உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுக்கல் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாசுக்கல் அல்லது பாஸ்கல் (Pascal) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர்2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கணித அறிஞரும், இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான பிளேய்சு பாசுக்கல் (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.

1 Pa
= 1 N/m2 = 1 (kg·m/s2)/m2 = 1 kg/m·s2
= 0.01 மில்லிபார்
= 0.00001 பார்

இதே அலகு தகைவு (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண்(Young's modulus), இழுவலிமை (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது.

தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 டார் (ISO 2533) ஆகும்.

உலகெங்கிலும் வானிலையாளர்கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை மில்லிபார் என்னும் அலகால் அளந்துவந்தனர். SI அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். குறைக்கடத்தி கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே டார் (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.

1 கெக்டோ பாசுக்கல்(hectopascal) (hPa)
= 100 Pa = 1 (மில்லிபார்) mbar
1 கிலோபாசுக்கல் (kilopascal) (kPa)
= 1000 Pa = 10 hPa

முன்னாளைய சோவியத் யூனியனில் மீட்டர்-டன்-நொடி அலகுமுறையில் (mts system) பீசே (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும்.

பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]

(அறிமுகத்துக்கு SI முன்னொட்டு பார்க்கவும்)

0.5 Pa புளூட்டோவின் வளிமண்டல அழுத்தம் (1988 ஆம் ஆண்டு கணிப்பு)
10 பா (Pa) ஒரு செங்குத்துக்குழாயில் ஒரு மில்லிமீட்டர் உயரம் நீரின் உயர்ச்சியால் அடியே எற்படும் அழுத்தம்;
1 kPa (கிபா) செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், ∼ பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %.
10 kPa (கிபா) 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அழுத்தம்¹, அல்லது
பூமியின் கடல் மட்டம்கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)
101.325 kPa (கிபா) கடல்மட்டத்தில் இருக்கும் சீர்தரமான வளிமண்டல அழுத்தம் = 1013.25 hPa (ஃகெபா)
10 MPa (மெபா) - 100 MPa (மெபா) பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பெரும்பிளம் (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 கிலோமீட்டர் (km) ஆழத்தில் உள்ள அழுத்தம்
10 GPa (கிகாபா) வைரம் உருவாகும் அழுத்தம்;.
100 GPa (கிகாபா) கருத்தியல் கணிப்புப்படி கரிம நானோகுழாய் (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் இழுவலிமை (tensile strength)

¹பூமியின் நிலப்பரப்பில்

மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு

[தொகு]
1 பார் 100 000 Pa
1 மில்லிபார் 100 Pa
1 வளிமண்டல அழுத்தம் 101 325 Pa
1 மில்லிமீட்டர் பாதரசம் (mmHg) (அல்லது டார் (Torr)) 133.332 Pa
1 அங்குல பாதரசம் (1 mmHg) 3 386.833 Pa
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுக்கல்_(அலகு)&oldid=3519828" இலிருந்து மீள்விக்கப்பட்டது