மினாஸ் ஜெரைசு
மினாஸ் ஜெரைசு | |
---|---|
குறிக்கோளுரை: லிபர்டாசு கெ செரா டாமன் (இலத்தீன்) "தாமதமானாலாலும் விடுதலை" | |
பிரேசிலில் மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
தலைநகரமும் மெரும் நகரமும் | பெலோ அரிசாஞ்ச் |
அரசு | |
• ஆளுநர் | அன்டானியோ அனசுதாசியா (பிரேசிலிய சமூக சனநாயக கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,86,528.29 km2 (2,26,459.84 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4th |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 1,98,55,332 |
• தரவரிசை | 2nd |
• அடர்த்தி | 34/km2 (88/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 14th |
இனம் | Mineiro |
GDP | |
• Year | 2010 estimate |
• Total | R$ 351,381,000,000 (3rd) |
• Per capita | R$ 17,931 (10th) |
HDI | |
• Year | 2008 |
• Category | 0.825 – high (9th) |
நேர வலயம் | ஒசநே-3 (BRT) |
• கோடை (பசேநே) | ஒசநே-2 (BRST) |
அஞ்சல் கோடு | 30000-000 - 39990-000 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BR-MG |
இணையதளம் | mg.gov.br |
மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈminɐz ʒeˈɾajs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். மக்கட்தொகைப்படி நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாகவும் பரப்பளவில் நான்காவதாகவும் விளங்குகிறது. இதன் தலைநகரமும் பெரிய நகரமுமான பெலோ அரிசாஞ்ச் இலத்தீன் அமெரிக்காவிலேயே முதன்மையான ஊரக மற்றும் நிதிய மையமாக விளங்குகிறது. மேலும் இந்நகரம் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ, சவ்வாதோர், பிரசிலியா மற்றும் போர்த்தலேசாவை அடுத்து ஆறாவது மிகப்பெரிய ஊரககுடியிருப்புத் தொகுதியாக உள்ளது. 5,500,000 மக்கள் வாழும் பெருநகர் பகுதி சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ நகரங்களை அடுத்து மூன்றாவதாக உள்ளது.[2] பெலோ அரிசாஞ்ச்சில் பிறந்த பிரேசிலின் தற்போதைய தலைவர் டில்மா ரூசெஃப் உட்பட பிரேசிலின் பெரும்பாலான குடியரசுத் தலைவர்கள் இந்த மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.
586,528 சதுர கிலோமீட்டர்கள் (226,460 sq mi) பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. காப்பி மற்றும் பால் (பானம்) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த கட்டிடக்கலை மற்றும் குடியேற்றவாத கலைகளின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.
புவியியல்
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Instituto Brasileiro de Geografia e Estatística". IBGE. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.
- ↑ "Sala de imprensa | notícias | IBGE divulga as estimativas populacionais dos municípios em 2012". IBGE. பார்க்கப்பட்ட நாள் 2013-06-08.