முகம்மது மசிடோ
சொகோட்டோவின் பத்தொன்பதாவது சுல்தான் இப்றாகீம் முகம்மது மசிடோ டான் அபூபக்கர் (1928 - ஒக்டோபர் 29, 2006) (1996 ஏப்ரல் 20 முதல் 2006 இல் அவர் இறக்கும் வரை), வடக்கு நைஜீரியாவின் சொகோட்டோவின் பெயரளவு ஆட்சியாளராகவும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான நைஜீரிய தேசிய மீஉயர் பேரவையின் தலைவராகவும் விளங்கினார். சொகோட்டோ சுல்தான் என்ற வகையில் அவரே எழுபது மில்லியன் எண்ணிக்கையினரான நைஜீரியா வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஆன்மிகத் தலைவராக விளங்கினார்.[1]. 2000 மார்ச் 7 ஆம் திகதி வடக்கு நைஜீரியாவின் தேவைகள் பற்றிக் காண்பதற்குப் பொறுப்பாக அரெவா ஆலோசனை அரங்கம் என்ற பெயரில் அமைப்பொன்றை கடுனா நகரில் நிறுவுவதற்கு அவர் பொறுப்பாயிருந்தார்.[2]
2006 ஒக்டோபர் 29 அன்று அபுஜா நகரிலிருந்து சொகோட்டோ நகருக்குப் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் [3] அவரும், நைஜீரிய செனட் உறுப்பினரான அவரது மகன் பதாமசி மசிடோ, அவரது ஒரே பேரன் மற்றும் சொகோட்டோ மாநிலத்தின் அதிகாரிகள் ஆகியோர் உட்பட 104 பேர் பலியாகினர்.
முகம்மது மசிடோ சொகோட்டோ சுல்தானகத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அதன் பதினேழாவது சுல்தான் சித்தீக் அபூபக்கர் டான் உதுமான் என்பவரின் மூத்த மகனாவார்.[4] மசிடோ தன்னுடைய தந்தை இறந்தவுடனே சொகோட்டோவின் சுல்தானாகப் பதவியேற்கவில்லை. மாறாக, சொகோட்டோவின் பதினெட்டாவது சுல்தானாகப் பதவி வகித்த இப்றாகீம் தாசூகி நைஜீரிய இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சாவினால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட பின்னரே சுல்தான் பதவியை ஏற்றுக்கொண்டார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Estelle Shirbon, ராய்ட்டர்ஸ் (2006-10-30). "நைஜீரிய விமான விபத்தில் 99 பேர் பலி". பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "அரெவா ஆலோசனை அரங்கத்தின் வரலாறு". NigerianBestForum. June 22, 2008. Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
- ↑ த நியூயார்க் டைம்ஸ் (October 29, 2006). "நைஜீரிய ஜெட் விபத்தில் 104 பேர் பலி". பார்க்கப்பட்ட நாள் 2007-01-17. (registration required)
- ↑ John N. Paden, Dawodu.com. "சொகோட்டோ கலீபகமும் அதன் மரபுகளும் (1804-2004)". பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.
- ↑ அபூபக்கர் உமர், நைஜர் கழிமுகப் பேரவை. "ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் மசிடோ". Archived from the original on 2004-10-20. பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)(dead as of June 10, 2007, at இணைய ஆவணகம்)
வெளித் தொடுப்புகள்
[தொகு]- இறப்பு: சொகோட்டோ சுல்தான், மார்ட்டின் பிளாவுட், பிபிசி செய்திகள், 29 ஒக்டோபர் 2006
- மசிடோவின் பண்புகளைப் புகழும் கத்தோலிக்கர் பரணிடப்பட்டது 2006-11-03 at the வந்தவழி இயந்திரம், The Guardian, Nigerial, நவம்பர் 3, 2006
- மறைந்த சுல்தான் மற்றும் விபத்தில் பலியானோருக்கு மொரோக்கோ சுல்தான் அனுதாபம் பரணிடப்பட்டது 2006-11-14 at the வந்தவழி இயந்திரம், The Guardian, Nigerial, நவம்பர் 3, 2006