முதலாம் முகமது சா
முதலாம் முகமது சா | |
---|---|
முசாபரித்து சுல்தான் | |
குசத்தின் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 1403 - 1404 |
முன்னையவர் | முதலாம் முசாபர் சா |
பின்னையவர் | முதலாம் முசாபர் சா |
இறப்பு | 1404 |
அரசமரபு | முசாபரித்து வம்சம் |
தந்தை | முசாபர் சா |
மதம் | இசுலாம் |
தாதர் கான் என்ற பெயரில் பிறந்த முதலாம் முகமது ஷா (Muhammad Shah I), முசாபரித்து வம்சத்தின் ஆட்சியாளராக இருந்தார். இவர் தனது தந்தை முதலாம் முசாபர் சாவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு 1403 முதல் 1404 வரை குசராத்து சுல்தானகத்தை குறுகிய காலம் ஆண்டார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]நசிருதீன் மக்முது, தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த சுல்தான் மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா என்பவரது மகனாவார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மூத்த மகன் அலா உத்-தின் சிக்கந்தர் சா சுல்தானானார். ஆனால் நோய் காரணமாக சிக்கந்தர் 8 மார்ச் 1394 அன்று நோயால் இறந்தார். பின்னர் அவரது இளைய சகோதரரான நசிருதீன் முகமது அவருக்குப் பிறகு பதவியேற்றார். இருப்பினும், அவரது உறவினரான நுஸ்ரத் சா (நஸ்ரத் கான் என்றும் அழைக்கப்படுகிறார்.) அரியணையின் உரிமையைக் கோரினார். இதன் மூலம் 1394 முதல் 1397 வரை வாரிசுப் போர் தொடர்ந்தது. இந்த நேரத்தில், நசிருதீன் தில்லியிலிருந்து ஆட்சி செய்தார். அதே நேரத்தில் நுஸ்ரத் ஷா பிரோசாபாத்திலிருந்து ஆட்சி செய்தார்.[2]
கி.பி. 1398 இல் நசிருதின் மக்முதுவின் ஆட்சியின் போது, துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார். தில்லி அருகே நடந்த போரில் தைமூர் வெற்றிபெற்று நகருக்குள் நுழைந்தார். அங்கு அவர் பொது மக்களை படுகொலை செய்தார். 192 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கிய-ஆப்கான் முன்னோடிகளால் குவிக்கப்பட்ட கணிசமான அளவு செல்வங்களை தைமூர் தில்லியிலிருந்துப் பெற்றார்.[3]சுல்தான் இரண்டாம் மக்முது தப்பித்து, பதானை அடைந்தார். தில்லியைக் கைப்பற்ற சாபர் கான் தனக்கு உதவுவார் என அவர் நம்பினார். ஆனால் சாபர் கான் மறுத்துவிட்டார். [4]
ஆட்சி
[தொகு]சாபர் கானின் மகனான தாதர் கான் தனது தந்தையை தில்லி நோக்கி இராணுவத்தை அணிவகுத்துச் சென்று சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதை அவர் மறுத்துவிட்டார். இதன் விளைவாக, 1403 இல், தாதர் அவரை அசாவல் (பிற்கால அகமதாபாத் ) சிறையில் அடைத்து, சுல்தானாக பதவியேற்று முகம்மது சா என்ற பட்டத்த்தை வைத்துக் கொண்டார். பின்னர், தில்லியை நோக்கி அணிவகுத்துச் சென்றார். ஆனால் வழியில் நர்மதை ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள சினோர் என்ற இடத்தில் இவரது சித்தப்பா சம்சு கான் தண்டானி என்பவரால் இவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. சில ஆதாரங்கள் வானிலை காரணமாகவோ அல்லது அதிக குடிப்பழக்கம் காரணமாகவோ இவர் இயற்கையாக இறந்தார் என்று கூறுகிறார்கள். முகமது சாவின் மரணத்திற்குப் பிறகு, ஜாபர் கான் 1404 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜாபர் கான் தனது சொந்த தம்பியான சம்சு கான் தண்டானியை அரசாங்கத்தைத் தொடரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் ஜாபர் கான் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைமீண்டும் எடுத்துக் கொண்டார். 1407 ஆம் ஆண்டில், அவர் பீர்பூர் அல்லது ஷெர்பூரில் சுல்தான் முசாபர் ஷா I என்று தன்னை அறிவித்துக் கொண்டார். மேலும் தனது பெயரில் நாணயங்களையும் வெளியிட்டார். [5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Campbell 1896, ப. 234.
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- ↑ Grousset, René (1970). The empire of the steppes; a history of central Asia (in ஆங்கிலம் and பிரெஞ்சு). Internet Archive. New Brunswick, N.J., Rutgers University Press. pp. 444–445. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-0627-2.
- ↑ Taylor 1902, ப. 5.
- ↑ Taylor 1902, ப. 6-7.
- ↑ Campbell 1896, ப. 235.
உசாத்துணை
[தொகு]- Taylor, Georg P. (1902). The Coins Of The Gujarat Saltanat. Vol. XXI. Mumbai: Royal Asiatic Society of Bombay. hdl:2015/104269. Archived from the original on 2017-03-01. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Campbell, James Macnabb (1896). "Chapter I. Early Musalmán Governors.(A.D. 1297–1403.) and II. ÁHMEDÁBÁD KINGS. (A. D. 1403–1573.)". In James Macnabb Campbell (ed.). History of Gujarát. Gazetteer of the Bombay Presidency. Vol. I. Part II. Musalmán Gujarát. (A.D. 1297–1760.). The Government Central Press. pp. 230–236. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.