மும்மெத்தில் பாசுபைட்டு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முமெத்தில் பாசுபைட்டு[1] | |||
வேறு பெயர்கள்
முமெத்தில் பாசுபீன்
முமெத்தாக்கி பாசுபேன் | |||
இனங்காட்டிகள் | |||
121-45-9 | |||
ChEBI | CHEBI:183313 | ||
ChemSpider | 8159 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 8472 | ||
| |||
UNII | 26Q0321ZDG | ||
பண்புகள் | |||
C3H9O3P | |||
வாய்ப்பாட்டு எடை | 124.08 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | தனித்துவம், கடுங்காரம்[2] | ||
அடர்த்தி | 1.052 | ||
உருகுநிலை | −78 °C (−108 °F; 195 K) | ||
கொதிநிலை | 111 °C (232 °F; 384 K) | ||
reacts[2] | |||
ஆவியமுக்கம் | 24 மீமிபாதரசம் (25°செல்சியசு)[2] | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 28 °C; 82 °F; 301 K[2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[2] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
மொத்த எடை சராசரி மில்லியனுக்கு 2 பகுதிகள் (10 மி.கி/மீ3)[2] | ||
உடனடி அபாயம்
|
N.D.[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மும்மெத்தில் பாசுபைட்டு (Trimethyl phosphite) என்பது P(OCH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த கரிமபாசுபரசு சேர்மம் பெரும்பாலும் P(OMe)3 என்ற சுருக்க வாய்ப்பாட்டால் அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் மிகவும் கடுமையான கார வாசனையுடன் உள்ளது. எளிமையான பாசுபைட்டு எசுதர் என்று வகைப்படுத்தப்படும் மும்மெத்தில் பசுபைட்டு கரிம உலோக வேதியியலில் ஓர் ஈந்தணைவியாகவும் கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலக்கூறு கட்டமைப்பு மூன்று மெத்தாக்சி குழுக்களுடன் பிணைக்கப்பட்ட ஒரு பட்டைக்கூம்பு பாசுபரசு(III) மையத்தைக் கொண்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]பாசுபரசு முக்குளோரைடிலிருந்து மும்மெத்தில் பாசுபைட்டு தயாரிக்கப்படுகிறது.
- PCl3 + 3 CH3OH → P(OCH3)3 + 3 HCl
வினைகள்
[தொகு]மும்மெத்தில் பாசுபைட்டு ஆக்சிசனேற்றத்திற்கு உட்பட்டு முமெத்தில் பாசுபேட்டாக மாறுகிறது.
வினையூக்க அளவு மெத்தில் அயோடைடுடன் அர்புசோவ் வினையில் ஈடுபட்டு இருமெத்தில் மெத்தில் பாசுபோனேட்டைக் கொடுக்கிறது:
- P(OCH3)3 → CH3P(O)(OCH3)2
ஓர் ஈந்தணைவியாக மும்மெத்தில் பாசுபைட்டு சிறிய கூம்பு கோணத்தைக் கொண்டு முமெத்தில்பாசுபீனுடன் ஒப்பிடும்போது சிறந்த ஏற்பி பண்புகளைக் கொண்டுள்ளது. Ni(P(OMe)3)4 (உருகுநிலை. 108 °செல்சியசு) என்ற நிறமற்ற நான்முக அணைவுச் சேர்மம் இதை பிரதிநிதிப்படுத்தும் ஒரு வழித்தோன்றலாகும்.[3] கிளூய் ஈந்தணைவி எனப்படும் திரிசூல ஈந்தணைவி மும்மெத்தில் பாசுபைட்டிலிருந்து பெறப்படுகிறது. இந்த ஈந்தணைவி உருவாக்கம் மும்மெத்தில் பாசுபைட்டு (மற்றும் இதன் அணைவுச் சேர்மங்கள்) அர்புசோவ் வினைக்கு எளிதில் பாதிக்கப்படுவதை விளக்குகிறது.
கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு மிதமான கந்தகநீக்கி வினையாக்கியாகவும் மும்மெத்தில் பாசுபைட்டு பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக டெட்ராதயாபுல்வலீனின் வழித்தோன்றல்களை தயாரிப்பதில் இது பயன்படுத்தப்படுகிறது.[4]
நச்சுத்தன்மை
[தொகு]மும்மெத்தில் பாசுபைட்டின் உயிர் கொல்லும் அளவு எலிகளுக்கு வாய்வழியாகக் கொடுக்கும்போது கிலோகிராமுக்கு 1600–2890 மில்லிகிராம் ஆகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 931. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0640". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Steven D. Ittel; Cushing, M. A. (1990). Complexes of Nickel(0). Inorganic Syntheses. Vol. 28. pp. 98–104. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132593.ch25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-52619-3.
- ↑ Larsen, Jan; Lenoir, Christine (1995). "2,2'-Bi-5,6-Dihydro-1,3-Dithiolo[4,5-b][1,4]dithiinylidene (BEDT-TTF)". Org. Synth. 72: 265. doi:10.15227/orgsyn.072.0265.
- ↑ Svara, J.; Weferling, N.; Hofmann, T. (2005), "Phosphorus Compounds, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_545.pub2