உள்ளடக்கத்துக்குச் செல்

மீத்தைல் பியூட்டைரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் பியூட்டைரேட்டு
methyl butyrate[1]
Methyl butanoate
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் பியூட்டனோயேட்டு
வேறு பெயர்கள்
பியூட்டனாயிக் அமில மெத்தில் எசுத்தர்
மெத்தில் பியூட்டைரேட்டு
பியூட்டைரிக் அமில மெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
623-42-7 Y
ChemSpider 11680 N
EC number 210-792-1
InChI
  • InChI=1S/C5H10O2/c1-3-4-5(6)7-2/h3-4H2,1-2H3 N
    Key: UUIQMZJEGPQKFD-UHFFFAOYSA-N N
  • InChI=1/C5H10O2/c1-3-4-5(6)7-2/h3-4H2,1-2H3
    Key: UUIQMZJEGPQKFD-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C043811
பப்கெம் 12180
வே.ந.வி.ப எண் ET5500000
  • CCCC(=O)OC
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.13 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.898 கி/செ.மீ3
உருகுநிலை −95 °C (−139 °F; 178 K)
கொதிநிலை 102 °C (216 °F; 375 K)
1.5 கி/100 மி.லி (22 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.386
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 12 °C (54 °F; 285 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மெத்தில் பியூட்டைரேட்டு (Methyl butyrate) என்பது C5H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டைரிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தரான இந்த எசுத்தர் சேர்மம் மெத்தில் பியூட்டனோயேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிற எசுத்தர்களைப் போல பழச்சுவையுடன் காணப்படும் மெத்தில் பியூட்டைரேட்டு, ஆப்பிள் அல்லது அன்னாசிப் பழத்தின் இனிப்பு வாசனையை வெளிப்படுத்துகிறது [2]. அறை வெப்பநிலையில் நிறமற்றதாகவும் தண்ணிரில் சிறிதளவே கரையக்கூடிய நீர்மமான இச்சேர்மம், தண்ணிரின் மேல் எண்ணெய்ப்பசையுள்ள ஒர் அடுக்காக மிதக்கிறது. தீப்பிடித்து எரியக்கூடிய சேர்மமாக இருப்பினும் 30 பாகை செல்சியசு வெப்பநிலையில் 40 மி.மீHg ஆவியழுத்தம் கொண்டிருக்கிறது. எனவே, மெத்தில் பியூட்டைரேட்டை அறைவெப்பநிலையில் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் [3].

தாவரப் பொருட்களில், குறிப்பாக அன்னாசிப் பழத்தில் மெத்தில் பியூட்டைரேட்டு சிறிதளவு காணப்படுகிறது [4]. தாவர எண்ணெய்களை காய்ச்சிவடித்தல் மூலம் இதைத் தயாரிக்கமுடியும். வாசனைப் பொருளாகவும் [5], உணவுக்கு நறுமணம் சேர்க்கும் பொருளாகவும் பயன்படுவதால், மெத்தில் பியூட்டைரேட்டை பெருமளவில் தயாரிக்கிறார்கள்.

பயோடீசலில் [6] காணப்படும் பெரிய கொழுப்பு அமில மெத்தில் எஸ்டர்களை எரிப்பதற்கான ஒரு துணை எரிபொருள் கூறாக எரிபொருள் ஆய்வுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், குறுகிய சங்கிலி நீளம், எரிபொருள்களின் எதிர் வெப்பநிலைக் குணகத்தை நன்கு உற்பத்தி செய்யாமைப் பண்பு, ஆரம்பத்திலேயே CO2 உருவாக்கம் போன்ற தன்மைகளால் மெத்தில் பியூட்டைரேட்டு ஒரு பொருத்தமற்ற பயோடீசல் துணை எரிபொருளாகக் கருதப்படுகிறது [7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Merck Index, 13th Edition
  2. Methyl butyrate, thegoodscentscompany.com
  3. Aldrich Chemicals Handbook, Sigma-Aldrich Company, Milwaukee, (2007)
  4. Flath, Robert A.; Forrey, R. R. (1970). "Volatile components of Smooth Cayenne pineapple". Journal of Agricultural and Food Chemistry 18 (2): 306–309. doi:10.1021/jf60168a018. 
  5. "Use of methyl butyrate as an additive in perfume". Archived from the original on 2008-05-31. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
  6. "Methyl butyrate as a component of biodiesel". Archived from the original on 2006-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
  7. Gaïl, S.; Thomson, M.J.; Sarathy, S.M.; Syed, S.A.; Dagaut, P.; Diévart, P.; Marchese, A.J.; Dryer, F.L. (2007). "A wide-ranging kinetic modeling study of methyl butanoate combustion". Proceedings of the Combustion Institute 31: 305. doi:10.1016/j.proci.2006.08.051.