உள்ளடக்கத்துக்குச் செல்

நிசாமத் சங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவாப் சர்
நிசாமத் சங்
தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1916-1918
பின்னவர்மீர்சா யார் சங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1871-04-22)ஏப்ரல் 22, 1871
இறப்பு1955 (அகவை 83–84)
பெற்றோர்இரபத் யார் சங்
வாழிடம்மலைக்கோட்டை அரண்மனை
முன்னாள் கல்லூரிதிரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

நவாப் சர் நிசாமத் சங் பகதூர் (Nawab Sir Nizamat Jung Bahadur) (22 ஏப்ரல் 1871 ஐதராபாத் மாநிலம் [1][2] – 1955[3]) ஓர் அரபு-இந்தியக் கவிஞர் ஆவார். இவர், மறைந்த நவாப் ரபத் யார் சங் பகதூர் (மௌல்வி சேக் அக்மத் உசைன்), வாரங்கலின் சுபேதாரின் இரண்டாவது மகன் ஆவார். இவருடைய நாட்களில் ஒரு தீவிர கல்வியாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் மற்றும் அரசியல்வாதியாகயும் அறியப்பட்டவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நவாப் சர் நிசாமத் சங், 1878 இல் தனது தந்தையால் நிறுவப்பட்ட மதரச-இ-அய்சா என்ற பள்ளியில் கல்வி பயின்றார். மேலும் 1887 இல் இங்கிலாந்துக்குச் சென்று , கேம்பிரிட்சில் உள்ள திரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, இளங்கலை மற்றும் சட்டப் பட்டங்களைப் பெற்றார். பின்னர் இவர் ஒரு பார் அட் லா ஆனார், 1895 ஆம் ஆண்டில் இரண்டாவது முறை இங்கிலாந்து சென்றபோது இங்கிலாந்தின் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு சென்றுவந்தார்.

தொழில்

[தொகு]

1896 இல், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1897ல் பர்பானி, மாவட்ட நீதிபதியாக பணியில் சேர்ந்தார்.[4]

1899 இல், இவர் நகர மாஜிஸ்திரேட்டாகவும், 1906 இல் சட்டமன்றத் துறையின் துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 1916 மற்றும் 1918 க்கு இடையில், இவர் ஐதராபாத் தலைமை நீதிபதியாக இருந்தார்.[4]

பல மதிப்புமிக்க பதவிகளின் அதிகாரியாக பணியாற்றிய இவர், அமைச்சராகவும், நிசாம்களின் ஆட்சியின் போது ஐதராபாத் தக்காண உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

நிசாமுதீன், நௌபத் பகாத்தில் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டினார். பின்னர் அதை முன்னாள் நிசாம் ஓசுமான் அலி கான் தனது மகன் இளவரசர் மோசம் சா என்பவருக்காக வாங்கினார். நிசாமுதீனின் முதல் உறவினர் அக்கீம்-உத்-தௌலா என்பவரும் தலைமை நீதிபதியாக இருந்தார். மேலும் மலைக்கோட்டை அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள பெல்லா விஸ்டா அரண்மனையின் உரிமையாளராக இருந்தார்.

கௌரவங்கள்

[தொகு]
  • இங்கிலாந்து பேரரசின் ஆணை (OBE, 3 ஜூன் 1919)[2]
  • இந்தியப் பேரரசின் ஆணை(CIE, 1 ஜனவரி 1924)[2]
  • வீரத்திருத்தகை, 3 ஜூன் 1929. [2]

மரபு

[தொகு]

1972 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள நாராயண்குடாவில் இவரது பெயரில் நிசாமத் சங் நினைவு நூலகம் நிறுவப்பட்டது. இதில் இவரது தனிப்பட்ட புத்தகத் தொகுப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fraser, Richard Charles (1917). "Foreword". Sonnets by the Nawab Nizamat Jung Bahadur.
  2. 2.0 2.1 2.2 2.3 Hyderabad State. (1937). List Of Leading Officials Nobles And Personages. Osmania University, Digital Library Of India. Hyderabad Residency Government Press. pp. 24–25.
  3. Sevea, Iqbal Singh (29 June 2012). The Political Philosophy of Muhammad Iqbal: Islam and Nationalism in Late Colonial India. Cambridge University Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107008861.
  4. 4.0 4.1 Not Available (1936). 1936 Hyderabad Directory. p. 240.
  5. Akula, AuthorYuvraj. "Nizamat Jung Memorial Library to get a facelift". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-28.
  6. "Wakf Board takes possession of Sir Nizamat Jung wakf property". The Siasat Daily - Archive (in அமெரிக்க ஆங்கிலம்). 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-09-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாமத்_சங்&oldid=3854254" இலிருந்து மீள்விக்கப்பட்டது