உள்ளடக்கத்துக்குச் செல்

மாலியேக்கல் மாரியும்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலியேக்கல் மாரியும்மா
Maliyekkal Mariyumma
2009 ஆம் ஆண்டில் மாரியும்மா
பிறப்பு1925
கேரளா, இந்தியா
இறப்பு5 ஆகத்து 2022
தேசியம்இந்தியர்
பிள்ளைகள்4

மாலியேக்கல் மாரியும்மா (Maliyekkal Mariyumma) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி ஆவார். மாரியும்மா மாயனாலி என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1925 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். கேரளாவில் பெண்களின் முன்னேற்ற வரலாற்றில் முக்கியமான ஈடுபட்ட அளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2] வடக்கு கேரளாவில் ஆங்கிலக் கல்வியைப் பெற்ற முதல் இசுலாமியப் பெண்மணி மாலியேக்கல் மாரியும்மா என்பது இவருடைய சிறப்பாகும்.[3] இவரது காலத்தில் இசுலாமிய ம் சமூகம் பொதுக் கல்விக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, தலச்சேரி மாலியேக்கல் குடும்பத்தைச் சேர்ந்த மரியும்மா, ஓர் ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இது தற்போதைய பத்தாம் வகுப்பிற்கு சமம் ஆகும். இங்குதான் மாரியும்மா ஆங்கிலம் கற்றார்.[1] மகளிர் சங்கத்தை உருவாக்கியதற்காகவும் அறியப்பட்ட இவர், இந்தியாவில் இன்னும் தொடர்ந்து இருக்கும் வரதட்சணை முறைக்கு எதிராகப் போராடினார்.[4][5]

வாழ்க்கை

[தொகு]

1925 ஆம் ஆண்டில் மஞ்சுமா மற்றும் இசுலாமிய சமூகத் தலைவரான ஓ. வி. அப்துல்லா தம்பதியருக்கு மகளாக மாலியேக்கல் மரியம்மா பிறந்தார். இவரது தந்தை ஓ. வி. அப்துல்லா ஆறு மொழிகளில் பேசும் வல்லமை கொண்டவராவார். இவரது பெற்றோர் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட கிலாபத் இயக்கத்தில் பங்கேற்றனர். இசுலாமியப் பெண்கள் கல்வித் துறையில் மிகவும் பின்தங்கியிருந்த அக்காலத்தில் இவர் ஓர் ஆங்கிலவழிப் பள்ளியில் ஆங்கிலம் படித்தார்.[6] மாலியேக்கல் மாரியும்மா 1938 ஆம் ஆண்டில் மங்களூரில் கிறித்துவ கன்னிகையர்களால் நடத்தப்படும் தலச்சேரி தூயநெஞ்சப் பள்ளியில் சேர்ந்தார். இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். இது தற்காலத்திய பத்தம் வகுப்பிற்கு இணையான படிப்பாகும்.[7] பள்ளியில் அப்போது படித்துக் கொண்டிருந்த 200 மாணவர்களில் இவர் மட்டுமே ஒரே இசுலாமியப் பெண் ஆவார். 1943 ஆம் ஆண்டில் திருமணம் நடக்கும் வரை இவர் பள்ளிக்குச் சென்றார்.[8] பின்னர், இவர் கர்ப்பமாக இருந்தபோது, வீட்டில் இருந்தபடியே படிக்கத் தொடங்கினார். மேலும் சமூக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். மரியும்மா ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார்.[9] சிந்தனையில் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்த மரியும்மா, பெண்களின், குறிப்பாக இசுலாமியச் சமூகத்தின் பெண்கள் மேம்பாட்டிற்காக சில முக்கியமான முன்னெடுப்புகளைச் செய்தார். மரியும்மா தலைமையில் நிறுவப்பட்ட மகளிர் சங்கம் பெண்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டது.[10] தனது இறுதி நாட்களில், மரியும்மா தி இந்து என்ற ஆங்கில செய்தித்தாளைப் படித்தார்.

1930 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலம் கற்க முடிவு செய்து, சமூகத்தில் உள்ள மரபுவழிப் பிரிவினரைத் துணிச்சலுடன் எதிர்த்த மாளியேக்கல் மரியும்மா, வயது தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரியில் 97 வயதில் காலமானார்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 News9 Staff (2022-08-06). "Maliyekkal Mariyumma, icon of girls education in Kerala, no more". NEWS9LIVE (in ஆங்கிலம்). Retrieved 2023-01-09.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "Maliyekkal Mariyumma, the first Muslim woman in North Kerala to get English education, dies at 95". The Indian Express (in ஆங்கிலம்). 2022-08-06. Retrieved 2023-01-09.
  3. "At 85, the full joys of a lettered life" (in en-IN). The Hindu. 2012-09-30. https://www.thehindu.com/news/national/kerala/At-85-the-full-joys-of-a-lettered-life/article12540198.ece. 
  4. "പൊരുതി നേടിയഅക്ഷര പ്രകാശമണഞ്ഞു...മാളിയേക്കൽ മറിയുമ്മ ഇനി ചരിത്രം'ഇംഗ്ലീഷ് മറിയുമ്മ'യ്ക്ക് നാടിന്റെ അന്ത്യാഞ്ജലി - Kannadiparamba Online News" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-05. Retrieved 2023-01-09.
  5. "Column | Why Malayalis need to record oral histories". OnManorama. Retrieved 2023-01-09.
  6. "Maliyekkal Mariyumma, first Muslim woman in Kerala to learn English no more". The New Indian Express. Retrieved 2023-01-09.
  7. The, Desk (10 August 2022). "യാഥാത്ഥികതയോട് പൊരുതി ഇംഗ്ലീഷ് വിദ്യാഭ്യാസം നേടി; സ്ത്രീകൾക്ക് വേണ്ടി നിരന്ത്രം പോരാടി, മാളിയേക്കല്‍ മറിയുമ്മ ഇനി ഓർമ്മ". Samayam Malayalam (in மலையாளம்). {{cite web}}: |first= has generic name (help)
  8. K, ഹാഫിസ് (12 March 2013). "ഇംഗ്ലീഷ് മറിയുമ്മ". മാധ്യമം: pp. 4, 5. 
  9. "മാളിയേക്കൽ മറിയുമ്മ വിദ്യാഭ്യാസത്തിലൂടെ വിപ്ലവം നടത്തിയ വനിത- പി. ജയരാജൻ". Mathrubhumi (in ஆங்கிலம்). Retrieved 2023-01-09.
  10. ഡെസ്ക്, വെബ്. "മാളിയേക്കല്‍ മറിയുമ്മ ഓര്‍മ്മയാകുമ്പോള്‍". The Fourth (in மலையாளம்). Retrieved 2023-01-09.
  11. "വയസ്സ് 90 ; രാവിലെ ഉണർന്നാൽ ഇംഗ്ലീഷ് പത്രം നിർബന്ധം, പാചകത്തിലും ബഹുകേമി". ManoramaOnline. Retrieved 2023-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலியேக்கல்_மாரியும்மா&oldid=4213383" இலிருந்து மீள்விக்கப்பட்டது