உள்ளடக்கத்துக்குச் செல்

பேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முள்ளம்பன்றி மீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
DEAD PORCUPINE FISH FOUND AT BEACH PILLAYARKUPPAM,PUDUCHERRY
DEAD PORCUPINE FISH FOUND AT BEACH PILLAYARKUPPAM,PUDUCHERRY

பேத்தா அல்லது பேத்தை மீன் அல்லது பேத்தையன் மீன் அல்லது முள்ளம்பன்றி மீன் (porcupinefish) என்பது ஒரு வினோதமான கடல் மீனினமாகும். இவை ஆழம் குறைந்த கடல் பகுதியில் வாழ்கின்றன. இம்மீன் தன் உடலைப் பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. நீர் அல்லது காற்றைக்கொண்டு தனது உடலை ஊதிப்பெருக்கும் ஆற்றல்வாய்ந்தது. சில சமயங்களில் காற்றை நிரப்பிக்கொண்டு இரப்பர் பந்துபோல கடலில் மிதக்கும். ஏதாவது பறவை இதைப் பிடித்தாலும் இது ஊதிப்பெருகுவதால் இதை விழுங்க இயலாமல் விட்டுவிடும். இது மெதுவாக நீந்தக்கூடியது.[2] இம்மீனின் உடலில் முட்கள் காணப்படுகின்றன. இம்மீன் ஊதிப்பெருகும்போது இந்த முட்கள் விறைத்து நிற்கும். சாதாரண நிலையில் இம்மீனின் முட்கள் படுக்கை நிலையில் இருப்பதால் இது நீந்தும்போது எந்த இடைஞ்சலும் ஏற்படுவதில்லை. இது ஒரு நச்சு மீன் எனபதால் இதை பெரும்பாலான மீன்கள் உண்பதில்லை. மீறி உண்டால் இது ஊதிப் பெருகி விழுங்கும் மீனின் தொண்டையில் சிக்கி அந்த மீனைக் கொன்றுவிடும்.

மேற்கோள்

[தொகு]
  1. Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
  2. Matsuura, K. & Tyler, J.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேத்தா&oldid=4137953" இலிருந்து மீள்விக்கப்பட்டது