முகமது அலி வம்சம்
Appearance
முகமது அலி வம்சம் (அலவிய்யா வம்சம்) | |
---|---|
நாடு | முகமது அலி வம்சத்தின் ஆட்சியில் எகிப்து மற்றும் சூடான் |
விருதுப் பெயர்கள் | வளி, கேதிவே என்று சுய-அறிவிப்பு விடப்பட்டது(1805-1867) கேதிவே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது(1867-1914) சுல்தான் (1914-1922) மன்னர் (1922-1953) |
நிறுவிய ஆண்டு | 1805: முகமது அலி அதிகாரத்தை ஒருங்கிணைத்தல் |
நிறுவனர் | முகமது அலி பாஷா |
இறுதி ஆட்சியர் | இரண்டாம் புவாத் |
தற்போதைய தலைவர் | இரண்டாம் புவாத் |
முடிவுற்ற ஆண்டு | 1953: 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சிக்கு பின்பு முடியாட்சியை ரத்து செய்தல் |
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை சூடான் மற்றும் எகிப்தை ஆண்ட அரச வம்சமே முகமது அலி வம்சம்(அரபு மொழி: أسرة محمد علي உச்ராத் முகமது 'அலி ). நவீன எகிப்தை நிறுவியவராகக் கருதப்படும் முகமது அலி பாஷாவின் பெயரே இந்த வம்சத்துக்குச் சூட்டப்பட்டது. இந்த வம்சத்தை அலவிய்யா வம்சம் (அரபு மொழி: الأسرة العلوية அல்-உஸ்ரா அல்-'அலவிய்யா) என்றும் அழைத்தனர், ஆனால் இதனுடம் துளியும் சம்பந்தமில்லாத மொரோக்கொவை ஆளும் அலவிய்யா வம்சம்த்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதன் பல அரசர்கள் கேதிவே என்ற பட்டம் வைத்துகொண்டதனால்,இதனைத் தற்காலத்தவர் 'கேதிவல் வம்சம்' என்றும் அழைத்தார்கள்.