உள்ளடக்கத்துக்குச் செல்

மும்மெத்தில் போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மெத்தில் போரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மும்மெத்தாக்சி போரேன், போரான் மும்மெத்தாக்சைடு
இனங்காட்டிகள்
121-43-7 Y
ChEBI CHEBI:38913 Y
ChemSpider 8157 Y
EC number 204-468-9
InChI
  • InChI=1S/C3H9BO3/c1-5-4(6-2)7-3/h1-3H3 Y
    Key: WRECIMRULFAWHA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H9BO3/c1-5-4(6-2)7-3/h1-3H3
    Key: WRECIMRULFAWHA-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8470
  • O(B(OC)OC)C
பண்புகள்
C3H9BO3
வாய்ப்பாட்டு எடை 103.91 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.932 கி/மி.லி
உருகுநிலை −34 °C (−29 °F; 239 K)
கொதிநிலை 68 முதல் 69
சிதைவுறும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பிடித்து எரியும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மும்மெத்தில் பாசுபைட்டு
டெட்ராமெத்தில் ஆர்த்தோசிலிக்கேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மும்மெத்தில் போரேட்டு (Trimethyl borate) என்பது B(OCH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம போரான் சேர்மமான டிரைமெத்தில் போரேட்டு சேர்மம் நிறமற்ற நீர்மமாகவும், பச்சைநிற சுவாலையுடனும் எரிகிறது [1] சோடியம் போரோ ஐதரைடு தயாரிக்கையில் ஒரு இடைநிலை வேதிப்பொருளாக உருவாகிறது. மேலும், கரிம வேதியியலில் ஒரு பரவலான வினைப்பொருளாக மும்மெத்தில் போரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மெத்தனாலில்உள்ள போரிக் அமிலத்தின் பச்சை நிற தீச்சுவாலை

போரிக் அமிலத்தை அல்லது தண்ணீர் நீக்கப்படவேண்டிய ஆல்ககால்களுடன் சேர்ந்துள்ள தொடர்புடைய போரான் ஆக்சைடுகளை சூடுபடுத்துவதால் போரேட்டு எசுத்தர்கள் தயாரிக்கப்படுகின்றன [1].

பயன்பாடுகள்

[தொகு]

போரோ ஐதரைடு தயாரிப்பதற்கு மும்மெத்தில் போரேட்டை சோடியம் ஐதரைடுடன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்துகிறார்கள்.

4 NaH + B(OCH3)3 → NaBH4 + 3 NaOCH3

உலோகங்கள் இணைப்புச் செயல்முறையிலும், பற்றவைக்கும் இளக்கிகளிலும் ஆக்சிசனேற்ற தடுப்பியாக மும்மெத்தில் போரேட்டு பயன்படுத்தப்படுகிறது. தீ ஒடுக்கியாகப் பயன்படுத்தப்படும் இதை சில பலபடிகளில் கூட்டுப் பொருளாக பயன்படுத்தவும் [1] ஆராயப்பட்டு வருகிறது என்பதைத் தவிர வேறு வர்த்தகப்பயன்கள் இதற்குக் கிடையாது. கரிமத் தொகுப்பு வினைகளில் பயனுள்ள வினைப்பொருளாக, சுசுக்கி இணைப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் போரொனிக் அமிலங்களுக்கு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. கிரிக்னார்டு வினைப்பொருளுடன் மும்மெத்தில் போரேட்டைச் சேர்த்து தொடர்ந்து நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் போரோனிக் அமிலங்கள் உருவாகின்றன [2][3]

ArMgBr + B(OCH3)3 → MgBrOCH3 + ArB(OCH3)2
ArB(OCH3)2 + 2 H2O → ArB(OH)2 + 2 HOCH3.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Robert J. Brotherton, C. Joseph Weber, Clarence R. Guibert, John L. Little "Boron Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2000, Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a04_309
  2. Kazuaki Ishihara, Suguru Ohara, Hisashi Yamamoto (2002). "3,4,5-Trifluorophenylboronic Acid". Organic Syntheses 79: 176. http://www.orgsyn.org/demo.aspx?prep=V79P0176. ; Collective Volume, vol. 10, p. 80
  3. R. L. Kidwell, M. Murphy, and S. D. Darling (1969). "Phenols: 6-Methoxy-2-naphthol". Organic Syntheses 49: 90. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P0918. ; Collective Volume, vol. 10, p. 80

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மெத்தில்_போரேட்டு&oldid=3793962" இலிருந்து மீள்விக்கப்பட்டது