முப்புளோரைடு
Appearance
முப்புளோரைடு (Trifluoride) என்பது ஓர் அணு அல்லது அயனி மூன்று புளோரின் அணுக்கள் அல்லது அயனிகளுடன் தொடர்புகொண்டுள்ள சேர்மங்களை முப்புளோரைடுகள் அல்லது டிரைபுளோரைடுகள் என்று அழைக்கிறோம். இரும்பு, அருமண் தனிமங்கள் மற்றும் தனிமவரிசை அட்டவணையின் 3,13 மற்றும் 15 ஆவது குழுக்களில் உள்ள உலோகங்கள் போன்ற பல உலோகங்கள் முப்புளோரைடுகளை உருவாக்குகின்றன. பெர்ரிக் புளோரைடு மற்றும் இண்டியம் புளோரைடு தவிர பெரும்பாலான உலோக முப்புளோரைடுகள் நீரில் சிறிதளவாகவே கரையக்கூடியவையாகும். ஆனால் சில புளோரைடுகள் மற்ற கரைப்பான்களில் கரைகின்றன.[1]
முப்புளோரைடுகளின் பட்டியல்
[தொகு]- ஆக்டினியம் புளோரைடு, AcF3
- அலுமினியம் புளோரைடு, AlF3
- அமெரிசியம்(III) புளோரைடு, AmF3
- ஆண்டிமனி டிரைபுளோரைடு, SbF3,
- ஆர்சனிக் முப்புளோரைடு, AsF3
- பெர்க்கிலியம்(III) புளோரைடு, BkF3
- புரோமின் முப்புளோரைடு, BrF3
- கலிபோர்னியம்(III) புளோரைடு, CaF3
- சீரியம்(III) புளோரைடு, CeF3
- குரோமியம்(III) புளோரைடு, CrF3
- கோபால்ட்(III) புளோரைடு, CoF3
- கியூரியம்(III) புளோரைடு, CmF3
- டிசிப்ரோசியம்(III) புளோரைடு, DyF3
- ஐன்சுடைனியம் புளோரைடு, EsF3
- யூரோப்பியம்(III) புளோரைடு, EuF3
- எர்பியம்(III) புளோரைடு, ErF3
- கடோலினியம்(III) புளோரைடு, GdF3
- காலியம்(III) புளோரைடு, GaF3
- தங்கம்(III) புளோரைடு, AuF3
- ஓல்மியம்(III) புளோரைடு, HoF3
- இண்டியம்(III) புளோரைடு, InF3
- அயோடின் முப்புளோரைடு, IF3,
- இரிடியம் முப்புளோரைடு, IrF3
- லியுதேத்தியம்(III) புளோரைடு, LuF3
- மாங்கனீசு(III) புளோரைடு, MnF3
- நியோடிமியம் புளோரைடு, NdF3
- நெப்டியூனியம்(III) புளோரைடு, NpF3
- பலேடியம்(II,IV) புளோரைடு, Pd[PF6],
- புளுட்டோனியம்(III) புளோரைடு, PuF3
- பிரசியோடைமியம்(III) புளோரைடு, PrF3
- புரோமித்தியம்(III) புளோரைடு, PmF3
- ரோடியம் முப்புளோரைடு, RhF3
- சமாரியம்(III) புளோரைடு, SmF3
- வெள்ளி(III) புளோரைடு, AgF3,
- டெர்பியம்(III) புளோரைடு, TbF3
- தாலியம் முப்புளோரைடு, TlF3
- தயோபாசுபோரைல் புளோரைடு, PSF3,
- தூலியம்(III) புளோரைடு, TmF3
- தைட்டானியம்(III) புளோரைடு, TiF3
- யுரேனியம் ட்ரைபுளோரைடு, UF3
- வனேடியம்(III) புளோரைடு, VF3
- வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு, VOF3
- இட்டர்பியம்(III) புளோரைடு, YbF3
- இட்ரியம்(III) புளோரைடு, YF3
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sobolev, Boris Petrovich (2001). The Rare Earth Trifluorides: Introduction to materials science of multicomponent metal fluoride crystals. Institut d'Estudis Catalans. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7283-610-X.