மெர்ச்செண்ட் ராயல்
கப்பல் (இங்கிலாந்து) | |
---|---|
பெயர்: | மெர்ச்சண்ட் ராயல் |
கட்டியோர்: | Deptford Dockyard, லண்டன்[1] |
வெளியீடு: | 1627[1] |
விதி: | மூழ்கியது, 23 செப்டம்பர் 1641 |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
வகை: | பெரியகப்பல்வகை[1] |
Tons burthen: | 700 டன்கள் bm[1] |
நீளம்: | 157 அடி (48 m)[2] |
பயணத்திட்டம்: | Full-rigged ship |
பணியாளர்: | 58 |
போர்க்கருவிகள்: | 32 × வெண்கல பீரங்கி[1] |
மெர்ச்சண்ட் ராயல் (Merchant Royal) ராயல் மெர்ச்சண்ட் என்றும் அழைக்கப்படுவது, 17ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வணிகக் கப்பலாகும். இது 1641 செப்டம்பர் 17 அன்று கோர்ன்வால் கவுண்டியில், லாண்ட்'ஸ் எண்டில் கடலில் மூழ்கியது. இக்கப்பலில் (இன்றைய மதிப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைந்தது 100,000 பவுண்டு தங்கம் [3], மெக்சிகன் வெள்ளிப் பாளங்கள் 400 (மேலும் 1 மில்லியன்) கிட்டத்தட்ட 500,000 எசுப்பானிய டாலர்கள் மற்றும் பிற நாணயங்கள், என அனைத்தும் சேர்ந்து இதை அனைத்து காலத்துக்காமான மிகவும் மதிப்புமிக்க மூழ்கிய கப்பலாக ஆக்கியது. [4]
மர்ச்சன்ட் ராயால் 1637 முதல் 1640 வரை மேற்கு இந்திய தீவுகளில் எசுமானியக் குடியேற்றங்களில் மூன்று ஆண்டுகள் வணிகம் செய்தது. இக்காலகட்டமானது இங்கிலாந்துக்கும் எசுபானியாவுக்கும் அமைதியான நல்லுறவு நிலவிவந்தத காலமாகும். மேற்கு இந்தியத் தீவுகளில் வணிக நோக்கில் நங்கூரமிட்டிருந்தத மெர்ச்சண்ட் ராயல் மற்றும் அதன் தங்கைக் கப்பலாக, டோவர் மெர்ச்சண்ட், ஆகிய இரு கப்பல்களும் லண்டனை நோக்கிப் புறப்படும் வழியில் ஸ்பெயினின் காடிஸ் துறைமுகத்தில் சில நாட்கள் தங்கியது. முந்தைய கடினமான பயணத்தால் மெர்ச்சென்ட் ராயலில் கசிவுகள் அதிகமாயிருந்து கப்பல் சற்று பலவீனமாக இருந்தது.
அச்சமயம் கேடிஸ் துறைமுகத்தில் நின்றுகொண்டி ருந்த எசுபாயினியக் கப்பல் ஒன்று திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. இக்கப்பல் புறப்படும்போது பெல்ஜியத்தின் பிளாண்டர்சு நகரத்தில் பணியில் உள்ள சுமார் 30,000 எசுபானிய வீரர்களுக்கான சம்பளத்தை அனுப்புவதாக இருந்து. கப்பல் தீக்கிரையாகிவிட்டதால் இந்த சம்பள நாணயங்களை அங்கு கொண்டு சேர்க்குமாறு எசுமானிய அதிராரிகள் மெர்சண்ட ராயல் கப்பல் தலைவரைக் கோரினார். சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு எசுபானியாவிடமிருந்து கப்பல் உரிமையாளர்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும் என்பதால் கேப்டன் லிம்ப்ரே இதற்கு ஒப்புக்கொண்டார். இந்தச் செல்வங்களை ஏற்றிக்கொண்டு ஆண்ட்வெரின் வழியில் தன் நாட்டுக்கு செல்லத் துவங்கியது.
1641, செப்டம்பர் 23 அன்று கார்ன்வெல்லின் மேற்குப் பகுதியான லேண்ட்ஸ் எண்ட் கடல் பகுதி. மிக மோசமான வானிலையால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் மெர்ச்சென்ட் ராயல் கப்பலில் கடல் நீர் புக ஆரம்பித்தது. இறுதியில் மெர்ச்சென்ட் ராயல் தன் சரக்குகளுடன் கடலில் மூழ்கியது.
கப்பல் தலைவர் உட்பட 40 பேர் உயிர் பிழைத்திருக்க, மீதி 18 பேர் நீரில் மூழ்கி இறந்து போயிருந்தார்கள். மேலும் மெர்சண்ட் ராயல் கப்பலில் இருந்த செல்வங்களை சகோதரி கப்பலான டோவர் மெர்ச்சென்டுக்கு மாற்றியதாக தெரியவில்லை.
முழ்கிய கப்பலைத் தேடுதல்
[தொகு]ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரஷன் என்ற நிறுவனமானது பல ஆண்டுகளாக மூழ்கிய மெர்சண்ட் ராயல் கப்பலைக் கண்டுபிடிக்க முயன்றுவருகிறது. ஆனால் இதில் இதுவரை வெற்றியடையவில்லை.
2007 ஆம் ஆண்டில் ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரஷன் குழுவானது பிளாக் ஸ்வான் என்ற திட்டத்தை அறிவித்தது. இதில் ஒரு மூழ்கிய கப்பலைக் கண்டறிந்தனர். அதில் இருந்து சுமார் 500 மில்லியன் (£ 363 மில்லியன்) மதிப்புள்ள வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்து. அது மெர்ச்சென்ட் ராயல்தான் என்று கருதப்பட்டது. [5] ஆனால் இது மெர்சண்ட் ராயல் கப்பல்தான் என ஒடிஸி குழுவானது இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இப்போது அது அது கி.பி. 1804இல் மூழ்கிப் போன ஸ்பெயின் கப்பலான நயெஸ்டா செனோரா டி லாஸ் மெர்சிடிஸாக இருக்கலாம் என நம்புகிறது. [6]
2009 ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி அதன் நிகழ்ச்சியான, ட்ரெசர் குவெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்காக மூழ்கிய கப்பல் தேடுவதைத் தொடர்ந்தது, ஆனால் இந்த முயற்சியும் மீண்டும் தோல்வியடைந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Merchant Royal Galleon 1627–1641". wrecksite.eu. 2012. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
- ↑ Leonard, Tom (19 May 2007). "Hoard of treasure 'found on wreck off Cornwall'". The Daily Telegraph (London: TMG). இணையக் கணினி நூலக மையம்:49632006. https://www.telegraph.co.uk/news/uknews/1552050/Hoard-of-treasure-found-on-wreck-off-Cornwall.html. பார்த்த நாள்: 8 October 2012.
- ↑ "WHM: The sinking of the Merchant Royal". https://www.wbez.org/shows/worldview/whm-the-sinking-of-the-merchant-royal/f08e36ae-5220-4800-8ebd-a91030586960. பார்த்த நாள்: 19 September 2017.
- ↑ Kramer, Jeffrey (2012). "Treasure Ships Around The World". treasurelore.com. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
- ↑ "Record wreck 'found off Cornwall'". BBC News. http://news.bbc.co.uk/1/hi/england/cornwall/6671975.stm. பார்த்த நாள்: 8 October 2012.
- ↑ "Black Swan - Project Overview". shipwreck.net. 2012. Archived from the original on 15 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.