மலைக்கோட்டை அரண்மனை
மலைக்கோட்டை அரண்மனை | |
---|---|
1930களில் அரண்மனையின் தோற்றம்s | |
முந்திய பெயர்கள் | ரிட்ஸ் ஹோட்டல் (1980-1997) |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரச அரண்மனை |
இடம் | நௌபத் பகாட், ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
நிறைவுற்றது | 1915 |
உரிமையாளர் | தெலங்காணா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
க்காக கட்டப்பட்டது | நிசாமத் சங் |
மூலமுதலான பயன்பாடு | நிசாமத் சங்கின் வசிப்பிடம் (1915-1929) இளவரசர் மோசம் சாவின் குடியிருப்பு (1929-1955) ஒரு சொகுசு விடுதி (1980-1997) |
மலைகோட்டை அரண்மனை (Hill Fort Palace) ரிட்ஸ் ஹோட்டல் என்றும் அழைக்கப்படும் இது தெலங்காணா மாநிலம் ஐதராபாத்திலுள்ள நௌபத் பகாட்டில் அமைந்துள்ள ஒரு அரச அரண்மனை ஆகும். சொத்து இப்போது தெலங்காணா அரசின் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமானது..[1][2][3]
வரலாறு
[தொகு]குடியிருப்பு (1915-1955)
[தொகு]மலைக்கோட்டை அரண்மனை 1915 இல் இந்தியாவின் நிசாம் அரசாங்கத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நிசாமத் சங் என்பவரால் கட்டப்பட்டது. அவர் அரண்மனையில் 15 ஆண்டுகள் தங்கியிருந்தார். கேம்பிரிட்சிலுள்ள திரினிட்டி கல்லூரியின் பாணியில் கட்டிடக்கலை உள்ளது.[4][3]
1929 இல், சங் ஹஜ் சென்று வந்த பிறகு எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பினார். இந்த அரண்மனை ஓசுமான் அலி கானின் மகன் இளவரசர் மோசாம் சாவுக்கு விற்கப்பட்டது, பின்னர் நகர மேம்பாட்டு வாரியத்தின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியது.
அரசு கையகப்படுத்துதல் மற்றும் ரிட்ஸ் ஹோட்டல் (1955-1997)
[தொகு]1955 ஆம் ஆண்டு போலோ நடவடிக்கைக்குப் பிறகு இந்த அரண்மானை இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. ரிட்ஸ் ஹோட்டல் நிறுவனம் 1980களில் அரண்மனையை குத்தகைக்கு எடுத்தது. இந்த விடுதி 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை செயல்பட்டு வந்தது.[5][6]
கைவிடப்பட்டது (1997-தற்போது)
[தொகு]இன்று, கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், அவசரமாக சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது.[7][8]
2022 இல், ஒரு நிபுணர் குழு, அரண்மனையை இடிக்க பரிந்துரைக்கும் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.[9][10] பொதுநல வழக்கின் தீர்ப்பில், அரண்மனையை சீரமைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[11]
அமைவிடம்
[தொகு]இந்த அரண்மனை நகரின் மையப்பகுதியில் நௌபத் பஹாட் அருகே 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. S., Rohit (5 April 2014). "Hill Fort Palace to regain past glory". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 August 2014.
- ↑ Hill Fort Palace : MIT Libraries
- ↑ 3.0 3.1 Dundoo, Sangeetha Devi (2015-11-23). "The space has a story to tell" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/metroplus/the-space-has-a-story-to-tell/article7908614.ece.
- ↑ PHOTOS: Hyderabad's 100-Year-Old Hill Fort Palace Is Now A Prospective Art Gallery
- ↑ "Once famous Ritz Hotel of Hyderabad now turns into a shooting location for films". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
- ↑ "A walter scott castle, sliver of Nizami times". The New Indian Express. http://www.newindianexpress.com/lifestyle/travel/2017/sep/02/a-walter-scott-castle-sliver-of-nizami-times-1650817.html.
- ↑ "PHOTOS: Hyderabad's 100-Year-Old Hill Fort Palace is Now a Prospective Art Gallery". 2016-04-12.
- ↑ Pisharody, Rahul V. "Historical Hill Fort Palace hopes to reclaim its past glory". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/2017/jul/31/historical-hill-fort-palace-hopes-to-reclaim-its-past-glory-1636047.html.
- ↑ "Hill Fort Palace in Hyderabad can be restored: INTACH". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-05-27.
- ↑ Tomar, Ajay (2023-05-04). "Hill Fort Palace, Zenana demolition: Telangana government targeting heritage buildings irks conservationists". The South First (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-27.
- ↑ "Begin Hill Fort palace restoration works: HC" (in en-IN). The Hindu. 2022-05-01. https://www.thehindu.com/news/national/telangana/begin-hill-fort-palace-restoration-works-hc/article65371045.ece.
- ↑ "Historians and Heritage Activists aims to restore Historic Hillfort Palace in Hyderabad" இம் மூலத்தில் இருந்து 11 ஜூன் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200611162449/https://www.therahnuma.com/historians-and-heritage-activists-aims-to-restore-historic-hillfort-palace-in-hyderabad/. பார்த்த நாள்: 11 June 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]