உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் நொபிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் நொபிலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியே
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மே. நொபிலி
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் நொபிலி
கெண்டர்சன் & மத்தாய், 1910

மேக்ரோபிராக்கியம் நொபிலி (Macrobrachium nobilii) என்பது ஒரு வகை நன்னீர் இறால் ஆகும். 1910ஆம் ஆண்டில் ஹெண்டர்சன் மற்றும் மத்தாய் முதன் முதலாக மே. நோபிலி குறித்து விவரித்தனர்.[1] இது பத்துக்காலிகள் வரிசையில் பேலிமோனிடே குடும்பத்தினைச் சார்ந்தது.

பரவல்

[தொகு]

இந்த கரிடியன் இறால் இந்தியாவில் தென் கிழக்குப் பகுதிகளிலும், நியூ கலிடோனியா, கேவாடக்சு மற்றும் துவாமோட்டுத் தீவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நன்னீர் ஏரிகளில் காணப்படுவது பதிவாகியுள்ளது. கல் இராட்டு என அழைக்கப்படும் மே. நோபிலி மேட்டூர் அணைக்கும் காவிரிபூம்பட்டினத்திற்கும் இடையில் காவிரி ஆற்றில் காணப்படுவது பதிவாகியுள்ளது.

முக்கிய பண்புகள்

[தொகு]

இந்த நன்னீர் இறால் உள்நாட்டில் கல் இறால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் வாழ்விடத்தின் அடிப்பகுதியில் காணப்படும் கற்கள்/கூழாங்கற்கள் அடியில் பகல் நேரங்களில் மறைந்து காணப்படும். எம். நோபிலியின் இரண்டாவது மார்பு பகுதி இணையுறுப்பான கீலா எனப்படுவது மிகப்பெரியதாகக் காணப்படும். இதில் கார்பசானது மீரசினைவிட பெரியதாகக் காணப்படும். மேலும் பெரிய கீலாவில் விளிம்புகளின் அருகாமையில் பற்களைக் கொண்டுள்ளது. ராஸ்ட்ரமில் முதல் நான்கு அல்லது ஐந்து பற்கள் கண்விழிப்பின் சுற்றுப்பாதைக்குப் பின்னால் அமைந்துள்ளது.

உயிரியல்

[தொகு]

எம். நோபிலி என்பது 18-22 நாட்களுக்கு ஒரு முறை தோலுரிப்பன. இந்த தோலுரிப்புக் காலம் இரு பகுதிகளாக உள்ளது.[2] ஆண் இறால் பெண் இறாலினை விட உருவில் பெரியவை. ஆண் எம். நோபிலியின் உடல் எடை சுமார் 12676 மி. கிராம் வரையும் பெண் இறாலின் உடல் எடை 7178 மி. கிராம் வரை வளர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.[3] சராசரியாகப் பெண் 14 நாட்களுக்கு ஒரு முறை சுமார் 2200 முட்டைகளை ஒரு தொகுப்பாக இட்டு அடைகாக்கும். கருவளர்ச்சி முடிந்ததும் 6 நாட்களுக்குள் முட்டைகளை ஒழுங்கற்ற தொகுதிகளாகப் பொரிக்கின்றன. பொரித்த குஞ்சுகள் நீரோட்டத்தில் உப்புத்தன்மை நிறைந்த கழிமுகப்பகுதிகளுக்கு செல்கின்றன. அங்கு அவை வளர்ச்சியை நிறைவு செய்கின்றன. இளம் உயிரி வளர்ச்சி முடிந்ததும், நன்னீர் பகுதிகளுக்கு ஆற்றோட்டத்தில் எதிர் நீச்சலிட்டு இடம்பெயர்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]