உள்ளடக்கத்துக்குச் செல்

மேக்ரோபிராக்கியம் குருதேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் குருதேவ்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறசுடேடியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேலிமோனிடே
பேரினம்:
இனம்:
மே. குருதேவ்'
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் குருதேவ்
ஜெயசந்திரன் & இராஜி, 2004

மேக்ரோபிராக்கியம் குருதேவ் (Macrobrachium gurudeve) என்பது பத்துக்காலிகள் வரிசையில் உள்ள பேலிமோனிடே குடும்பத்தின் நன்னீர் இறால் சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகளான கபினி மற்றும் பவானியில் காணப்படுகிறது. ஆண் இறாலின் மொத்த நீளம் 53.5 மி.மீ. மற்றும் பெண் இறால் 47 மி.மீ .நீளமுடையது ஆகும். ஆண் மே. குருதேவ் பெண் இறாலைவிடப் பெரியவை.[1] இந்த சிற்றினத்திற்கு "குருதேவ்" என்ற பெயர் சமூக சீர்திருத்தவாதியான கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாராயண குருதேவ்[2] என்பவரின் நினைவாக வழங்கப்பட்டது.

மே. குருதேவ், மே. பெகுன்சி மற்றும் மே. கிசுடென்சு ஆகிய சிற்றினங்களுடன் நெருங்கிய தொடர்புடையது, இருப்பினும் இவற்றின் சில முக்கிய சிறப்பியல்பு அம்சங்களால் வேறுபடுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jayachandran, K. V., & Raji, A. V. (2004). Three New Species of Macrobrachium Bate, 1868 (Decapoda, Palaemonidae) from the Western Ghats of Kerala State, India. Crustaceana, 77(10), 1179–1192. http://www.jstor.org/stable/20107427
  2. "Narayana Guru, 1856-1928". LC Name Authority File. Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 18 March 2021.
  3. Tiwari, K.K. 1952. Diagnosis of new species and subspecies of the genus Palaemon Fabricious (Decapoda: Crustacea). Ann. Mag. Nat. Hist., (12)5 : 27-32.