உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் முசாபர் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் முசாபர் சா
தில்லி சுல்தானகத்தின் சார்பில் குசராத்து ஆளுநராக நியமிக்கப்பட்டவர்
ஆட்சிக்காலம்1391–1403
முன்னையவர்பர்கத்-உல்-முல்க் ரஸ்தி கான்
பின்னையவர்முதலாம் முகமது சா
ஆட்சிக்காலம்1404–1411
முன்னையவர்முதலாம் முகமது சா
பின்னையவர்முதலாம் அகமது சா
இறப்பு1411
புதைத்த இடம்1411
அரசமரபுமுசாபரித்து வம்சம்
தந்தைவாஜி-உல்-முல்க்
மதம்இசுலாம்
முசாபர் ஷாவின் செப்பு நாணயம்

சாபர் கான் என்ற பெயரில் பிறந்த முதலாம் முசாபர் சா (Muzaffar Shah I) , இடைக்கால இந்தியாவில் முசாபரித்து வம்சத்தை நிறுவியவர்.[1] [2] தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தால் இவர் குசராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தைமூரின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லியில் குழப்பம் நிலவியபோது குசராத்து சுல்தானகத்தின் சுதந்திரத்தை அறிவித்தார். இவர் குசராத்து சுல்தானகத்தை 1391 முதல் 1403 வரையிலும், மீண்டும் 1404 முதல் 1411 வரையிலும் ஆட்சி செய்தார்.

வாழ்க்கை[தொகு]

வாஜி-உல்-முல்க்கின் மகனான சாபர் கான், முஹரம் 25, ஆண்டு 743 (30 ஜூன் 1342 கி.பி.) அன்று பிறந்தார். [3]

ஆட்சி[தொகு]

கி.பி. 1398 இல் நசிருதின் மக்முதுவின் ஆட்சியின் போது, துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார். தில்லி அருகே நடந்த போரில் தைமூர் வெற்றிபெற்று நகருக்குள் நுழைந்தார். அங்கு அவர் பொது மக்களை படுகொலை செய்தார். 192 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கிய-ஆப்கான் முன்னோடிகளால் குவிக்கப்பட்ட கணிசமான அளவு செல்வங்களை தைமூர் தில்லியிலிருந்துப் பெற்றார்.[4]சுல்தான் இரண்டாம் மக்முது தப்பித்து, பதானை அடைந்தார். தில்லியைக் கைப்பற்ற சாபர் கான் தனக்கு உதவுவார் என அவர் நம்பினார். ஆனால் சாபர் கான் மறுத்துவிட்டார். [5]

இவரது மகனான தாதர் கான் இவரை தில்லி நோக்கி இராணுவத்தை அணிவகுத்துச் சென்று சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதை இவர் மறுத்துவிட்டார். இதன் விளைவாக, 1403 இல், தாதர் கான் இவரை அசாவல் (பிற்கால அகமதாபாது ) சிறையில் அடைத்து, சுல்தானாக பதவியேற்று முகம்மது சா என்ற பட்டத்த்தை வைத்துக் கொண்டார். பின்னர், தில்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் வழியில் நருமதை ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள சினோர் என்ற இடத்தில் இவரது சித்தப்பா சம்சு கான் தண்டானி என்பவரால் இவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. சில ஆதாரங்கள் வானிலை காரணமாகவோ அல்லது அதிக குடிப்பழக்கம் காரணமாகவோ இவர் இயற்கையாக இறந்தார் என்று கூறுகிறார்கள். முகமது சாவின் மரணத்திற்குப் பிறகு, ஜாபர் கான் 1404 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜாபர் கான் தனது சொந்த தம்பியான சம்சு கான் தண்டானியை அரசாங்கத்தைத் தொடரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் ஜாபர் கான் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைமீண்டும் எடுத்துக் கொண்டார். 1407 ஆம் ஆண்டில், இவர் பீர்பூர் அல்லது ஷெர்பூரில் சுல்தான் முதலாம் முசாபர் சா என்று தன்னை அறிவித்துக் கொண்டார். மேலும் தனது பெயரில் நாணயங்களையும் வெளியிட்டார். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துDhir, Krishna S. (2022-01-01). Urdu: A Multidisciplinary Analysis (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 498. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-4301-1.
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துStein, Burton (2010-04-12). A History of India (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9509-6.

    பாண்டியர் செப்பேடுகள் பத்துChandra, Satish. Medieval India ( From Sultanat to the Mughals), PART ONE Delhi Sultanat ( 1206-1526) (in ஆங்கிலம்). Har-Anand Publications. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124110645.

    பாண்டியர் செப்பேடுகள் பத்துSaran, Kishori Lal. The legacy of Muslim Rule in India. Aditya Prakashan. p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185689036.

    பாண்டியர் செப்பேடுகள் பத்துJournal of Oriental Studies, Volume 39 (in ஆங்கிலம்). p. 120.

    பாண்டியர் செப்பேடுகள் பத்துJutta, Jain-Neubauer. The Stepwells of Gujarat: In Art- Historical perspective. p. 62.

    பாண்டியர் செப்பேடுகள் பத்துKapadia, Aparna. Gujarat: The Long Fifteenth Century and the Making of a Region. Cambridge University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107153318.
  3. Misra, Satish Ch. (1960). "MUZAFFAR SHAH, THE FOUNDER OF THE DYNASTY OF THE SULTANS OF GUJARAT—AN APPRECIATION". Proceedings of the Indian History Congress 23: 163–167. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. 
  4. பாண்டியர் செப்பேடுகள் பத்துGrousset, René (1970). The empire of the steppes; a history of central Asia (in ஆங்கிலம் and பிரெஞ்சு). Internet Archive. New Brunswick, N.J., Rutgers University Press. pp. 444–445. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-0627-2.
  5. Taylor 1902, ப. 5.
  6. Taylor 1902, ப. 6-7.
  7. Campbell 1896, ப. 235.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_முசாபர்_சா&oldid=3835189" இலிருந்து மீள்விக்கப்பட்டது