.nytimes.com/books/99/02/28/daily/030599lewinsky-book-review.html. 
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 Grigoriadis, Vanessa (March 19, 2001). "Monica Takes Manhattan". New York இம் மூலத்தில் இருந்து July 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140706183225/http://nymag.com/nymetro/news/people/features/4481/. 
  19. 19.0 19.1 "Is the Lewinsky Affair Over?". Vogue. May 27, 2004 இம் மூலத்தில் இருந்து May 15, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110515071129/http://www.vogue.co.uk/news/daily/2004-05/040527-is-the-lewinsky-affair-over-.aspx. 
  20. "Monica: It's In the Bag". People. January 12, 1999 இம் மூலத்தில் இருந்து June 6, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100606231829/http://www.people.com/people/article/0%2C%2C616490%2C00.html. 
  21. Hays, Constance L. (December 28, 1999). "Monica Lewinsky Meets Jenny Craig, and a Spokeswoman Is Born". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து March 8, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160308114855/http://www.nytimes.com/1999/12/28/business/media-business-advertising-monica-lewinsky-meets-jenny-craig-spokeswoman-born.html. 
  22. "Lewinsky trimmed from slimming ads". BBC News. April 13, 2000 இம் மூலத்தில் இருந்து January 22, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100122015835/http://news.bbc.co.uk/2/hi/americas/711920.stm. 
  23. 23.0 23.1 Lewinsky, Monica (June 2014). "Shame and Survival: Monica Lewinsky on the Culture of Humiliation". Vanity Fair. Archived from the original on July 4, 2015. பார்க்கப்பட்ட நாள் July 1, 2015.
  24. Meslow, Scott (May 7, 2014). "Monica Lewinsky breaks 10 years of silence on affair with President Clinton". Archived from the original on May 6, 2014. பார்க்கப்பட்ட நாள் May 7, 2014.
  25. Julia Cannon (July 31, 2014). "Monica Lewinsky Is Writing For Vanity Fair Now". Business Insider. Archived from the original on June 17, 2015. பார்க்கப்பட்ட நாள் June 17, 2015.
  26. Makarechi, Kia (July 1, 2014). "Monica Lewinsky Grants First TV Interview in Years". Vanity Fair இம் மூலத்தில் இருந்து July 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140712163717/http://www.vanityfair.com/online/daily/2014/07/monica-lewinsky-grants-first-tv-interview-in-years. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_லெவின்ஸ்கி&oldid=4107673" இலிருந்து மீள்விக்கப்பட்டது