மும்மைப் புள்ளி
வெப்பவியக்கவியலில், ஒரு பொருளின் மும்மைப் புள்ளி (Triple point) என்பது அப்பொருளின் மூன்று கட்டங்கள் (வாயு, திரவம், திண்மம்) வெப்பச் சமநிலையில் ஒன்றுசேர்ந்தமையும் வெப்பநிலை, அழுத்தம் ஆகும்.[1] எடுத்துக்காட்டாக, பாதரசத்தின் மும்மைப் புள்ளி −38.8344 °C என்ற வெப்பநிலையிலும் 0.2 MPa அழுத்தத்திலும் ஏற்படும்.
திண்ம, திரவ, வாயு இடையேயான மும்மைப் புள்ளிகளைத் தவிர, பல்லுருவப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திண்ம நிலைகளினைக் கொண்ட மும்மைப் புள்ளிகள் இருக்கலாம். கீலியம்-4 ஒரு சிறப்பு வகையாகும், இது இரண்டு வெவ்வேறு திரவ நிலைகளைக் கொண்ட ஒரு மும்மைப் புள்ளியை தருகிறது. பொதுவாக p சாத்தியமான நிலைகளைக் கொண்ட தொகுதியில் அளவு மும்மைப்புள்ளிகள் உண்டு[1]
நீரின் மும்மைப் புள்ளியானது கெல்வின் எனப்படும் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை SI அலகினை வரையறுப்பதற்கு பயன்படுகிறது.[2]
நீரின் மும்மைப்புள்ளிகள்
[தொகு]திண்ம-திரவ-வாயு மும்மைப் புள்ளி
[தொகு]ஒரு குறித்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவ நீர், திண்ம பனி, நீராவியின் கலவை நிலையான சமநிலையில் ஒன்றுசேர்ந்தமைவது சரியாக 273.16 K (0.01 °C) வெப்பநிலையிலும் 611.73 பாசுக்கல் (ca. 6.1173 மில்லிபார், 0.0060373 atm) பகுதி ஆவியழுத்தத்திலும் ஏற்படுகிறது. அந்த நிலையில், அதன் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் தன்னிச்சையான சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் முழுவதையும் பனிக்கட்டியாக, நீராக, அல்லது நீராவியாக மாற்றலாம்.
மும்மைப் புள்ளிகளின் அட்டவணை
[தொகு]பொருட்கள் | T [K] | p [kPa]* |
---|---|---|
அசிட்டிலீன் | 192.4 | 120 |
அமோனியா | 195.40 | 6.076 |
ஆர்கன் | 83.81 | 68.9 |
ஆர்சனிக் | 1090 | 3628 |
பியூட்டேன் | 134.6 | 7 × 10−4 |
கார்பன் (கடுங்கரி) | 4765 | 10132 |
காபனீரொக்சைட்டு | 216.55 | 517 |
கார்பனோராக்சைடு | 68.10 | 15.37 |
குளோரோஃபார்ம் | 175.43 | 0.870 |
தியூட்டிரியம் | 18.63 | 17.1 |
எத்தேன் | 89.89 | 8 × 10−4 |
எத்தனால் | 150 | 4.3 × 10−7 |
எத்திலீன் | 104.0 | 0.12 |
பார்மிக் அமிலம் | 281.40 | 2.2 |
ஈலியம்-4 (லாம்டா புள்ளி]) | 2.19 | 5.1 |
எக்சாஃபுளோரோயீத்தேன் | 173.08 | 26.60 |
ஐதரசன் | 13.84 | 7.04 |
ஐதரசன் குளோரைடு | 158.96 | 13.9 |
அயோடின் | 386.65 | 12.07 |
ஐசோபியூட்டீன்[3] | 113.55 | 1.9481 × 10−5 |
பாதரசம் | 234.2 | 1.65 × 10−7 |
மெத்தேன் | 90.68 | 11.7 |
நியோன் | 24.57 | 43.2 |
நைட்ரிக் ஆக்சைடு | 109.50 | 21.92 |
நைதரசன் | 63.18 | 12.6 |
நைட்ரசு ஆக்சைடு | 182.34 | 87.85 |
ஆக்சிசன் | 54.36 | 0.152 |
பல்லேடியம் | 1825 | 3.5 × 10−3 |
பிளாட்டினம் | 2045 | 2.0 × 10−4 |
கந்தக டைஆக்சைடு | 197.69 | 1.67 |
டைட்டானியம் | 1941 | 5.3 × 10−3 |
யுரேனியம் எக்சாபுளோரைடு | 337.17 | 151.7 |
நீர் | 273.16 | 0.6117 |
செனான் | 161.3 | 81.5 |
நாகம் | 692.65 | 0.065 |
* கவனிக்கவும்: ஒப்பீட்டுக்காக, பொதுவான வளிமண்டல அமுக்கம்= 101.325 kPa (1 atm).
மேற்கோள்களும் குறிப்புக்களும்
[தொகு]- ↑ 1.0 1.1 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம் (1994). "Triple point". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Definition of the kelvin பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம் at BIPM
- ↑ See Isobutane (data page)