மீத்தைல் புரோப்பியோனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புரோப்பியோனேட்டு
| |
வேறு பெயர்கள்
புரோபனாயிக் அமிலம், மெத்தில் எசுத்தர்
புரோபியானிக் அமிலம், மெத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
554-12-1 | |
ChemSpider | 10653 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11124 |
| |
பண்புகள் | |
C4H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 88.11 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் [1] |
அடர்த்தி | 0.915 கி/மி.லி[1] |
உருகுநிலை | −88 °C (−126 °F; 185 K)[1] |
கொதிநிலை | 80 °C (176 °F; 353 K)[1] |
72 கி/லி (20 °C)[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | −2 °C (28 °F; 271 K)[1] |
Autoignition
temperature |
465 °C (869 °F; 738 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் புரோப்பியோனேட்டு (Methyl propionate) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் மெத்தில் புரோபனோயேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தெளிவான திரவநிலையில் உள்ள இச்சேர்மம் பழ நறுமணத்துடன் ரம் எனப்படும் போதைபானத்தின் நறுமணத்துடன் காணப்படுகிறது[2].
தயாரிப்பு
[தொகு]மெத்தனால் மற்றும் புரோபனாயிக் அமிலம் ஆகியவற்றை எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி மெத்தில் புரோப்பியோனேட்டு தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிக்கல் கார்பனைல் முன்னிலையில் எத்திலீனுடன் கார்பன் மோனாக்சைடையும் மெத்தனாலையும் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்[3].
பயன்கள்
[தொகு]செல்லுலோசு நைட்ரேட்டு மற்றும் அரக்கு முதலானவற்றை கரைக்க உதவும் கரைப்பானாக மெத்தில் புரோப்பியோனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சாயங்கள், மெருகுவண்ணங்கள் மற்றும் மெத்தில் மெத்தாகிரைலேட்டு போன்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருளாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது[2][3].
பழத்தின் சுவையுடைய காரணத்தால் இதை நறுமணமூட்டியாகவும் நறுஞ்சுவையூட்டியாகவும் பயன்படுத்துகிறார்கள்[2][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 2.0 2.1 2.2 Methyl Propionate Hazardous Substance Fact Sheet. New Jersey Department of Health and Senior Services. http://nj.gov/health/eoh/rtkweb/documents/fs/1290.pdf.
- ↑ 3.0 3.1 Ulf-Rainer Samel, Walter Kohler, Armin Otto Gamer and Ullrich Keuser (2000). Propionic Acid and Derivatives. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_223.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527306732.
{{cite book}}
:|work=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link)(mayth and yafs) - ↑ "Methyl propionate". thegoodscentscompany.com.