உள்ளடக்கத்துக்குச் செல்

பேலிமோனிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேலிமோனிடே
Periclimenes pedersoni, a cleaner shrimp
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
Subphylum:
குருசுடாசியா
வகுப்பு:
மலகோசுட்ராக்கா
வரிசை:
பத்துக்காலிகள்
Superfamily:
பேலிமோனினோய்டே
குடும்பம்:
பேலிமோனிடே

ராபினிசுக், 1815
ஹார்லெக்வின் இறால், ஹைமனோசெரா பிக்டா

பேலிமோனிடே (Palaemonidae) என்பது இறால் குடும்பம் ஆகும். இது பத்துக்காலிகள் வரிசையின் கீழ் வருகின்றது. பேலிமோனிடே குடும்பத்தின் கீழ் வரும் சிற்றினங்களில் பல, சிறிய முதுகெலும்பற்ற உயிரிகளை உண்ணும் மாமிச உண்ணிகளாக உள்ளன. இவை ஆழ்கடலைத் தவிர மற்ற அனைத்து நீர் வாழ்விடங்களிலும் காணப்படுகின்றன. இந்த குடும்பத்தில் குறிப்பிடத்தக்கப் பேரினம் மேக்ரோபிராக்கியம் ஆகும். இதில் வணிக ரீதியாக மீன் பிடி இறால்களைக் கொண்டுள்ளது. மற்றவை பவளப் பாறைகளில் வசிக்கின்றன. இங்கு இவை கடற்பாசிகள், நீடேரியன்கள், மெல்லுடலிகள் மற்றும் முட்தோலிகள் போன்ற சில முதுகெலும்பில்லாதவர்களுடன் தூய்மையான இறால்கள், ஒட்டுண்ணிகள் அல்லது கூட்டு வாழ்க்கையினை மேற்கொள்கின்றன. இவை பொதுவாகக் கழிவு உண்பவையாக உள்ளன. சில மாமிச உண்ணிகளாகவும், சிறிய விலங்குகளை வேட்டையாடுவையாகவும் உள்ளன.[1]

தலைமுறை

[தொகு]

இந்த குடும்பத்தில் 160 பேரினங்களின் கீழ் 1200க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[2][3][4] இவை முன்னர் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆனால் 2015ஆம் ஆண்டில் மூலக்கூறு மற்றும் உருவவியல் ஆராய்ச்சியின் படி துணைக் குடும்பக் குழுக்கள் தவறானவை என்று தீர்மானிக்கப்பட்டன. மேலும் நாதோபலிடே மற்றும் ஹைமெனோசெரிடே குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒரே குடும்பமாக பேலிமோனிடேவில் இணைக்கப்பட்டன.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cryptobenthic fishes and co-inhabiting shrimps associated with the mushroom coral Heliofungia actiniformis (Fungiidae) in the Davao Gulf, Philippines". Environmental Biology of Fishes 98 (6): 1479–1489. 2015. doi:10.1007/s10641-014-0374-0. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_2015-06_98_6/page/1479. 
  2. Shane T. Ahyong; James K. Lowry; Miguel Alonso; Roger N. Bamber; Geoffrey A. Boxshall; Peter Castro; Sarah Gerken; Gordan S. Karaman; Joseph W. Goy; Diana S. Jones; Kenneth Meland; D. Christopher Rogers; Jörundur Svavarsson (2011). "Subphylum Crustacea Brünnich, 1772" (PDF). In Z.-Q. Zhang (ed.). Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness. Vol. 3148. pp. 165–191. {{cite book}}: |journal= ignored (help)
  3. De Grave, Sammy & Pentcheff, N. & Ahyong, Shane & Chan, Tin Yam & Crandall, Keith & Dworschak, Peter & Felder, Darryl & Feldmann, Rodney & Fransen, C. & Goulding, Laura & Lemaitre, Rafael & Low, Martyn & Martin, Joel & Ng, Peter & Schweitzer, Carrie & Tan, Swee-Hee & Tshudy, Dale & Wetzer, Regina. (2009). A Classification of Living and Fossil Genera of Decapod Crustaceans. The Raffles bulletin of zoology. supplement 21. 1-109.
  4. "Palaemonidae". GBIF. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  5. De Grave, S.; Fransen, C. H.; Page, T. J. (2015). "Let's be pals again: major systematic changes in Palaemonidae (Crustacea: Decapoda)". PeerJ. doi:10.7717/peerj.1167. 
  6. "World Register of Marine Species". 2019. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14284/170.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேலிமோனிடே&oldid=3796667" இலிருந்து மீள்விக்கப்பட்டது