முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1
மாதிரி படம் முனைய துணைக்கோள் ஏவுகலம் | |||||
திட்ட வகை | ஏவூர்தி | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
இணையதளம் | இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம் | ||||
திட்டக் காலம் | 1090.52 நொடிகள் | ||||
புவி உச்சநிலை | 826 கிலோமீட்டர்கள் (513 mi) | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கலம் | முனைய துணைக்கோள் ஏவுகலம் | ||||
விண்கல வகை | செலுத்து வாகனம் | ||||
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
ஏவல் திணிவு | 294,000 கிலோகிராம்கள் (648,000 lb) | ||||
ஏற்புச்சுமை-நிறை | 1,250 கிலோகிராம்கள் (2,760 lb) | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 10:20:00, செப்டம்பர் 29, 1997 | (இந்திய சீர் நேரம்||||
ஏவுகலன் | முனைய துணைக்கோள் ஏவுகலம் | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா | ||||
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் | ||||
திட்ட முடிவு | |||||
கழிவு அகற்றம் | கழிவுச் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது | ||||
முடக்கம் | 29 செப்டம்பர் 1997 | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
சுற்றுவெளி | சூரிய இசைவு கீழ் புவிச் சுற்றுப்பாதை | ||||
சாய்வு | 98.731° | ||||
----
|
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 (PSLV-C1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயல் திட்டமான முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் நான்காவது திட்டம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1டி எனும் செயற்கைக்கோளை ஏந்திச்சென்றது.[1][2][3][4] இது உருசியாவின் உதவி இல்லாமல் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் செலுத்து வாகனம் மற்றும் பி. எஸ். எல். வி.-யின் முதல் செயற்பாட்டு விமானம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1 டியை ஒரு துருவச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இதன் ஒரு பகுதியில் இருந்து ஹீலியம் வளி வெளியேறியதால், இதனைத் திட்டமிட்டபடி வட்டச் சுற்றுப்பாதையில் வைக்க இயலாமல் நீள் வட்டச் சுற்றுப்பாதையில் செலுத்தினர். செயற்கைக்கோளைத் தக்க உயரத்தில் வைக்க முடியாமல் போனதால் இந்தத் திட்டம் பகுதியளவு தோல்வி அடைந்ததாகவே கருதப்படுகிறது.[2][5] [6]
திட்டத்தின் அளவுருக்கள்
[தொகு]- நிறை:
- மொத்த எடை இழப்பு: 294000 கிலோகிராம்
- மொத்த பொருட்களின் எடை: 1250 கிலோகிராம்
- ஒட்டுமொத்த உயரம்: 44.4 மீட்டர்
- எரிபொருள்:
- நிலை 1: திட HTPB அடிப்படையிலானது
- நிலை 2: திரவ UH 25 + N2O4
- நிலை 3: திட HTPB அடிப்படையிலானது
- நிலை 4: திரவ MMH + MON-3
- உயரம்: 826 கிலோமீட்டர்
- அதிகபட்ச வேகம்: விநாடிக்கு 7436 மீட்டர் (ஏவுதலின் நான்காவது கட்டத்தில் பதிவு செய்தது)
- சாய்வு: 98.731°
- காலம்: 1090.52 விநாடிகள்
ஏவுதல்
[தொகு]பி. எஸ். எல். வி-சி1 ஆனது, 29 செப்டம்பர் 1997 அன்று, ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு ஒத்திசைவான கோளப்பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.[1][2][3][5][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PSLV-C1". இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம் இம் மூலத்தில் இருந்து 2016-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160811185358/http://www.isro.gov.in/launcher/pslv-c1. பார்த்த நாள்: 24 சூன் 2016.
- ↑ 2.0 2.1 2.2 "PSLV-C1 brochure". இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம் இம் மூலத்தில் இருந்து 2017-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170305190336/http://www.isro.gov.in/sites/default/files/pdf/pslv-brochures/PSLVC1.pdf. பார்த்த நாள்: 24 சூன் 2016.
- ↑ 3.0 3.1 "PSLV". spacelaunchreport.com. http://www.spacelaunchreport.com/pslv.html. பார்த்த நாள்: 24 சூன் 2016.
- ↑ 4.0 4.1 "ISRO Timeline". இந்திய விண்வெளி ஆய்வு மைய இணையத்தளம் இம் மூலத்தில் இருந்து 2016-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161120150630/http://isro.gov.in/about-isro/isros-timeline-1960s-to-today#39. பார்த்த நாள்: 24 சூன் 2016.
- ↑ 5.0 5.1 "Space". digitaltoday.in. http://archives.digitaltoday.in/indiatoday/13101997/space.html. பார்த்த நாள்: 24 சூன் 2016.
- ↑ "PSLV fail". spacelaunchreport.com இம் மூலத்தில் இருந்து 2014-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141011212154/http://www.spacelaunchreport.com/slvfail.txt. பார்த்த நாள்: 24 சூன் 2016.